Wednesday, April 12, 2017

பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை.

டாக்டர்,எட்டு இட்லி சாப்பிட்டுருக்கேன்.. இட்லி சிறுசாயிட்டா? இல்ல வயிறு கொள்ளளவு கூடிட்டான்னு தெர்லயே?

ரெகுலரா உங்க சமையலை சாப்ட்டு இப்போ புது சமையல்காரி செஞ்சா அப்டித்தான் மேடம்

==================

2 CBIக்கும் SBIக்கும் என்ன வித்தியாசம்?

5000 கோடி சம்பாதிச்சாலும் சிபிஐ கண்டுக்காது.
5000 ரூ மினிமம் பேலன்ஸ் இல்லைன்னா SBI தண்டம் கட்டசொல்லும்

==================

3 குருவே! உங்க பொண்ணுக்கு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணித்தந்திருக்கீங்க?

யா
ஆனா ஊரான் வீட்டுப்பொண்ணுங்களை ஏன் சாமியாரினி ஆக்கி வெச்சிருக்கீங்க?

==============

4 மாப்ளை பேங்க் ஆபீசர்.ஆனா பொண்ணு கிடைக்க மாட்டேங்குது.


ஏன்?
SBI பேங்க்.வெளில சொன்னா கேவலம் இல்ல?


==========

5 சார்.மிஸ் சப்ஸ்ட்ராக்சன்ரிதா வைப்பார்க்கனும்.


அது யாரு?
SUMரிதா வோட தங்கச்சிீ


================

6 சார்.உங்க பொண்ணை லவ் பண்றேன்


என்ன தகுதி இருக்கு?
உங்க பேங்க் ல SBI SB A/Cல 5000 ரூ மினிமம் பேலன்ஸ் இருக்கு


================

7 மிஸ்! உங்க பயோல "எந்த டிஎம் க்கும் நோ ரிப்ளை"னு இருக்கு


யா.
அப்போ நீங்க கேள்வி கேளுங்க.நான் ரிப்ளை பண்றேன்


===========

8 யார்னா உங்ககூட சீரியசா பேசிட்டு இருக்கப்ப ஏனோதானோன்னு கவனிக்காம இருந்திருக்கீங்களா?
நோ.சீரியசா இருக்கும்போது எப்டி பேசமுடியும்?

=============

9 இந்த உலக்ம் முதல்ல நம்ம டிரஸ்சைப்பார்க்கும், அப்புறமாத்தான் நம்மை பார்க்கும்
அப்போ டிரஸ்சே போடலைன்னா நம்மை முதல்ல பார்க்குமா? என்ன லாஜிக் ?

==============

10 எப்படிதான் ஆபிஸ்ல வேலை

பாத்துட்டே Twitter / FB யூஸ் பன்றாங்களோ ?
சார்.ஆபீஸ் ல வேலை பாக்கறதா நம்பினதுக்கு தாங்க்ஸ்

==============

11 இந்தா 100 ரூ.என்னை "மக்கள் சூப்பர் ஸ்டார் "னு கூப்டுங்க


ம்.மக்கள் எதிர்த்தா?
200 ரூ.சாரி டெல்


==================

12 சார்.போஸ்ட் ஆபீஸ் ல ஒரு SB A/C ஓப்பன் பண்ணனும்


ஓஹோ.சரி.உங்க அக்கவுண்ட் உள்ள பேங்க் செக் லீப் வேணும்.
சுத்தம்


===================

13 சார்.மினிமம் பேலன்ஸ் 5000ரூபா நேத்து தான் கட்னேன்.ஆனா இப்போ 4800தான் இருக்கு?
10ரூநோட்டா கட்னதுக்கு பைன்200 ரூ.

================

14 நீ காற்று

நான் மரம்
என்ன சொன்னாலும்
தலையாட்டுவேன் 🎶🎼
ஓஹோ.தலையை ஆட்டாதேன்னு சொன்னா என்னசெய்வீங்க?


==================

15 மாமா.பொண்ணு குடுத்து பொண்ணு கட்றதுன்னா என்ன?

உங்க முத பொண்ணை ரிட்டர்ன் குடுத்துட்டு 2வது பெண்ணைக்கட்றதா?
டேய்


==================

16 யுவர் ஆனர் .முறைப்பொண்ணுக்கு டிஎம் அனுப்பறது தப்பா?


உன் முறைப்பொண்ணுன்னா தப்பில்லை.ஐடி பேரே முறைப்பொண்ணுன்னா தப்பு


==================

17 மிஸ்! உங்க போன் நெம்பர் ?


சாரி.நான் யாருக்கும் போன் நெம்பர் மட்டும் தர மாட்டேன்
சரி.போன் னையாவது குடுங்க


==============

18 பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை.


ஓஹோ.திரும்பும்போதுதான் பிடிக்குதா? நேரா பாத்தா பிடிக்கலையா?


===============

19 வீட்டு வாடகை. 3000 தானே?2800 தான் தர்றீங்க?

30/31 நாட்கள் கொண்ட ரெகுலர் மாசத்துக்குok.பிப் 28 நாள் தானே?

================


20 சார்.3 வேடங்களில் தோன்றுவதற்கு பயமா இல்லையா?

ஏன்?
தமிழ் நாட்ல 3 ன்னா பட்டை நாமம் குறிக்கும்

======================

0 comments: