Wednesday, March 29, 2017

கொங்கு தேர் வாழ்க்கை பாட்டை எழுதிய புலவர் கவுண்டரா? ஒரு அரிய வெட்டி ஆராய்ச்சி

கல்யாணத்துக்குப்பின் சாப்பிடற சாப்பாட்ல உப்பு சப்பே இல்லை


ஓஹோ.தாம்"பத்திய"சாப்பாடா?


==============

2 சர்வர்.பூரிமேல எதுக்கு தண்ணீர் தெளிக்கறீங்க?


பானி பூரி கேட்டீங்களே?


================

3 தலைவரே!எதுக்காக அந்தக்கால நடிகை லதா கூட ஜோடியா நின்னு போட்டோ எடுத்துக்கிட்டீங்க?


பாக்க அப்டியே MGR மாதிரியே இருக்கார்னு பேர் வாங்க


================

4 நாளை இமயமலை போலாம்னு இருக்கேன்


அய்யய்யோ.அங்கே எல்லாம் போகக்கூடாது.
சரி.போகலை.பாத்ரூம் வருது.போலாமா?


=================

5 ஆண்களுக்கு கல்யாணம் ஆகிட்டா புத்தி சுத்தமா வேலை செய்யாதா?


புத்தி இருக்கறவன் ஏன் கல்யாணம் பண்றான்?


=======================
6 சார்.நீங்க தினகரனுக்கு சப்போர்ட்டா?


இல்ல.டெக்கான் க்ரானிக்கல் க்கு
ஏன்?
ஏன்னா அதுதான் சீப் ரேட்===================

7
இந்த வீட்டில் இருந்து உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கிட்டுப் போம்மா

டாடி, இந்த வீட்டையே எடுத்துக்கறேனே?=================


8 இந்த வீட்டில் இருந்து உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கிட்டுப் போம்மா


டாடி, இந்த வீட்டையே எடுத்துக்கறேனே?

=================

9 சிணேகா ன்னு எழுதி இருக்கியே?சினேகா வுக்கு 2,சுழி தானே?


இல்ல.டீச்சர்.சினேகா தலையை நல்லாப்பாருங்க.3,சுழி.யார் கிட்டே?ஆங்===============

10 ஒப்பனை இல்லா பெண்களை ஒப்ப மறுக்குதே இந்த ் சமூகம்.ஏன்?
1 மணி நேரம் ஒப்பனை செஞ்சாலே பாக்க முடியல.இதுல அதுவும் இல்லனா

============

11 105 பேர ப்ளாக் பண்ணிருக்கேன் இதுவரை


பிளாக் பண்ணுனது கூட தப்பில்லை மேடம்.அத வெட்டியா 1,2,3 னு எண்ணிட்டு இருந்து இருக்கீங்ளே


============

12 மேடம்.எதுக்காக டெய்லி 10 பேரை பிளாக் பண்ணிட்டு இருக்கீங்க?


1000 பேரை பிளாக்கிய அபூர்வ சிகாமணி னு பேர் எடுக்கலாமில்ல?


=================

13 மாப்ளை.பொண்ணுக்கு ப்ரூஸ்லீ படம் னா உயிரு


அய்யய்யோ
ஜெர்க் ஆகாதீங்க.நிஜ ப்ரூஸ்லீ பைட் படத்தை சொன்னேன்


=================

14 NO DMனு பயோல போட்டிருக்கேன்ல.அப்புறமும்DM பண்ணா என்ன அர்த்தம்?


சாரி மிஸ்.எனக்கு படிக்க வராது.எழுத மட்டும் தான் வரும்

==================

15 ராஜா ராணி படம் வந்தப்புறம் ஐ லைனர் மட்டும் போடுறவங்க அதிகமாயுட்டாங்க


"ஐ" படம் வந்த பின் கூன் விழுந்தாப்டி நடக்கறவங்க அதிகமாகிட்டாகளோ?

==================

16 எங்க வீட்ல தண்ணி குடிக்கக்கூட வெள்ளி கப்சா ,தங்க கப்சா இருக்கும்


அடேங்கப்பா.பயங்கர கப்சா வா இருக்கே?

================

17 டியர்.வர்ணிக்கும்போது உங்களுக்குன்னு ஒரு வரைமுறை.வெச்சுக்குங்க


நான் என்ன டிராயிங் மாஸ்டரா?வரை முறை செய் முறை படிக்க?==================


18 நடிகை காவேரி ,நதியா,யமுனா 3 பேரை வெச்சு ஒரு படம் பண்றோம்


எதுக்கு தலைவரே?
நதிகளைத்தான் இணைக்க முடியல


=============

19 நெய்ல் பாலீஸ்் பூசியிருக்கும் பெண்களைப் பார்த்தால் என்ன நினைப்பீங்க?

ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் ஸ்லோ பாய்சன் உள்ளே போகும்னு

===========

20 கவனித்ததில் கவுண்டர்கள் பெயருக்கு முன்னால் 'கொங்கு' சேர்க்கிறார்கள்.

அப்டியா?அப்போ கொங்கு தேர் வாழ்க்கை பாட்டை எழுதிய புலவர் கவுண்டரா?

==================

0 comments: