Monday, April 03, 2017

சில்க் சுமிதாவிற்கு ஆதார் அட்டை வழங்கியதாக சர்ச்சை

தனுஷ் நடிப்பில் சௌந்தர்யா இயக்கும் விஐபி-2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ரஜினி திடீர் விசிட் - செய்தி # உஷார் அப்பா , ஆல்ரெடி உஷார் பண்ணிட்ட மாப்ளை


======================

2  ஒரு கட்சியின் சின்னத்தை முடக்கும் சின்ன புத்தியெல்லாம், பா.ஜ.,வுக்கு கிடையாது-தமிழக பா.ஜ., பொதுச் செயலர், கறுப்பு முருகானந்தம் # சின்னத்தை முடக்கியவருக்கு “சின்ன”புத்தி தானே?

===================


 வரும் இடைத்தேர்தலில், நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகின்றனர்-கங்கை அமரன் # நான்கு முனை போட்டி நடப்பதால் உங்களை கட்டம் கட்டிடுவாங்கனு சொல்றீங்களா?


====================


 தொழில் அதிபர்கள் கடனை தள்ளுபடி செய்யும் மோடி விவசாயிகளை கண்டு கொள்ளாதது ஏன்? - ராகுல்  # தொழில் அதிபர் கிட்டே கட்சி நிதி வாங்கலாம், விவசாயிகள்  மனுதான் தருவாங்க


===================

50 ஆண்டு காலம் திராவிட கட்சிகளுக்கு, மக்கள் வாய்ப்பு தந்தீர்கள். எங்களுக்கு, வெறும் 2 ஆண்டுகள் கொடுங்கள்-ராமதாஸ் # அதென்ன கணக்கு 2 வருசம்?5 வருசம் தானே ஆட்சிக்காலம்?=====================


6  பணமா, பாசமா என்றால், நிச்சயம் பணத்திற்கு அடிமையாக மாட்டார்கள் மக்கள் -மதுசூதனன் # பாசம் வழுக்கி விட்டு கீழே தள்ளி விட்டுடும்னு சொல்வாங்க


==================

12 MLA ,க்களை மட்டுமே வைத்து OPS CM கனவு காண்பது. 'ஓட்டைப்படகில் ஏறி, ஒலிம்பிக்கில் வெல்வேன்' என்று சொல்வது போல் இருக்கிறது-இன்பதுரை  # இப்போ எதுக்கு படகு சின்னத்தை வம்புக்கு இழுக்கறீங்க?னு ஜெ தீபா கேட்பாரே?


================

ஆர்.கே.நகரில் வருமானவரித்துறை சோதனை # வாக்காளருக்கு தரப்படும் பணத்துக்கும் வருமான வரி கட்டுனுமோ?


=======================

விசாரணை கமிஷன் அமைத்தால் சந்திக்க தயார் சொல்கிறார் விஜயபாஸ்கர்  # கமிஷ்ன்னா போதுமே உடனே ரெடி ஆகிடறாங்க அரசியல்வாதிகள்==================

10 களையிழந்தது ஜெ., வீடு: சமையலறைக்கு பூட்டு! # அப்போ அடுக்களை இழந்தது -னு சொல்லுங்க

======================

11 தவறான தகவலை பதிவிட்ட அமெரிக்க பெண்ணுக்கு, வடக்கு கரோலினா நீதிமன்றம்,3  கோடி ரூபாய் அபராதம் # ஒரே ஒரு  ஸ்டேட்டஸ் போட்டுட்டு வாழ்நாள் சம்பாதனையே போச்சா?


====================


12 

உலகின் 50 பெரிய வங்கிகள் பட்டியலில் நுழைந்தது எஸ்பிஐ # இந்த பெருசுங்களையே நம்பக்கூடாது , சர்வீஸ் சரி இருக்காது=================

13 

60000 தொப்பிக்கு ரூ.18 லட்சம் செலவு: தினகரன் மீது OPS அணி குற்றச்சாட்டு # அந்த அணி கணக்கு  வழக்கு எல்லாம் இங்கே எப்டி தெரிஞ்சுது?


================

14 மின்கம்பம் சின்னத்தை இரட்டை மின்விளக்கு என OPS தவறாக பிரசாரம் செய்வதாக TTVஅணி புகார் # ஷாப்பிங் மால்ல வாங்குன தொப்பியை எம்ஜிஆர் தொப்பின்னு நீங்க சொல்லலை?

===============

15

எம்.ஜி.ஆர் பாடலை பாடி மதுசூதனன் பிரச்சாரம் # திருடாதே பாப்பா திருடாதே பாட்டா? ஏமாறாதே ஏமாற்றாதே வா?=====================

16 

அகிலேஷை போல வேறு யாரும் என்னை அவமானப்படுத்தியது இல்லை’- தந்தை முலாயம் சிங் #அழகிரி- கலைஞர் கதை எல்லாம் இவரு கேள்விப்படலை போல


=================

17 

அகிலேஷை போல வேறு யாரும் என்னை அவமானப்படுத்தியது இல்லை’- தந்தை முலாயம் சிங் #  பதிலுக்கு இவரு அதை சொல்லிக்காட்டி அவமானப்படுத்திட்டாரு


=====================

18 

ஆதார் அட்டையில் நடக்கும் குளறுபடிகள்! சில்க் சுமிதாவிற்கு ஆதார் அட்டை வழங்கியதாக சர்ச்சை! # நம்மாளு அதிலயும் ஃபோன் நெம்பருக்கு டயல் பண்ணி ட்ரை பண்ணி இருப்பானே?=================


19 

ஆதார் அட்டையில் நடக்கும் குளறுபடிகள்! சில்க் சுமிதாவிற்கு ஆதார் அட்டை வழங்கியதாக சர்ச்சை! # என்ன? “பட்டு”ன்னு இப்டி பண்ணிட்டாங்க


===================

20 

மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தகவல் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண  மோடி வேண்டுகோள்!# பெரும்பாலான பிரச்சனைகளே இந்த தகவல் தொழில் நுட்பத்தாலதான் , செல் ஃபோன் போல===================

0 comments: