Sunday, April 16, 2017

கடம்பன் - சினிமா விமர்சனம்

Image result for kadamban

மேற்குத்தொ டர்ச்சி மலைல கடம்பவனம்-னு ஒரு ஏரியா - அங்கே 70 டூ 85 பேர் (  லோ பட்ஜெட் படம் போல )கொண்ட காட்டுவாசிகள் குடி இருக்காங்க . தேன் எடுப்பதுதான் இவங்க தொழில் . அங்கே ஒரு சிமெண்ட் ஃபேக்டரி கட்ட வில்லன் க்ரூப் வருது. இங்கே இருக்கும் ஆட்களை துரத்தி விட என்னென்ன சசிகலாத்தனம் , கலைஞர் தனம் பண்ண முடியுமோ அந்த நரி வேலைகளை எல்லாம் ( சாணக்கியத்தனம் ) செய்யறாங்க, ஹீரோ இருக்கும்போது அதெல்லாம் முடியுமா? என்ன ஆகுது என்பதுதான் மிச்ச மீதிக்கதை 


 ஹீரோவா ஆர்யா , பிரமாதமான உழைப்பு அவருது . விக்ரம் ரேஞ்ச்க்கு ஜிம் எல்லாம் போய் சிக்ஸ் பேக் எல்லாம் வெச்சு டார்ஜான் கணக்கா வந்து நிக்கறார். சிட்டி சப்ஜெக்ட் படத்துல நடிச்சாலே 2 ரீலுக்கு ஒரு டைம் சர்ட் கழட்டி ஜிம் பாடி காட்டுற மாடர்ன் ஹீரோக்கள் கொண்ட சினிமா வில் டார்ஜான் டைப் ரோல்னா எவ்ளோ ஜாலி , படம் பூரா டாப்லெஸ் தான் 


ஹீரோயின் கேத்ரீன் தெரேசா . ஷூட்டிங் ஸ்பாட் ல அம்மா கூடவே இருந்துச்சா? இல்லை பேசின பேமண்ட் தர்லையா தெரில படம் பூரா முழுக்க முழுக்க போர்த்திட்டு  ஒரு இஞ்ச் கூட கிளாமர் காட்டாம அநியாயத்துக்கு ரேவதி , நதியா , சுஹாசினி ரேஞ்ச்க்கு கண்ணியமா நடிச்சிருக்கார் , அவர் கண்ணியத்திலும் , கேமராமேனின் கண்ணியத்திலும் இடி விழ


ஒய் ஜி மகேந்திரன் கிட்டத்தட்ட சைடு வில்லன் ரோல் , ஓக்கே ரகம் , இப்பவெல்லாம் அவர் கூடவே தன் மகளையும் கூட்டிட்டு வந்துடறார். பாய் கட்டிங் பாப்பா . முடியல 


யுவன் சங்கர் ராஜா வின் இசையில் 2 பாட்டு தேறுது , பின்னணி இசை சுமார் 

 ஒளிப்பதிவு , லொக்கேசன் செலக்சன் பிரமாதம் 

 திரைக்கதை ரொம்ப ரொம்ப வீக்


Image result for kadamban

 சபாஷ் இயக்குநர் 


1   ஹீரோவை டார்ஜான் போல் பாடி தேத்த வைத்தது 


2   வன அழகை மிக பிரமாதமாக படம் பிடிக்க வைத்தது ,  ஒளிப்பதிவாளரிடம் வேலை வாங்கிய திறன்

3  படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கை மிக பிரமாதமாக தந்து எதிர்பார்ப்பை எகிற வைத்தது


Image result for catherine tresa


இயக்குநரிடம் சில கேள்விகள் ( லாஜிக் மிஸ்டேக்ஸ்) 


1  தேன் கூட்டில் தேன் எடுப்பதை பல கிராமங்களில் பார்த்திருக்கேன். தேனீக்கள் கொட்டாமல் இருக்க ஒரு சாக்குப்பையால் உடல் முழுக்க மூடி  ஒரு ஆள் தேன் கூட்டின் கீழ் தீப்பந்தம் காட்டுவாப்டி, நெருப்பின் சூட்டுக்கு தேனீக்கள் ஓடும் , சில கொட்ட வரும் , அதன் பின்  தான் தேன் கூட்டை எடுக்க முடியும் , காலங்கள் நவீன மயம் ஆன பின் தேனீக்கள்  நெருங்காத அளவு ஒரு வித எண்ணெயை உடம்பில்  பூசி பின் தேன் கூடு எடுக்க வ்ருவாங்க . இதுதான் நடைமுறை , ஆனா ஹீரோ  எந்த வித பாதுகாப்பு சாதனமும் இல்லாம அசால்ட்டா தேன் எடுக்கறார்

2  வில்லன்களை விரட்ட ஹீரோ க்ரூப் 100 க்கும் மேற்பட்ட லாரி டயர்களை மலையில் இருந்து உருட்டி விடறாங்க . லாரி பஞ்சர் பார்க்கும் ட்யூப் கடைல கூட அதிக பட்சம் 10 டயர் தான் இருக்கும் இவங்களுக்கு எப்டி அவ்ளோ டயர் கிடைச்சது ?

3  ஒரு சீன்ல  வீசப்பட்ட டைம் பாம் திரி எரிய வெடிக்க தயரா இருக்கு , அந்த இடத்தில் ஒரு கைக்குழந்தை , ஒரு 7 வயசுப்பையன் , ஒரு கர்ப்பிணிப்பெண் இருக்காங்க . அங்கே வரும் காட்டு வாசி அந்த 7 வயசுப்பையனை தூக்கி வானை நோக்கி எறியறார். பாம் வெடிச்சு மீதி 3 ஆளும் அவுட் , அவர் அந்த டைம்  பாமை தூக்கி எறிஞ்சிருந்தா எல்லாரும் தப்பி இருக்கலாமே? 

4  ஒரு சீன்ல புதை குழில சிக்கின வில்லன் ஆள் போலீசை ஹீரோ ரிஸ்க் எடுத்து காப்பாத்தறார். எதுக்குன்னுதான் தெரியல . அதுவும் எப்டி? புதை குழில விழுந்தவனை பொதுவா  அதன் அருகில் இருக்கும் மரத்தில் ஒரு கயிறு கட்டி அதன் மறு முனையை புதை குழியில் மாட்டினவன் கையில் தந்து இழுத்துதான் காப்பாத்துவாங்க , அதான் புரொசீஜர் , இதுல நம்பவே முடியாத கோணத்தில் ஹீரோ அசால்ட்டா காப்பாத்தறார்


5  வில்லன் எதுக்காக அந்த காட்டுவாசிகளை கொல்ல அவ்ளோ சிரமப்படறார் தெரிய்ல . அவங்க பாட்டுக்கு ஒரு ஓரமா  இருக்கட்டும் இவர் பாட்டுக்கு ஃபேக்டரி வேலையை ஆரம்பிக்கலாமே? ஃபேக்டரிக்கு கம்மி சம்பளத்துல ஆளுங்க கிடைச்ச மாதிரி யும் ஆச்சு

6  காட்டுக்குள் இருக்கும் ஹீரோயின்  எப்போதும் சீன்  பை சீன் பியூட்டி பார்லர் போய் வந்தது போல் செம மேக்கப்புடன் இருப்பது எப்படி? 

Image result for catherine tresa
நச் டயலாக்ஸ் 


1  ஹீரோயின் டூ ஹீரோ = தேன் கூட்டையே இந்த பிழி பிழியறியே.உன் கைல நான் சிக்கினேன் ஹூம் (U சர்ட்டிபிகேட் படமாம்)

2 டேய் கருவண்டு


நான் கருவண்டுன்னா நீ சில்வண்டா?
இல்ல.பொன் வண்டு


அந்த 2 பாம்புகளும் என்னய்யா பண்ணிட்டு இருக்கு?
பாம்பு ன்னு தெரியுது.என்ன பண்ணிட்டு இருக்குன்னு மட்டும் தெரியல?

வசதிங்கறது வாழ்க்கைத்தரத்தில் இல்ல.வாழும் முறைல இருக்குImage result for catherine tresa

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

பாதுகாப்பு உபகரணம் ஏதும் இல்லாமல் ,நெருப்பின் உதவி இல்லாமல் ஹீரோ ராட்சச தேன் கூட்டை அபகரிக்கிறார்.காதுல பூ

நீ என்னை கட்டிக்குவியா?மாட்டியா?இந்த டயலாக்கை மட்டும் ஹீரோயின் இது வரை13டைம் சொல்லிடுச்.

காட்டுவாசியா வர்ற ஹீரோ நண்டு பிராண்ட் லுங்கி கட்டி இருக்கார்.ஜாக்கி பிராண்ட் ஹை க்ளாஸ் பனியன் . ஜட்டி போட்டிருக்கார் / காட்டுவாசினி ஹீரோயின் இஸ்பேட் கிராஸ் கட்டிங் பேக் நெக் ஜாக்கெட் போட்டிருக்கு , ஏஞ்சல் ஃபோம் . வி ஸ்டார் ப்ராண்ட் ப்ரா போட்டிருக்கு

4 கடம்பன் இடைவேளை.மரண மொக்கைடா சாமி.வுடு ஜூட்சி.பி.கமெண்ட் - கடம்பன் -ஆர்யாவுக்கு ஒரு அட்டர் பிளாப் படம்.ஒளிப்பதிவு,லொக்கேசன் மட்டும் பிளஸ்.மத்ததெல்லாம் மைனஸ்.விகடன்-34 ,ரே-2/50 comments: