Thursday, March 02, 2017

"பாக்கெட்"நாவல்

நாடு நல்லா இருக்க வேண்டுமென்றால் மாநிலம் தியாகம் செய்ய வேண்டும்"

-இல.கணேசன் # தமிழன்தான் இளிச்சவாயனா?

===============

2 தமிழக அரசு ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக ராமதாஸ் விமர்சனம் # முதுகில் குத்தாம விட்டாங்களே?

=================

3 பதவியில் இருந்தபோது, ஜெ மரணம் குறித்து வாயை திறக்காதது ஏன்? -ஓபிஎஸ்-க்கு ஸ்டாலின் கேள்வி # நல்ல நேரம் வரட்டும்னு காத்துட்டிருந்தாராம்

=================

4 கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கும் கட்சி, தி.மு.க., அல்ல. -ஸ்டாலின் # அறிஞர் அண்ணா மறைவுக்குப்பின் தானைத்தலைவர் ஆட்சியை எப்டி பிடிச்சாரு? கொல்லைப்புறமாத்தானே?


=======================வரும், 2019ல் நடக்கும் லோக்சபா தேர்தலில், மோடியை மீண்டும் குஜராத்திற்கே திருப்பி அனுப்ப வேண்டும் -ராகுல்:  # சோனியாவை இத்தாலிக்கு?


===============


தமிழகத்தை ஆளும் கட்சியாக, பா.ஜ., வளரும்.-தொழில்நுட்பத் துறை அமைச்சர், ஹர்ஷவர்தன் # ரஜினியையே பிஜேபி க்கு இழுத்தாலும் அது மட்டும் நடக்காதுங்க்ணா


==================== பா.ஜ.,வின் சர்க்கஸ், தமிழக மக்களிடம் எடுபடாது. # திமுக வின் நாடகம்  மக்களிடம் எடுபடாதுனு அவங்க சொல்வாங்களே?


=====================

அ.தி.மு.க., என்ற குழம்பிய குட்டையில், மீன் பிடிக்க ஆசைப்படுகிறது, பா.ஜனதா -ஸ்டாலின் # நாமும் தான் முயற்சி செஞ்சோம், முடியல


====================


ஜல்லிக்கட்டு இளைஞர்களின் ‘என் தேசம் என் உரிமை’ புதிய கட்சி உதயம்: தேர்தலில் போட்டியிடவும் முடிவு # கட்சிப்பேர்லயே வாக்களிக்கும் அடையாள “மை” இருக்கு, அருமை==================

10 திராவிட இயக்கங்களுக்கு சோதனையான காலம் இது: வைகோ # அப்போ தமிழகத்துக்கு விடிவு காலம்னு சொல்லுங்க

==================
11 ஹைட்ரோகார்பன் திட்டத்தை மக்கள் விரும்பாவிட்டால் கைவிடப்படும்: தமிழிசை # மண்ணைக்கவ்வினாலும் மீசைல மண் ஒட்டலை மொமெண்ட்

====================

12 எனது பிறந்தநாளில் பொன்னாடைக்கு பதில் புத்தகங்களை வழங்குங்கள்- ஸ்டாலின் # "பாக்கெட்"நாவல் கொடுங்க.பத்திரமா கிழியாம பாத்துக்குவாரு


================13 அம்மாவை குற்றவாளி என சொல்வது வேதனையாக இருக்கிறது - சி.ஆர்.சரஸ்வதி

# இத்தனை பேர் அம்மா ன்னு கூப்ட்டும் குற்றம் செஞ்சாங்களேனு வேதனையா இருக்கு எங்களுக்கு
==============

14 விவசாயிக்கு ஒரு பிரச்சனை எனில் பாஜக சும்மா இருக்காது தமிழிசை # ஒரு பிரச்னைன்னா பரவால்ல , ஏகப்பட்ட பிரச்னை மேடம், பார்த்து செய்ங்க,

================

15 பிப்.28 ஆம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் சம்பளம் க்ரெடிட் ஆகும்போதுதான் இப்டி பண்ணுவீங்களாய்யா?

==============

16 ஓபிஎஸ் விலகியதால் அதிமுக பரிசுத்தமாக ஆகிவிட்டது -
-நாஞ்சில்சம்பத் # சசிகலா குடும்பம் விலகிட்டா வேணா கட்சி சுத்தம் ஆக வாய்ப்பு இருக்கு

=============

17 பறவைகளை தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையுமாம்! - ஆய்வில் தகவல்
# மைனா,கூண்டுக்கிளி னு சினிமா பாத்து குறைக்க முடியுமா?

=================

18 பறவைகளை தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையுமாம்! - ஆய்வில் தகவல்
# பறவைக்காய்ச்சல் வந்துடாதே?

==================

19 எதற்கெடுத்தாலும்போராட்டம் நடத்தினால்தமிழகத்தின் எதிர்காலம்பாதிக்கும்:தமிழிசை # போராட்டம் நடத்தலைன்னா கடந்த காலம் போல் நிகழ்காலம் பாதிக்கும்

=================

20

உள்ளாட்சி தேர்தலில் மதிமுக தனித்து போட்டி: வைகோ #
கேப்டன் மைன்ட் வாய்ஸ் - கிரேட் எஸ்கேப்.நமக்கு நல்ல நேரம் தான்


=================

0 comments: