Saturday, April 15, 2017

சார்.சூர்யா வும் விஜய் மாதிரி ஆகிட்டாருனு எப்டி சொல்றீங்க?

சார்.சிங்கம் 3,ஹிட்டா?
தெரில.ஆனா நான் சிங்கம்னு சொல்லிக்கற அரசியல்வாதி பெய்லியர்

===============

2 சிங்கத்தோடேயே நான் இருந்தவள்
ஓஹோ.அப்போ ஜோதிகா ?

============

3 எங்க கட்சி இப்போ உலக அளவில் ட்ரெண்ட் ஆகிடுச்சு
ஆகட்டும்.வாக்கு % அதே 4%தானே?

================

4 சார்.எனக்கு 100டிகிரி காய்ச்சல்.மெடிக்கல் ரிப்போர்ட்டை வாட்சப் அனுப்பிட்டேன்.லீவ்வேணும்
ஏம்மாஅப்போலோ ரிப்போர்ட்டையே நம்பல

================


5 தலைவரே! ஏன் எதுவும் பேசாமயே இருக்கீங்க?
எதிரி முட்டாளா இருந்தா நாம அமைதியா இருந்தே ஜெயிக்கலாம்

=================

6 எனக்கு கையெலுத்தும் சரி இல்ல.தலை எலுத்தும் சரி இல்ல
ஏன் ழகரம் வராதா? லகரம் வந்தா லகரம் (லட்சம்) வரும்னு ஒரு நப்பாசை


==========


7 நான் சிங்கம் 3 மாதிரி
ஆனா ்மாரி3 மாதிரினு ஜனங்க பேசிக்கறாங்களே? புரியல கேப்மாரி மொள்ளமாரி அடங்காமாரி

================

8 முத்தம் கேட்டேன்.
உதட்டை மூடிக்கொண்டு, "முடியாது, உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள்" என்றாள். அதெப்டி ? வாயை மூடி பேசவும் டெக்னிக்?


=============


9 சென்னை ஜெயிலை பெங்களுர் ஜெயிலையும் பார்த்தவர்கள் நாங்க
ஏம்மா.எம்பொண்ணு டெல்லி திகார் ஜெயிலையே பார்த்தாச்சு.சீனியர் நாங்கதான்

=================

10 போன வருஷம் feb 14 இந்த ட்விட்டர் ac start பண்ணேன்.
அப்டியா?ஆனா யாரு.143சொன்னாலும் 144 போட்டு அவங்க கனவை 356 பண்ணிடறீங்களாமே?420னு பயமா?

================

11 நான் நாளை நாலு பேருக்கு ப்ரப்போஸ் பண்ணப்போறேன்
நீங்க சினிமா தியேட்டர் ஓனரா?அவங்கதான் தினசரி4,காட்சிகள் போஸ்டர் ஒட்டுவாங்க

===============

12 மேடம்.நாளைய தீர்ப்பு பற்றி உங்க எதிர் பார்ப்பு என்ன?
விஜய் ஹீரோவா நடிச்ச பழைய படத்துக்கு இப்போ ஏன் எதிர்பார்ப்பு?

===============

13 சிங்கம் 3 எப்டி 6 நாள் ல 100கோடி வசூல் பண்ணுச்சு?கணக்கு காட்டுங்க
அதாவது சிங்கம் 1 ,சி 2, சி 3 ஆக 3,படத்தோட முதல் 6நாள் வசூல்

=============

14 மேடம்.கோட்டைக்குப்போவேன்னு சவால் விட்டீங்க?
அதான் பாளையங்கோட்டை போறேனில்ல?

================

15 ஜட்ஜ் = 4,வருசம் ஜெயில்.உடனே சரண்டர் ஆகனும்
கைதி=4 நாள் அவகாசம் வேணும் நல்ல வேளை.4வருசம் டைம் கேட்கலை.

=============

16 மேடம்.ஜெயிலுக்குப்போக 4 வாரம் அவகாசம் எதுக்குக்கேட்டீங்க?
விஜய் மல்லய்யா ரூட் ல எஸ் ஆகத்தான்

================

17 யுவர் ஆனர்.எனக்குப்பதிலா என் 2 வது புருசன் தண்டனை ஏத்துக்கலாமா?
ஏம்மா?இது என்ன சீரியலா?இவருக்குப்பதில் இவர் னு ஸ்லைடு போட

===================

18 யுவர் ஆனர்.எதுக்காக என்னை கூண்டில் அடைச்சீக?
நான் ஒரு சிங்கம்னு நீதாம்மா பஞ்ச்.டயலாக் பேசுனே?

=============

19 சார்.சூர்யா வும் விஜய் மாதிரி ஆகிட்டாருனு எப்டி சொல்றீங்க?
சிங்கம் 3 வசூல் 6 நாட்களில் 100 கோடி னு நியூஸ் வர வெச்ட்டாரே?

==============

20 சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் செல்கிறார் சசிகலா

iஇதுல என்ன பிரேக்கிங்?

கார்ல பிரேக் இல்லையாம்

=====================

0 comments: