Sunday, March 12, 2017

டாக்டர்.சின்னம்மை வராம தடுக்க ஊசி எப்போ போடுவீங்க?

ஏம்மா.இந்த நாட்டை சுத்தப்படுத்த உன்னால எப்டி முடியும்?
ஆல்ரெடி20 வருசம் வீட்டை கூட்டி சுத்தம் பண்ணிட்டு இருந்தனே?

============

2 மாப்ளை.என் பொண்ணை வேலைக்காரி போல் நடத்தறீங்களாமே?
மாமா.வீட்டு நிலவரம் ,நாட்டு நிலவரம் எதும் தெரியாம உளறாதீங்க

============

3 மேடம்.சிஎம் மா சைன் பண்ணிடுவீங்களா?
யோவ்.சைன் பண்ணத்தெரியாத கை நாட்டுன்னு நினைச்சியா.10 வது வரை படிச்சிருக்கேன்

==============

4 இண்ட்டர்வ்யூவில்

எதுவரை படிச்சிருக்கீங்க?

 வேலைக்காரி கிட்டே எச்சரிக்கையா இருக்கும் அளவு படிச்சிருக்கேன்


====================

மச்சினியைப்பார்த்து உன் புருசன் சிரிச்சதால டைவர்ஸ் வேணுமா?ஏம்மா.இதெல்லாம் ஒரு ரீசனா?
யுவர் ஆனர்.சிரிப்பால ஆட்சியே கவிழுது

==================

6 டாக்டர்.பன்னீர் சோடா உடம்புக்கு நல்லதா?
பன்னீர் வீட்டுக்கு நாட்டுக்கு நல்லதுதான்

==================


7 ஜட்ஜ் - பேஷண்ட்டை 60நாளா வெளி ஆட்கள் யாரையும் பார்க்க விடலையாமே?
நீங்க வேற.டாக்டரான எங்களையே பார்க்க விடலை

===========

8 குருக்களே!கோயில்ல தீபாராதனை காட்டலையே?ஏன்?
தீபாராதனை,தீப ஆராதனை ,தீபா ஆராதனைக்கு இப்போ வேலையே இல்லாம போச்சே?

==================

9 எந்த பயமுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டேன்
பஞ்ச் டயலாக் பிரமாதம் மேடம்.ஆனா அந்த ஒரு வரியைக்கூட ஒப்பிக்கத்தெரியாம பாத்து படிக்கீக?

=================

10 கட்சியோட வங்கிக்கணக்கை முடக்கிட்டோம்.இப்போ என்ன செய்வீங்க?
டூ லேட்.இன்னுமாய்யா விட்டு வெச்சிருப்பாங்க.துடைச்சு மெழுகி இருப்பாக

=================

11 சார்.சிங்கம் ரிலீஸ் ஆகுதா?இல்லையா?
நேத்துத்தானே ஒரு சிங்கம் வெளில வந்தது?

===============

12 வில்லன் பாரீன்ல இருக்கற குப்பையை இந்தியாவுக்கு வந்து கொட்றான்.ஹீரோ தடுக்கறார்.இதான் கதை
அய்யய்யோ.குப்பைக்கதை?

============

13 ஆளுநர் அஜித் ரசிகரா இருக்கும்னு எப்டி சொல்றே?
விவேகம் மா முடிவு
=எடுத்திருக்காரே?
=================

14 சசி தந்த ஆதரவுக்கடிதத்துல 130 எம் எல் ஏ சைன் இருந்தும் ஏன் இப்டி?
ஆளுநர் =அதுல ஜெ சைன் வேற இருந்துச்சு.அதான் டவுட்

=============

15 இன்ட்டர்வ்யூ க்கு ஏன் லேட்?
கம்பெனி எம்.டி யோட அம்மா சமாதில 30 நிமிசம் பிரார்த்தனை பண்ணிட்டு வந்தேன்

===================

16 டாக்டர்.சின்னம்மை வராம தடுக்க ஊசி எப்போ போடுவீங்க?
இருய்யா.சின்னம்மா வராம தடுக்க ஆளுநர் ஐடியா என்னனு நியூஸ் பாத்துட்டு வரேன்

===============

17 சார்.வெள்ளிக்கிழமை நைட் ஏன் முடிவு அறிவிச்சீங்க?
சனி ஞாயிறுகோர்ட் லீவ்.ஹிஹி

============

18 டேய்.எக்ஸாம்ல ஏன் எந்தக்கேள்விக்கும் பதில் எழுதல?
இந்த மாதிரி ஈசியான கேள்விக்கெல்லாம் பதில் எழுதி என் தரத்தை தாழ்த்திக்க விரும்பல

=================

19 சசி = சார்.இவங்க எல்லாம் என் பாலோயர்ஸ்
கவர்னர் =அட போம்மா.OPS க்கும் பாலோயர்ஸ் தான்.

================

20 மாமா.உங்க பொண்ணு ரொம்ப ஓவரா போகுது.ஓரளவுக்குதான் பொறுமையா கையாள முடியும்.
ஓ அப்புறம் அப்போலோ ல அட்மிட் பண்ணிடுவேன்்,

=====================

0 comments: