Tuesday, April 04, 2017

"பேரழகன்"பட ஹீரோ சூர்யா தான் சிஎம் ஆகனும்!!

எம்.பி.க்கள் மற்ற தொழில்கள் செய்வதை தடை செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் # அரசு ஊழியர் வேற சைடு பிஸ்னெஸ் பண்ணக்கூடாதுன்னு விதி இருக்கே?அப்போ  எம் பி மட்டும் பண்ணலாமா?


=================

தமிழகத்திற்கு மட்டும் விவசாயக் கடன்களை தள்ளுபடிசெய்ய முடியாது: பொன். ராதா  # தாமரை இலைல நீர் ஒட்டாது, தாமரை-க்கு  தமிழ் நாட்டில் வெற்றி கிட்டாது


=================


சசிகலாவுக்கு மூன்று வேளையும், ஓசூரில் இருந்து அமைச்சர் வீட்டு சாப்பாடு # கேட்டா கர்நாடகா ஜெயில் சாப்பாடு ஒத்துக்கலைனு கர்நாடகத்தனமா ஒரு பதில் வெச்சிருப்பாங்களே?

==================

4 மூடப்பட்ட டாஸ்மாக் ஊழியர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்குக: ஸ்டாலின் # எங்கே போனாலும் தலைவர் கேட்டைப்போடறாரே?எல்லாம் கலைஞர் ட்ரெய்னிங்

==============

5 வடமாநில ஓட்டுநர்கள் தமிழகம் வருவதால் தான் மைல் கல்லில் ஹிந்தியில் பெயர் பலகை - பொன் ராதா # அப்போ நான் டெல்லி போனா அங்கே தமிழ்ப்பெயர் பலகை இருக்குமா? 


============================


6  திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி # லட்சுமி கடாட்சம் தான்
===========


7 தாணு ு அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் - விஷால் அதிரடி..# ஜெ ஆட்சிக்கு வந்ததும் நள்ளிரவில் கலைஞரை கைது செய்தது போல்

==========

8 ஒரே நாளில்ஹெல்மெட் போடாத 35000பேர் மீது வழக்குபதிவு # டாஸ்மாக்ல.விட்ட காசை இதுல பிடிச்சுடுவாங்க போல

=============

9 எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு ஓட்டு: வாக்கு பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு அம்பலம் #,அப்போ RKநகர் ல பணம் குடுததெல்லாம் வேஸ்ட்டா?

=============

10 ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் -அன்புமணி # வருவாரா?வரமாட்டாரா?ன்னு ரஜினிக்கே குழப்பமா இருக்காம்.இவருக்கு மட்டும் தெளிவா தெரியுமாம்

==============

11 விவசாயிகளின் நலன் கருதி புதிய அறிவிப்பு வெளியிடப்படும்: -விஷால் # அரசியலுக்கு வர அச்சாரம் போடறாரு.நல்லது நடந்தா சரி


==============

12 டாஸ்மாக் கடைகள் மூடல்,அரசுக்கு 11000 கோடி வருவாய் இழப்பு!
-செய்தி # எப்படியும் குடிகாரன் வேற கடைல வாங்கத்தானே போறான்? எப்டி இழப்பாகும்?

=============

13 மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை =GKவாசன் கவனிக்க வைப்பவன் தமிழன் கற GK அவங்களுக்கு இல்லை போல

=============

14 கவர்ந்திழுக்கும் பேரழகன் தினகரன்! -நாஞ்சில் சம்பத்!
"பேரழகன்"பட ஹீரோ சூர்யா தான் சிஎம் ஆகனும் கற ஏழாம் அறிவு எட்டனும்

==============

15 OPS ஒன்னும் உத்தமன் கிடையாது' - தீபாவின் கணவர் மாதவன் #,அப்போ அரசியல்ல ஜெயிக்க எல்லா தகுதியும்.அவருக்கு இருக்குன்றீங்களா?


=================

16 மதுக்கடைகள் மூடலால் 10 லட்சம் பேருக்கு வேலை இழப்பு - நிதி ஆயோக் தலைவர் கவலை # அவங்களை எல்லாம் விவசாயம் பண்ண சொல்லுங்க.நாட்டுக்கு நன்மை


==============

17 இந்த உலகில், யாராவது முதல்வர் பதவியை ஏற்க மறுப்பார்களா...? ஆனால், நான் மறுத்தேன்.-OPS # ஆனா 3 டைம் சி எம் ஆனீங்க, அது எப்படி?


==============

18  தி.மு.க.,வினர், வாக்காளர்களுக்கு சேலைகள் கொடுத்ததாக தகவல் வருகிறது. -தினகரன்:# அவங்க பழமைவாதிகள், நீங்க சுடிதார் ,மிடி , சுடி, ஜீன்ஸ் குடுங்க, ஜெயிச்சுட்லாம்

====================

19

 ரஜினிகாந்த் என்றுமே, பா.ஜ.,வின் குரலாக மாற மாட்டார்; அவர், கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்.- சி.மகேந்திரன் # வாட் டூ யூ மீன்?னு ரஜினி ரசிகர்கள் சண்டைக்கு வரப்போறாங்க


====================


20 

தீபாவிற்கு என் ஆதரவு இருக்கும்; அவருக்கு அமோக வெற்றி கிடைப்பது உறுதி.-தீபாவின் கணவர் மாதவன் # அதெப்பிடிங்க உங்க  ஒரு ஓட்டை வெச்சு அவர் அமோக வெற்றி அடைவார்?


======================


0 comments: