Monday, April 24, 2017

மோடி பார்முலா

தினகரனை ஆதரிப்பதற்காக காரி
துப்பினாலும் துடைத்துகொள்வேன்-நா.சம்பத் # அதான் இணைய தளத்தில் கழுவி கழுவு ஊத்தறாங்களே?எதுக்கு துடைக்கனும்?

============

2 ஊழல் செய்தால் துப்பு கொடுங்கள் - ஸ்டாலின் # நாம ஆளுங்கட்சியா இருந்தப்ப இந்த வீர உரையை நிகழ்த்தி இருந்தா நீங்க மாவீரன்

===============

3 திராவிட இயக்க லட்சியங்களைதினகரன் மீட்டெடுப்பார்.
நாஞ்சில் சம்பத் .இப்போ போலீஸ் விசாரணை நடந்திட்டிருக்கு.முடிஞ்சதும் மீட்பு பணி

================

4 விரைவில் நல்லது நடக்கும் என நம்புகிறேன் -OPS # செட்டில்மெண்ட் பேசி முடிக்கப்போறாங்க என அறிக

===============

5 2.0 திரைப்படம் 2018 ஜனவரி 25-ல் வெளியீடு
# ரசிகர் சந்திப்பை ரஜினி ஒத்தி வைத்த போதே பட ரிலீசும் தள்ளிப்போகும்னு நினைச்சேன்

================

6 சமூக வலைதளங்களை தற்புகழ்ச்சிக்காக அல்லாமல், மக்கள் நலனுக்காக பயன்படுத்துங்கள் -மோடி # மோடி வாழ்க.பிஜேபி வளர்க இது ஓக்கே?

===============

7 உறுப்பினர் படிவம் விற்றதில் பல கோடி ரூபாய் மோசடி: தீபா மீது காவல் நிலையத்தில் புகார்#இந்த பணத்தை பங்கு பிரிப்பதில்தான் மாதவன் கூட பைட்டோ?

================


8 எத்தனை முயற்சிகள் செய்தாலும் தமிழகத்தை காவிமயமாக்க முடியாது.- வீரமணி மயமா ஆக்கலாம்.ஆட்சில இருந்தவங்க,இருக்கறவங்க பாவிகள்தானே==================9 மோடி என் கண்ணிற்கு காமராஜராக தெரிகிறார் - தமிழிசை # நல்ல கண் டாக்டரை பாருங்க.பின் அவர் மோடியாவே தெரிவார்==============10 தமிழகத்தில் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வரும் -குஷ்பு # இப்பவெல்லாம் அரசியல்ல மனோதிடம் மிக்கவர்களை விட ஜோ"திடம் "மிக்கவர்கள்.அதிகம்
=================11 ‘வைகை அணையில் தெர்மாகோல் பரப்பியது ஒரு முயற்சியே’’ அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் தனமான முயற்சி உடையார் இகழ்ச்சி அடைவார்
=================12 தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு திராவிட கட்சிகள் தான் காரணம்-H.ராஜா "விடம்" பேர்லயே விஷம் இருக்குனு அடிச்சு விடுங்க

===================13 மனைவியின் போனை ஒட்டுகேட்ட கணவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்த நீதிமன்றம் # அந்த அபராதத்தையும் மாமனார்ட்டதான் வாங்கப்போறான்
=================14 இந்தியாவின் எரிபொருள் பிரச்னைக்கு 2030க்குள்...தீர்வு!:சந்திரனிலிருந்து ஹீலியம் வாயுவை கொண்டு வர திட்டம் # சுண்டைக்காய் கால் பணம், சுமைக்கூலி முக்காப்பணம்

=================

15 இந்தியைக் கற்க யாரையும் வற்புறுத்தவில்லை; இந்தி கற்பது அனைவருக்கும் நல்லது - வெங்கையா நாயுடு # இந்தி பண்டிட்களுக்கு நல்லது.வருமானம்


=================

16 பேஸ்புக்கில் மற்றவர்களுடன் சாட் செய்த காதலி... கொலை செய்த காதலன்.# மல்ட்டி சேட்டிங் பண்ணா அதுக்கு மர்டரா?


==================

17 திமுக, அடுத்த 60 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சியை பிடிக்க முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்#30,வருசம் OPS 30 வருசம் EPSனு இப்பவே பட்டா போட்டாச்சா?


===================

18 பிரதமரிடம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி கேட்டார் பழனிசாமி - செய்தி

# கேட்பதில்10%தருவது தானே மோடி பார்முலா ?


=================

19 தமிழக அமைச்சர்கள் PM மோடி கையில் பொம்மையாக உள்ளனர் -திருநாவுக்கரசர் # நம்ம காங் ஆட்சில பிரதமரே வாயே திறக்காத பொம்மையாத்தானே இருந்தாரு?


==================

20 பேச்சுவார்த்தைக்கு இரு கதவுகள் திறந்தே உள்ளன - ஜெயகுமார்

# இரு தரப்பும் வாய் திறந்தா போதாதா?


====================

0 comments: