Tuesday, March 28, 2017

லைக்கா இதுக்கு டிஸ்லைக்கா?

1 ரூ.246 கோடி டிபாசிட் செய்த திருச்செங்கோட்டை சேர்ந்த நபர் ஒருவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை # விசாரிப்பாங்கன்னு கூடவா தெரியாது?அவ்ளோ விபரம் இல்லா ஆளா?=============== RK.நகர் தொகுதி யின் பிரச்னைகளை முழுவதுமாக அறிந்தவர் எங்கள் கட்சி வேட்பாளர்-சரத்குமார் # வேட்புமனு வை பூர்த்தி செய்யவே தெரியலையே?
================சசிகலா படத்தை போட்டு ஓட்டு கேட்டுதான் பாருங்களேன்...தினகரனுக்கு மதுசூதனன் சவால் # MGR,ஜெபடம் ஸ்டாக் இருக்கு, சசி நடிச்ச படம் எங்கே இருக்கு============4 RK.நகர் தொகுதி யின் பிரச்னைகளை முழுவதுமாக அறிந்தவர் எங்கள் கட்சி வேட்பாளர்-சரத்குமார் # வேட்புமனு வை பூர்த்தி செய்யவே தெரியலையே?=================5 தலைவர் பொறுப்பை ராகுல் ஏற்க வேண்டும்,பிரியங்கா, அரசியலுக்கு வரவேண்டும் -EVKS # குடும்பத்துலயும் கோஷ்டிப்பூசல் ஏற்படுத்தாம விடமாட்டார் போல================6 சிம்புவை இயக்க ஐஸ்வர்யா தனுஷ் விருப்பம் நேரம் சரி இல்லையா?தனுஷ்க்கு ஜாதகம் சரி இல்லையா?=============7 அன்புமணியை CMஆக ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி -ராமதாஸ்# வடிவேலு மாதிரியே நல்லா காமெடி பண்றாரு.ஆனா சிரிப்புதான் வர்ல=============8 ரஜினிகாந்தை, இலங்கைக்கு வரவிடாமல் தடுத்து விட்டனர்” லைக்கா நிறுவனம் கண்டனம் # லைக்கா இதுக்கு டிஸ்லைக்கா?அங்கே அடிச்சா இங்கே வலிக்குதே ஏன்?


================

9 நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது # காரைக்கால் ல போராட்டத்துக்கு பந்தல்கால் போட்டாச்சா?

===============

10 தமிழ் மொழிக்காக போராட முன்வரவேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை # கனிமொழிக்காக கலைஞர் போராடுன மாதிரியா?

================

11 எனக்கு விலை வைப்பவன் தமிழ்நாட்டில் எவனும் இல்லை -நாஞ்சில் சம்பத் # அப்போ சிங்கப்பூர் குடிமகன் தினகரன் கிட்டே கை நீட்டிட்டீங்களா?

================

12 UP CM ஆதித்யநாத், என்னை விட ஒரு வயது மூத்தவர்; ஆனால், திறமையில், என்னை விட மிகவும் சிறியவர்-அகிலேஷ் யாதவ் #அதனால நீங்கதான் சிஎம் ஆகனுமா? புது உருட்டா இருக்கே?.


===================

13  ADMK ஆட்சியை ஒழித்து விட , எங்கள், MLA,க்களைOPS அணிக்கு செல்லும்படி, ஸ்டாலின் கூறி வருகிறார்.-

தினகரன்  # அதுக்கு டைரக்டா DMK க்கு கூப்பிட்டிருப்பாரே? =================

14 இரட்டை சிலை சின்னம் முடக்கப்பட்டதில், மகிழ்ச்சி இல்லை - பொன் ராதா # மொத்தக்கட்சியையே கட்டம் கட்டுவதுதான் டார்கெட்டா?


=======================
15 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது OPS அணி # டாப் 10 லிஸ்ட் இப்போ வெளியிடறீங்க, சரி, ஆட்சில இருந்தப்போ நடவடிக்கை ஏன் எடுக்கலை?


===================


16 RK நகரில் கோயிலில் வைத்து பணப்பட்டுவாடா நடக்குது, தடுக்கனும் - தமிழிசை # அப்போ சுடுகாட்ல வெச்சு கொடுத்துடப்போறாங்க


===================

17 ஒழுக்கத்தை கற்று தந்தது ஆர்.எஸ்.எஸ்., : அத்வானி # அடடா, எங்களுக்கெல்லாம் அம்மா ,அப்பா தான் கத்துத்தந்தாங்க


==================

18 நேரு குடும்பத்தில் ராஜீவ் மட்டுமே நல்லவர்: சுசாமி   # இவர் கிட்டே நல்லவர்னு சர்ட்டிஃபிகேட் வாங்கனும்னா முதல் தகுதி ஆள் உயிரோட இருக்கக்கூடாது


=================

19 

கறுப்புப் பணத்துக்கு எதிராக அடுத்தகட்டப் போர்: ஒத்துழைக்க மோடி வேண்டுகோள் #முதல் கட்டப்போருக்கே இன்னும் விடை தெரியல், அதுக்குள்ள அடுத்த கட்டமா?==================

20 RKநகரில் வீடு வீடாக பணம் கொடுக்க வியூகம் வகுக்கும் அதிமுக அரசு: ஸ்டாலின்  #இதுக்கு விதை திருமங்கலத்தில் அண்ணன் அழகிரி போட்டது

======================

0 comments: