Wednesday, April 19, 2017

PUTHAN PANAM( மலையாளம்) - சினிமா விமர்சனம்

Image result for puthan panam

ஹீரோ நம்ம அழகிரி மாதிரி அரசியல் செல்வாக்கு உள்ள தாதா, கட்டப்பஞ்சாயத்து ,அடிதடி இதுலதான் பொழப்பு ஓடுது. கூட்டாளி கூட பிரச்னை , ஓபிஎஸ் போல் பிரிஞ்சு போக முடிவு பண்ணி  தன் பங்கை கேட்கறார். இதோ அதோ -ன்னு நாட்களைக்கடத்தும் கூட்டாளி கரெக்டா நவம்பர் 8 ம் தேதி  25 கோடியை  கேஷா தந்துடறார். 

மோடி  500 ரூ , 1000 ரூ செல்லாதுன்னு நைட் அறிவிக்க இருப்பது இவருக்கு அமித்ஷா போல் முன் கூட்டியே தெரிஞ்சிடுது,  அதனால தன்னோட குறுக்கு புத்தியை ( கலைஞர் பாஷைல சொல்லனும்னா சாணக்கியத்தனம் ) யூஸ் பண்ணி செட்டில் பண்றார்

 விடுவாரா ஹீரோ. மிரட்றதுக்காக தன் அடியாட்களோட  பார்ட்னர் கம் எக்ஸ் மினிஸ்டர்  வீட்டுக்குப்போறார் அங்கே நடக்கும்  அடிதடில தவறுதலா பார்ட்னர் கொலை செய்யப்ப்டறார் , சசிகலா ஜெ வை போட்டுத்தள்ளுன மாதிரி.


 இந்த கொலை கேசில் இருந்து தப்பிக்க ஹீரோ செய்யும் தகிடுதித்தங்கள் தான் மிச்ச மீதி கதை 


ஆர் கே செல்வமணி மாதிரி கரண்ட் மேட்டரை கையில் எடுத்த டைரக்டர் பிரமாதமா திரைக்கதை அமைச்சிருக்காரு. மம்முட்டி கால்ஷீட் பிரச்சனையா , என்னவோ தெரில பின் பாதில திரைக்கதை தடுமாறுது. ஹீரோ வை விட்டு விலகி சம்பந்தம் இல்லாம துப்பாக்கி , பொடிப்பையன், அவன் அம்மா அப்டி கதை போகுது


 ஹீரோவா மெகா ஸ்டார் மம்முட்டி.. இவர் நடிப்பைப்பற்றி சொல்லவே வேணாம். வெரிகுட் ஆக்டிங்க். கெட்டப் வயசுக்கேத்த மாதிரி . டூயட் சீன் இல்லை நல்ல வேளை

 கமிஷனர் வீட்டு பணீப்பெண்ணாக இனியா தமிழ்ப்பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். திரைக்கதையில்  இவருக்கு அதீத முக்கியத்துவம் வலிய தரப்பட்டிருக்கு

அந்த பொடிப்பையன் நடிப்பு கரெக்ட் மேட்சிங் 


சாய் குமார்  பார்னர் ரோல் , கன கச்சிதம்


இசை , பிஜிஎம் ஒளிப்பதிவு , டெக்னிக்கல் அம்சங்கள் சராசரி தரம்

Image result for iniya


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1  தன் பேரில் லைன்சன்ஸ் எடுத்த துப்பாக்கியை ஹீரோ அசல்ட்டாக அடியாளிடம்  கொடுப்பது எப்படி? சும்மா கத்தியை காட்டி மிரட்னா போதாதா?  பின்னாளில் கேசில் தான் மாட்டுவோம்னு தெரியாதா?


2   பெரிய பெரிய ஆட்களிடம் தண்ணி காட்டும் ஹீரோ அந்த சின்னப்பையனிடம் பம்முவது ஏன்?  சும்மா ஒரு மிரட்டு மிரட்டி அப்பவே துப்பாக்கியை வாங்கி  இருக்கலாமே? 


3  ஓப்பனிங் சீனில்  இனியா , குடிகாரன் காட்சி அநியாயத்துக்கு நீளம் ,  பட கதைக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை

4  லேடி கமிஷனர் வீட்டில் வேலை பார்க்கும் இனியா தன்னிடம் அக்கா போல் பழகும் கமிஷனரிடம் தன் மகன் துப்பாக்கி வைத்திருக்கும் மேட்டரை ஏன் சொல்லவில்லை ?


5   கதை ஒரே நேர்கோட்டில் ஹீரோ வின் பார்வையில் பயணிக்காமல் 3 வெவ்வேறு  ட்ராக்குகளில் ராஜேஷ் குமார் நாவல் போல் அலைக்கழிப்பது ஏனோ>?

Image result for iniya

நச் டயலாக்ஸ்

1  நீ என்ன எழுதனும்னு  நினைக்கிறாயோ அதை நீயே எழுது.படைப்பாளன் கற பெருமை கிடைக்கும், கோஸ்ட் ரைட்டர் பிஸ்னெஸ் வேணாம்  #PUTHAN PANAM (THE NEW INDIAN RUPEE)


வேட்டைக்குப்போறவனுக்கு ஒரு கண்ணு வேட்டை ஆடப்போற விலங்கு மீதும் இன்னொரு கண்ணு தன்னோட பாதுகாப்பிலும் இருக்கனும்
#PUTHAN PANAM( மலையாளம்)

கூட இருப்பவனை எப்பவும் நம்பனும்,எப்பவும், யாரையும் நம்பாம இருக்க நீ என்ன அரசியல்வாதியா? PANAM( மலையாளம்)

4 நீங்க தேடிட்டு வந்த சுந்தரி இவங்க தான்

சுமார் ஃபிகரா இருக்கு, சுந்தரிங்கறே?
யோவ், பேரே சுந்தரிதான் #PUTHANPANAM( மலையாளம்)5 நவம்பர் 8 க்கு முன் இந்த 500 ரூ , 1000 ரூ நோட்டோட மதிப்பு என்ன? இப்போ அதனோட நிலைமை என்ன? இப்டித்தான் மனித வாழ்வும் ( மலையாளம்)
Image result for iniya

 சி.பி கமெண்ட் - PANAM( மலையாளம்) -முன் பாதி விறுவிறுப்பான நோட்டு தடை திரைக்கதை , பின் பாதி திசை மாறிய தடுமாற்றம், மம்முட்டிக்கு சராசரி ஹிட்  ரேட்டிங் - 2.75 / 5

0 comments: