Monday, March 27, 2017

ரஜினி - தீர்க்கதரிசி

RK.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டி # அவர் குடும்பத்துல.6ஓட்டு இருக்கில்ல?


============2 இரட்டை இலை முடக்கப்பட்டதால் என் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது -டிடிவி தினகரன் # பணம் பத்தும் செய்யும் கறாரா?
==============3 இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது,நியாயமானதுதான். தமிழிசை #,நீங்க எதிர்பார்த்ததும் அதுதானே?இதனால் மட்டும் தாமரை க்கு டெபாசிட் கிடைக்குமா?===========4 அ.தி.மு.க.,வின் யானை பலத்தை ஒடுக்க, எறும்புகளை போல சுறுசுறுப்பாக திகழும், தி.மு.க.,வின் சாதாரண தொண்டர்களே போதும். -திண்டுக்கல் லியோனி # அப்போ யானை தான் வி”நாயகன்”னு சொல்ல வர்றீங்க?
=================
தமிழகத்தில், மதுவை ஒழிப்பது தான், எங்கள் நோக்கம்-  வை கோ # அப்போ  உங்க நோக்கம் எப்பவும் யாரையாவது ஒழிக்கனும்கறதுலயே குறியா இருக்கும்?
======================


6  கையிலே காசில்லாதவன் , நெஞ்சிலே மாசில்லாதவன் தான் OPS அணி - மதுசூதனன் # அரசியல்ல ஜெயிக்கலைன்னாலும் சினிமா ல வசனம்  எழுதி  பொழைச்சிக்கலாம் போல


==================வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் உள்பகுதியில் மழை வாய்ப்பு # குறிப்பா ஆர் கே நகர் ல பண மழை கொட்டப்போகுதாம்

=================


 'தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், ஒரு குடம் குடிநீர், 15 ரூபாய் வரை விற்கப்படுகிறது' -, தி.மு.க.# மழை நீர் சேமிப்பில் கவனமா இருந்தா அரசுக்கு அவப்பெயர் இல்ல


===================


OPS கட்சி பெயர் அதிமுக புரட்சித்தலைவி அம்மா, சின்னமாக மின் கம்பம் ஒதுக்கீடு
# 4 வருசம் தண்டனை பெற்ற குற்றவாளி பேரில் கட்சி பேரா?

============

10 திமுக எம்எல்ஏ அன்பழகனுடன் நடிகர் விஷால் சந்திப்பு. உறை ல ஒரு வாள் ,ஒரு கட்சில ஒரு தளபதி.எதுக்கு புதுசா புரட்சி தளபதி

=============

11 RKநகரில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா – தேர்தல் ஆணையம்.
# கேமரா எல்லாம் பத்திரம்.நம்ம ஆளுங்க ஒரு டைப்

=============

12 நடிகைகளுக்கு பிரச்னை .புகார் அளித்தால் நடவடிக்கை! விஷால் # புகார் அளிக்க வந்தா வெளியே.வர அரைமணிஆகுதாம்.அதாம் புகாரே

==============

13 மதுபானங்களின் விலையை உயர்த்துகிறது தமிழக அரசு!
# பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம்னு சில மானஸ்தர்கள்சொன்னாக.அது என்னாச்சு?

==============

14 இரட்டை இலை முடக்கம் எங்களுக்குச் சாதகமில்லை' - மு.க.ஸ்டாலின் # அதிர்ஷ்டம் ஒரு தடவைதான் கதவைத்தட்டும்.கோட்டை விட்ராதீக

=================

15 ஜெ போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன் # ஜெ போல் ஜெயிலுக்குப்போகாம இருந்தா சரி

=============

16 தினகரன் குடும்ப சொத்து மதிப்பு - ரூ.77.96 கோடி..# என்ன இது?நம்ப முடியாத குத்து மதிப்பு குமாரசாமி கணக்கா இருக்கு?


================

17 தமிழ்நாட்டில் இது இலையுதிர் காலம். வருங்காலம் தமிழக வசந்த காலம் - சுப.வீ # உள்ளாட்சித்தேர்தலுக்கு இரட்டை இலை வந்திடும்

================

18 RKநகரில் தினகரனை வெற்றி பெற செய்யவேண்டும்-பழனிசாமி # அவரு ஜெயிச்ட்டா இவரு அடுத்த ஓபிஎஸ்.இந்த சிலபஸ் தெரியாம பேசிட்டுஇருக்கார்

==============

19 இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை - ரஜினி # ரஜினிதீர்க்கதரிசி.இரட்டை இலை இப்போ ஜீரோ என்பதை சூசகமா 2.0 னு.அப்பவே டைட்டில்

===========

20 தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க OPS கருவியாக பயன்படுத்தப்படுகிறார்
- அன்வர் ராஜா #,இரட்டைஇலை,உதயசூரியன் ரெண்டையும் முடக்கினாலும் தாமரை மலராது

=============

0 comments: