Thursday, March 16, 2017

வங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தில் SBI முதலிடம்?

தாம்பரத்தை தாண்டினால் தாமரையை யாருக்கும் தெரியாது- குஷ்பு வசீகரா பாட்டு மூலம் தாமரை ஆல் சென்ட்டர் ரீச் ஆன கவிதாயினி ஆகிட்டாங்களே?

=================

2 ரோஹித் வெமுலாவின் மர்ம மரணத்திற்காக நீதி கேட்டு போராடி வந்த மாணவர் முத்து கிருஷ்ணன் தற்கொலை! # ராம்குமார் போல் இதுவும் மர்ம மரணமே

===============

3 அதிமுக எத்தனை அணிகளாக பிரிந்து போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறும்-ஸ்டாலின் # எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்தால் எதிர்க்கட்சிக்கு சாதகம்

===========

4 கச்சத்தீவை தாரைவார்க்க கருணாநிதிக்கு இந்திராகாந்தி பணம் அளித்தார்"- சு சுவாமி # தானை தலைவர் எப்பவும் லஞ்சத்தை பணமா வாங்க மாட்டாரே?

===============

5 வங்கி மோசடியில் ICICI முதலிடம்; 2ம் இடத்தை பிடித்தது SBI# வங்கிக்குள்ளேயே நடத்தப்படும் பகல் கொள்ளை கட்டணத்தில் SBI முதலிடம்?

==============

6 RKநகர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வெற்றி உறுதி-பொன்.ராதா # டெபாஸிட் வாங்கினாலே தமிழக அரசியலில் பாஜக வுக்கு வெற்றி தானே?

=============

7 கோயம்பேட்டு - கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல் # "மாம்பழம் " சீசன் வந்தும் டைம் சரி இல்ல.பாவம்

================

8 ரூ.40க்கு பதில் 4 லட்சம் ரூபாயை டாக்டரின் அக்கவுண்டில் இருந்து தீட்டிய டோல் பூத்!! @கர்நாடகா மதிப்பில்லைனு சமாளிப்பாங்களோ?

===================

9 தமிழக அரசின் ரூ 2950 கோடி கடன் கோரிக்கையை நிராகரித்தது உலகவங்கி: செய்தி-# தமிழ்நாடு உலக லெவல் பேமஸ் போல

=================

10 உலகிலேயே ஜனநாயகம் உள்ள மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா: மோடி # அத்வானியை அத்துவானக்காட்டில் அத்து விட்டப்பவே தெரியும் ஜி

================

11 கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: தமிழிசை # அப்பா செஞ்ச தப்புக்கு மகன் என்ன செய்வார்?பாவம்
=====================

12 மக்கள் மீது அக்கறை இல்லாத ஆட்சி நடக்கிறது -கனிமொழி # ஆமா .கலைஞர் ஆட்சின்னா தன் வீடு ,மனைவிகள் ,தன் மக்கள்
மீது அக்கறை வெச்சிருப்பாரு

============

13 அண்ணா பல்கலை. துணைவேந்தர் நியமனத்திற்கு எடப்பாடி ரூ.50 கோடி லஞ்சம் வாங்கினார்-EVKS # ரொம்ப கம்மியா இருக்கே? சசிகலா வுக்கு பங்கு போகனுமே?

================

14 அரசியலில் நீங்க ஒரு PHD என ஜெ என்னை கூறினார் -TR# ஒரு மரியாதை நிமித்தம் சொல்லி இருப்பார்.அதை எல்லாம் சீரியசா எடுத்துக்கலாமா?

================

15 ஆந்திராவில் ஒரே ஒரு பல்புக்கு 8 லட்சம் மின் கட்டணம்.. விவசாயி அதிர்ச்சி: # இப்டி ஷாக் நியூஸ் தந்து மீடியா கிட்டே பல்பு வாங்குதே மின் துறை

==================

16 ஜெ மரணம் தொடர்பாக தற்போது தமிழக அரசு விசாரித்து வருகிறது: மத்திய அமைச்சர் ஜெயக்குமார். # திருடன் கையில் பீரோ சாவி கொடுத்த கதை

==================

17 தமிழக மக்களின் ஒட்டுமொத்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு ---மோடி--- தமிழிசை # சர்வரோக நிவாரணி ரேஞ்சுக்கு இறங்கிட்டீங்களே?

===================

18 பாஜகஆட்சியில்முஸ்லிம்கள் பாதுகாப்பாகஇருக்கிறார்கள் தமிழிசை # அப்போ இந்துக்கள் ,கிறிஸ்துவர்கள் பாதுகாப்பா இருக்க காங் ஆட்சி வரனுமா?

==================

19 கமல் நன்றி மறந்து செயல்படுகிறார்: முதல்வர் பழனிசாமி # ஜெ இல்லாததால் பயம் இன்றி துணிச்சலாக செயல்படுகிறார்

=================

20 கமல்ஹாசன் நன்றி மறந்து செயல்படுகிறார்: முதல்வர் பழனிசாமி .அடுத்த ஸ்டெப் ஆழ்வார்ப்பேட்டை கரன்ட் கட் ,பைப் நீர் கட்?

==================


0 comments: