Tuesday, April 18, 2017

நயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன். -சரவணா ஸ்டோர் உரிமையாளர்


==========
தமிழகத்தில் பா.ஜ.,வால் காலூன்ற முடியாது: ஸ்டாலின் # போற போக்கைப்பார்த்தா நமக்கும் அந்த நிலைமை தான் போல

=================

RK.நகர் தொகுதி என்ற மணப்பெண்ணுக்கு, மாப்பிள்ளை, தினகரன் தான்-ஆர்.எம்.டி.ரவீந்திர ஜெயன் # தாலி கட்றதுக்குள்ளே மாப்ளை ஜெயிலுக்குப்போய்டுவார் போலயே


=====================2 நாட்கள் கூலித் தொழிலாளியாக பணிபுரிய உள்ளேன் - தெலுங்கானா முதலவர் சந்திரசேகரராவ் #  பிரேக்கிங்   நியூஸ்ல இடம் பிடிக்க விதம் விதமா யோசிக்கறாங்க====================

அதிகளவு பணபயன்பாடு அதிக பிரச்னையை ஏற்படுத்தும் -மோடி # அதுக்காக பணத்தை முடக்கிட்டா பிரச்சனை பெருசாகாதா ஜி?


====================


அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை' என கூறி, திருப்பூரில் ஆளுங்கட்சி MLA, 8 AM TO 11 AM உண்ணாவிரதம் # ஆளாளுக்கு கலைஞர் ஃபார்முலாவை ஃபாலோ பண்ணினா எப்டி?=====================

6  அனைத்துக் கட்சி கூட்டம் ஆட்சி மாற்றத்துக்கான கூட்டமல்ல -

ஸ்டாலின் # பாகுபலி பாகம் 10 வந்தாக்கூட அது மட்டும் நடக்காது போல====================


கட்சிக்குள் என்னை யாரும் எதிர்க்கவில்லை: டிடிவி தினகரன் # எதிர்க்கறவங்க எல்லாம் கட்சியை விட்டு வெளில போய் எதிர்க்கறாங்க என பொருள் கொள்க


==================

டாஸ்மாக் மதுபான கடைகளை சுடுகாட்டில் துவக்கலாம்.. வசந்தகுமார் பலே ஐடியா # தூக்கிட்டுப்போக 4 பேர் தேவை இல்லை, குடிகாரனே போய் படுத்துக்கலாம்


================


9 பாஜக நீட்டும் குச்சிக்கு பல்டி அடிக்கும் வருமான வரித்துறை - நமது எம்ஜிஆர் சாடல் # அது உண்மையாவே இருந்தாலும் திருடன் தானே போலீசுக்கு பயப்படனும்?நமக்கு ஏன் காண்டாகுது?

====================

10 சேலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு
காவல்துறை கயிறு கட்டி ரசிகர்களை கட்டுப்படுத்தியது # போலீசுக்கு பொறுப்பான வேலை

===================11 8ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு# 1ப்ராத்மிக்

2மத்யமா
3ராஷ்ட்ரபாஷா
4ப்ரவேசிகா,
5.விஷாரத் பூர்வத்
6, விஷாரத் உத்தராத்,
7 ப்ரவீன் பூர்வத்
.8ப்ரவீன் உத்தரார்த்


இப்டி வருசா வருசம் ஒரு எக்சாமா? பாவம் குழந்தைங்க===============12 கருப்புப் பண வேட்டை தொடங்கியது: 60 ஆயிரம் பேருக்கு வருமான வரித்துறை நோட்டீசு. போலீசை விட திருடனுங்கதான் பல மடங்கு ஜாஸ்தி போல================13 என்னை சிறந்த நடிகராக பாரதிராஜா ஏற்றுக்கொள்ளமாட்டார்-ரஜினி# இருந்தாலும் சூப்பர் ஸ்டார்.அவர் நடிகரா ஏத்துக்கிட்ட மகன் மனோஜ்?================14 கணவரை வீட்டை விட்டு வெளியேற்றிய தீபா!# பதவி ஆசை ,அரசியல் பாதை எவ்வளவு கெடுதல் பார்த்தீங்களா?==================15 திருமணமான பெண்கள் இனி கணவர் பெயரை பாஸ்போர்டில் சேர்க்க தேவையில்லை" -மோடி

# இதை பாலோ வின முதல் பெண் தீபாதான்.மாதவனை துரத்திட்டார்

================


16 சசிகலா-வின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம் # ரெய்டு பயமா?==============
17 நயன்தாராவுடன் ஹீரோவாக நடிப்பேன்.


-சரவணா ஸ்டோர் உரிமையாளர்
# சரவணா ஸ்டோர் பத்திரம்

=================

18 அனைத்துகட்சிகூட்டத்தை நடத்த DMKவுக்கு உரிமை இல்லை தமிழிசை#பேருக்குத்தான் அனைத்து கட்சி கூட்டம்.ஆனாDMKவை அணைத்து போகும் கட்சிக்கே இடம்

================

19 தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-வது இடம் # விவசாயிகள் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால்முதலிடம் கிடைக்கும் அபாயம்

================

20 பெண்களை விட ஆண்களே 2 மடங்கு அதிகம் தற்கொலை செய்து கொள்கின்றனர்- கனிமொழி #,அப்போ ஆண்கள் தான் வீக்கர் செக்ஸ்?

==================

0 comments: