Sunday, April 23, 2017

ஆளுங்கட்சியா இருக்கும்.வரைதான் நான் பனி.எதிர்க்கட்சின்னா புலி

அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையில் தலையிடுவது திமுகவின் மரபு அல்ல: ஸ்டாலின் # OPS க்கு ஆதரவுன்னு சொன்னது யாருங்கோ?


=============2 கட்சியிலிருந்து ஒதுங்கச் சொன்னார்கள் ஒதுங்கிவிட்டேன்: டிடிவி.தினகரன் # அய்யோ ராமா.எல்லாம் டிராமா=============3 நான் ஒதுங்குவதுதான் அனைவரின் விருப்பம் என்றால் நானே ஒதுங்கி இருப்பேன்- தினகரன் # நாகராஜசோழன் எம் ஏ திடீர்னு அமாவாசை ரேஞ்ச்க்கு இறங்கிட்டாரே
=============4 இரு அணியினர் இணைவது குறித்து மக்களிடம் பதற்றமோ பரபரப்போ இல்லை-ஜெ.தீபா# மாதவன் கூட நீங்க இணையறீங்களா?இல்லையா?அதான் ஹாட் டாபிக்=============5 தினகரன் குடும்பத்தினர் தாமாகவே விலகுவர்: தம்பிதுரை பேட்டி

# கொஸ்டீன் பேப்பர் அவுட் ஆகிடுச்சு மொமெண்ட்


================


6 இந்திய தேசத்தை இந்தி தேசமாக்கி ஒற்றுமையைக் குலைக்காதீர்- ஸ்டாலின் # ஆளுங்கட்சியா இருக்கும்.வரைதான் நான் பனி.எதிர்க்கட்சின்னா புலி


===============


7 சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக OPS-சசிகலா அணி மீது தீபா குற்றச்சாட்டு.# அலாரம் வைக்காமயே தானே எழுந்து அறிக்கை.விடும் தானைத்தலைவி


===============

8 மக்களும் அதிமுக தொண்டர்களும் துரோக கூட்டத்தை அடையாளம் கண்டு விழிப்புடன் உள்ளனர் - தீபா#4,திசைலயும் பாத்தாச்.எல்லாருமே துரோகிகதான்

==============

9 சிறையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சுகேஷ் சந்திரசேகர் சார்பில் மனு
குமார் மேட்டர் இவருக்கும் தெரிஞ்சிடுச்சு போல


===============

10 சிறையில் காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக தீஷ் ஹசாரே நீதிமன்றத்தில் சுகேஷ் சந்திரசேகர் மனு
விருந்து கொடுப்பாங்கனு நினைப்பு


====================


11 அ.தி.மு.க., அணிகள் இணைப்பு செய்தி, திட்ட மிட்ட நாடகமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.-பொன்.ராதா# மற்ற கட்சி பிரச்சனைகளில் தலையிட மாட்டோம்னு நேத்துத்தான் சொன்னாரு

==================

12  சட்டசபையை உடனே கூட்டுங்க: ஸ்டாலின் மனு # நேத்துதான் கிழியாத பாக்கெட் வைச்ச சட்டை ரெடி பண்ணாராம்


=============================


13 இமயம் முதல் குமரி வரை, மோடி என்ற குரல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது - பண்டாரு தத்தாத்ரேயா # பணத்தட்டுப்பாடு , தொழில் ,வியாபார முடக்கம் காரணகர்த்தாவுக்கு திட்டி இருப்பாங்க


======================

14 

 தமிழகத்தில் மீண்டும், தி.மு.க., தலைதுாக்க கூடாது.-ஜெயராமன் # நாமே பள்ளத்துல விழுந்து கிடக்கோம்,இதுல திண்ணல தூங்கிட்டு இருக்கறவரை ஏன் எட்டிப்பார்க்கனும்?


====================

15 ஒவ்வொரு தேர்தலிலும், அரசியல் கட்சிகளுக்கு வெவ்வேறு சின்னங்களை ஒதுக்க வேண்டும்.-எம்.ஜி.தேவசகாயம் # சுயேட்சைகளுக்கு சகாயம், பரம்பரை குலத்தொழிலா அரசியல் பண்றவங்களுக்கு காயம்

========================16  சென்னை சாலையில் மீண்டும் பள்ளம் : செய்தி

# 130 தான் கணக்குஇன்னும் 128 பாக்கி

=================
17 4 ஆண்டுகளையும் தமிழக அரசு முழுமையாக பூர்த்தி செய்யும்: அமைச்சர் செல்லூர் ராஜு சிஎம் மட்டும் மாறிட்டே இருப்பாரு.அதானே ட்விஸ்ட்?


===================


18 ஜெ,கலைஞர், வை கோ வை விட தினகரன் ஜனநாயகமானவர்- நாஞ்சில் சம்பத் # தினகரனோட வயசு அவங்க 3 பேர் அரசியல் சர்வீஸ்


==================19 1000 அவமானங்களை தாங்கிக்கொள்ளும் வலிமை மிக்கவர் தினகரன் - நாஞ்சில் சம்பத் # அப்போ ஒவ்வொரு அவமானமா பக்கத்துல நின்னு எண்ணிட்டு இருந்திருக்காரு போல==================
20 நடிகர்களை விமர்சித்தால் நடவடிக்கை - விஷால்.# சினிமா வை , சினிமா நடிகரை விமர்சிக்கக்கூடாது,ஆனா காசு கொடுத்து சினிமா மட்டும் பார்க்கனும்?
================

0 comments: