Monday, April 10, 2017

இதுக்கெல்லாம் விதை எங்க தானைத்தலைவர் போட்டது

உலக சுகாதார தினத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் நடந்தது-ஸ்டாலின் # குப்பை எல்லாம் க்ளீன் பண்ணனுமில்ல.அடுத்து நம்ம வீடு


==============2 ஐடி ரெய்டுக்கும் பாஜக.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை -தமிழிசை # ஐடி ஸ்டேட் கவர்மெண்ட்டா?சென்ட்ரல் கவர்மென்ட்டா?============3 ரெய்டுக்கு ஒத்துழைப்பு


அளித்தோம்..
-விஜயபாஸ்கர் # ஒத்துழைக்கலைன்னா உதைப்போம்னு டிரைவரை மிரட்ன பின்?


==============

4 வருமான வரித்துறை ரெய்டில் அரசியல் சதி இருப்பதாக சரத் குற்றச்சாட்டு.# மடில கனம் இல்லைன்னா வழில பயம் எதுக்கு?எனும் "விஷால"மான மனசு வேணும்

============

5 இந்தியாவில் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் 50% நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்.# மீதி 50% குடி ,புகை


=============

6 வால்மீகியை தரக்குறைவாக பேசியதாக நடிகை மீது வழக்கு; கைது செய்யமுடியாமல் போலீஸ் திண்றல் # சார்ஜ் சீட் போட்டும் கால்சீட் தர்லையா?

==============

7 இந்தியாவில் ரயிலில் பயணச்சீட்டு வாங்காமல் பயணித்தவர்கள் விவரம்..ரயில்வே வெளியிட்டது # இதுக்கெல்லாம் விதை எங்க தானைத்தலைவர் போட்டது

============

8 விமானபயணம் - சிவசேனா எம்.பிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
ஏறலாமா?பாதி வழில பிளைட்ல இருந்தது இறங்குனு சொல்லிட்டா?

==============

9 தினகரன் பணம் கொடுக்கிறார்...நாங்கள் பாசத்தைக் கொடுக்கிறோம் - மதுசூதனன் # மொத்தத்துல 2 பேரும் மக்களைக்கெடுக்கறீங்க

===========

10 என்ன தான் பணம் பட்டுவாடா செய்தாலும், தி.மு.க., வெற்றியை யாராலும் பறிக்க முடியாது.-ஸ்டாலின்  # அவ்ளோ நம்பிக்கை இருந்தா திமுக வும்  ஏன் பணம் தருது?

=========================

11  RK.நகர் இடைத்தேர்தலில், பணம் பட்டுவாடாவை தடுக்க, தெருவுக்கு 2 பேரை நிறுத்தி, அரசியல்கட்சியினர் கண்காணிப்பு # முதல் பட்டுவாடாவே அந்த 2 பேருக்குத்தானாம்


=================


12 

தினகரனும், தி.மு.க.,வும் மக்களை நம்பவில்லை-கே.பி.முனுசாமி  # கை நீட்டி காசு வாங்கிட்டா விசுவாசமா ஓட்டு போட்டுடுவாங்கனு நம்பித்தானே இருக்காங்க

====================

13 RK.நகர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 756 புகார்கள் வந்துள்ளன #இன்னும் ஏன் நடவடிக்கை எடுக்கலை? புகார் 1000 ரீச் ஆகட்டும்னு வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்


===================

14 அ.தி.மு.க. அணி வேட்பாளர்கள் மக்கள் சேவைக்காக போட்டியிடவில்லை: மு.க.ஸ்டாலின் #  அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்காகத்தானே போட்டியிடுவாங்க?


=====================


15 
விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேர வருமானவரி சோதனை நிறைவு: சோதனையில் எதுவும் சிக்கவில்லை என அமைச்சர் பேட்டி#  சோதனை செஞ்சவங்க சொன்னா தான் நம்புவோம்

=====================
16  சரத்குமார் வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் # தினகரன் அணிக்கு ஆதரவு தெரிவிக்க வெறும் 10 லட்சம் தானா? கம்மியா இருக்கே?


================

17  
ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம் # ஆளே ”தவறிட்டா” கூட முதல்ல அபராதத்தை கட்டிட்டு தான் அடக்கம் பண்ணனும்


=====================
18 'ஜோக்கர்' திரைப்படத்துக்கு தேசிய விருது # பரவால்ல , ஜோக்கர்களுக்கு நல்ல  காலம் நடக்குது போல, ஆனா அரசியல் ஜோக்கர்கள் வீட்டில் ரெய்டுதான் நடக்குது

=================

19 வருமான வரித்துறை சோதனை, ஆதாரம் இல்லாமல் நடக்காது.-தமிழிசை # BJP க்கு ஆதாயம் இல்லாம எதுவும் நடக்காதுனு ஜனங்க பேசிக்கறாங்களே?

=============

20 வைகோ சிறைக்குச் சென்றால், அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.-மல்லை சத்யா # தப்பு செஞ்சா தண்டனை உண்டு , இதுதான் ஜனங்களுக்கு தெரிஞ்ச ஒரே அர்த்தம்

===========

0 comments: