Tuesday, March 07, 2017

இயற்கை அன்னையின் சத்ரு

ஜக்கின்னு ஏன் கூப்பிடுறீங்க... சத்குருன்னு என்னை அழையுங்கள்-ஜக்கி#..வனப்பகுதியை வளைத்துப்போடுவதால் இயற்கை அன்னையின் சத்ரு ன்னு அழைக்கலாம்


============2 , மீதான வாட் வரி உயர்வு எதிரொலி..

* தமிழகத்தில் பெட்ரோல் - ரூ.3.77 , டீசல் - ரூ.1.76 அதிகரிப்பு..# வாட் ஈஸ் திஸ் மோடி ஜி

=============

3 ரூ.3 கோடி, 3 கிலோ தங்கம் வேண்டாம் என எங்கள் அணிக்கு வந்தவர் செம்மலை:OPS # உங்க கிட்டே அதை விட அதிகமா எதிர்பார்ப்பாரோ?

=================

4 பாடகி சுசித்ராவுக்கு மனநிலை பாதித்து விட்டது -கணவர் கார்த்திக் # அவரால எங்கள் தூக்கம் பாதித்து விட்டது.ஒரு பய நைட் தூங்கல

===============

5 ADMKஅழிந்து விட்டது,DMK அழியப் போகிறது பொன்.ராதா # பகல்ல தூங்கறது தப்பு.பகல் கனவு காண்பது அதை விட பெரிய தப்பு

===============

6 பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய உபி.மந்திரி தலைமறைவு; விமான நிலையங்களில் உஷார் # செக்ஸ் மினிஸ்டர் எக்ஸ் மினிஸ்டர் ஆவாரா?

================

7 ஒபாமா மீது டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு “எனது உரையாடலை ஒட்டு கேட்டார்” #,இதெல்லாம் ஒரு பிரச்னையா?சுசித்ரா மாதிரி ட்வீட்டா போட்டாரு?

==============

8 தமிழகம் முழுவதும் விதிகளை மீறி அமைக்கப்பட்ட 325 மதுபானக் கடைகள் மூடப்பட்டன # மாமூல் சரியா தந்தா மாமூலாக கடை நடத்தலாமா?


===============
9 தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியின் இரட்டை இலை உதிர்ந்துகாய்ந்துபோய்விட்டது ராமதாஸ்#நம்ம தோட்டத்தில் மாம்பழம் கனிய வழி இருக்கா பாருங்க

============

10 திடீரென தனிக்கட்சி தொடங்கும் சசிகலா புஷ்பா! மார்ச் 26-ல் கட்சி பெயர் அறிவிப்பு ,கையேந்தி பவன் ரேஞ்சுக்கு கட்சி யும் ஆகிடுச்சு

==============

11 தமிழக அமைச்சர்களுக்கு விரைவில் ரூ 26 லட்சம் மதிப்புள்ள புது சொகுசு கார்கள்! பார்வையிட தேவைப்படும்

============

12 சசிகலாவை தமிழக சி‌றைக்கு மாற்ற வேண்டும்: சு சுவாமி #,அது பத்தி தமிழக அமைச்சர்களே கவலைப்படலை.உங்களுக்கு என்ன கவலை?

===============

`13 ஜெ., நினைவிடத்தில் இருந்த போது, 'நடந்ததைக் கூறு' என, என் உள்மனம் சொன்னது. -OPS #அதே உள்மனம் நீங்க சி எம்மா இருக்கும்போது ஏதும் சொல்லலையா?


=====================

14 ஜெ., நினைவிடத்தில் இருந்த போது, 'நடந்ததைக் கூறு' என, என் உள்மனம் சொன்னது. -OPS #அதே உள்மனம் நீங்க சி எம்மா இருக்கும்போது ஏதும் சொல்லலையா?

=====================

15 ஆளுங்கட்சியினர், இரு அணிகளாக பிரிந்து, ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்  சாட்டுகின்றனர்.-ஜி.ராமகிருஷ்ணன் # க்ட்சி  சின்னம் இரட்டை இலை என்பதால் இரட்டை நிலை போல


==========================


16 மோடி அரசு பணக்காரர்களின் கடன்கள் மட்டுமே ரத்து செய்கிறது - ராகுல் # ஏழைகள் ரோஷக்காரர்கள், வாங்குன கடனை கட்டிடுவாங்க


======================

17 எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பா.ஜ., வளராது: ஸ்டாலின் பதிலடி # அரசியல்ல முன்னேறனும்னா பல்டி அடிக்கனுமா?

===================


18 தனியார் பால் விலை, இன்று முதல், லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்கிறது # வாழ்க்கைத்தரம் உயரலை, விலைவாசி மட்டும் உயர்ந்துட்டே இருக்கு


=========================

19  கோவையில் இருந்து 4,000 கிலோ தங்கம் ரயிலில் கடத்தல்! : போலீஸ் அதிகாரிகள் உடந்தை; 'மாமூல் கார்டு' அம்பலம் # பணம் இல்லா பரிவர்த்தனைக்கு கிடைக்கும் பரிசு வேற இதுக்கு உண்டாம்

====================

20 ஆதார் தகவல்களை யாரும் திருட முடியாது;  -அரசு # தாசில் தார் ஆஃபீஸ்ல பியூன்க்கு 10 ரூபா குடுத்தா கலெக்டர் ஆதார் கார்டு சீக்ரெட்டே கிடைக்கும்

=====================

0 comments: