Saturday, March 18, 2017

ஜிம் பாடி ஜிம் கேரியே வந்தாலும் நம்ம கட்சி வீக்காதானே இருக்கு?

1  முதல்வர் பழனிசாமியிடம், எதைக் கேட்டாலும் தெரியாது என்கிறார்.- துரைமுருகன் # தெரியாது என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?னு கேட்டுப்பாருங்க, தெரியும்பாரு


======================2 தமிழகத்தில் முன்பு பிரச்னைகள் ஏற்பட்டபோது, அவற்றை தீர்க்க, பா.ஜ., உதவியது- தமிழிசை #  ஏம்மா , 90% பிரச்சனைகளே உங்க கட்சியாலதானே?==============
தமிழகத்தில் முன்பு பிரச்னைகள் ஏற்பட்டபோது, அவற்றை தீர்க்க, பா.ஜ., உதவியது- தமிழிசை # ஏம்மா , 90% பிரச்சனைகளே உங்க கட்சியாலதானே?============4 பூஜ்ஜியத்தை ராஜ்ஜியமாக்க முயற்சி செய்திருக்கிறார்கள் -பட்ஜெட் பற்றி ஸ்டாலின் கிண்டல் சுரண்டி பூஜ்யம் ஆக்குனதே நாமதானே?=============5 பொதுவாழ்வில் தினகரனை போன்ற அபூர்வமான மனிதர்களை காண்பது அரிது-நாஞ்சில் சம்பத்

# ஆனா அரசியல்ல இவரை மாதிரி ஜால்ரா ஈசல் போல்கொட்டிக்கிடக்கு

===============

6 புதிய மொந்தையில் பழைய கள் TNBudget குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து # கள்ளுக்கடையை தானைத்தலைவர் மறந்தாலும்,திறந்தாலும் இவரு மறக்கல

===============

7 தினகரனை விட அதிக ஓட்டு வாங்கி ஜெயிக்கிறேன் பாருங்க.. மதுசூதனன் சூளுரை! # அவரு ஒரு ஓட்டுக்கு ரூ 5000/ தர்றாராம்.அப்போ நீங்க 6000?

==================


8 RK நகரில் கொட்டப் போகுது பணமழை...
ஒரு ஓட்டுக்கு ரூ10,000 கொடுக்க தினகரன் திட்டம் # ஒவ்வொரு ஓட்டும் சிஎம் சீட்டுக்கான துருப்புச்சீட்டு

===============

9 என் வாழ்நாளில் வைகோ போன்ற நல்ல தலைவரைப் பார்த்ததில்லை! - யஷ்வந்த் சின்ஹா # இதைக்கேட்டா வை கோ வுக்கே சிரிப்பு வந்துடும்

===============

10 என் வாழ்நாளில் வைகோ போன்ற நல்ல தலைவரைப் பார்த்ததில்லை! - யஷ்வந்த் சின்ஹா#ஏப்ரல்1 அன்னைக்கு வெளியிட டிராப்ட்ல வெச்சதாம்.கை பட்டு

===============

11 இந்த ஆட்சியை ஒரு அகல் விளக்கு போல் எங்களுக்கு அளித்திருக்கிறார் ஜெ.- அமைச்சர் ஜெயக்குமார் # அளிக்க வில்லை.அழிக்கப்பட்டார்னு ஜனங்க சொல்றாங்க

=================

12 ஆர்.கே.நகரில் பா.ஜ.க. சார்பில் பலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார்-பொன்.ராதா # ஜிம் பாடி ஜிம் கேரியே வந்தாலும் நம்ம கட்சி வீக்காதானே இருக்கு?

=============

13

: மக்களுக்காக நல்ல காரியங்களை செய்த வைகோவை, ஆர்.கே.நகரில் போட்டியிட செய்வோம்.-மல்லை சத்யா # நல்ல காரியவாதினு சொல்ல வர்றீங்களா?


=======================

14 ரூ.41,965 கோடி கடன் வாங்க அரசு முடிவு! அமைச்சர் ஜெயக்குமார் தகவல்  # அதான் உலக வங்கி முகத்துல கரி பூசி முடியாதுனு சொல்லிடுச்சே?


======================

15 இரட்டை இலை, தேர்தல் ஆணையத்திடமும்  அ.தி.மு.க.,விடமும் இல்லை;  மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது-திருநாவுக்கரசர்  # அப்போ ஆர்கே நகரில் தமிழிசை இரட்டை இலை சின்னத்தில் போட்டி இடுவாரோ?


====================

16 தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற, சேறும் சகதியுமாக இருந்த சாலையில் நடந்து வரும்படி கூறிய தேர்தல் அதிகாரியை, உ.பி., அமைச்சர் அசம் கான், கடும் வார்த்தைகளால் திட்டினார். # அரசியலே ஒரு சாக்கடை கம் சகதி தானே?

===================

17 

பன்னீர் அணிக்கும் தி.மு.க.,வுக்கும் மட்டுமே போட்டி; உளவுத்துறை தகவல் # இதெல்லாம் ஓட்டு ரேட்டு ஏத்திக்க செய்யப்படும் சதி


======================


18 ஜெ., சமாதியில் பட்ஜெட்! # 4 வருசம் தண்டனை பெற்ற ஒரு குற்றவாளியின் ஆசீர்வாதம் தேவைப்படுதா?சட்டத்தில் இதுக்கு இடம் இருக்கா?


===================

19 தமிழகத்தை கடனாளியாக்கும் பட்ஜெட்பொன்.ராதா # நம் பணி கடன் கட்டிக்கிடப்பதே 

=================


20  ==

ரேஷனில் உளுத்தம் பருப்பு 'கட்': போராட்டம் வெடிக்கும் அபாயம் # பெரிய பருப்பு மாதிரி நடந்துக்காதீங்க, ஏழைகள் வயிற்றில் அடிக்காதீங்க


====================

0 comments: