Tuesday, March 14, 2017

ஆமை, சசிகலா , தனுஷ் , சீமைக்கருவேல மரம் என்ன ஒற்றுமை?

மாமன் பொண்ணைக்கட்டிக்கறேன்னு சொல்ற மாடசாமியை நம்பு.
லோன் ட்யூ கட்றேன்னு சொல்ற விஜய் மல்லய்யாக்களை நம்பாதே

===============

2 குடி,புகை ,SBI A/C இம்மூன்றும் வீட்டுக்கு நாட்டுக்கு கேடு

===============

3 ரஜினி மைன்ட் வாய்ஸ் - நல்லவேளை.நம்ம பொண்ணுங்க சினிமா ல நடிக்கலை


கமல் மை வா - நம்ம பொண்ணுங்க புரொடியூசர் ஆகலை


===============

4 நம்ம ஜனங்களுக்குத்தெரிஞ்சதெல்லாம் ஆளுங்கட்சிக்கு எதிரா வாக்களித்துத்தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதே

================

5 காமராஜர் ,இரோம் ஷர்மிளா இவர்களின் தோல்விக்காக வருத்தப்பட வேண்டியது ,வெட்கப்பட வேண்டியது சம்பந்தப்பட்ட ஜனங்களே.அந்தத்தலைவர்கள் அல்ல

=============

6 ஐஸ்வர்யா ரஜினி க்கு பரத நாட்டியத்தில் நளினமும்
ஸ்ருதி கமலுக்கு குரலில் பெண்மையும் மென்மையும் வர்லை

===================

7 ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் வரும் காஜல் அகர்வால் கேரக்டர் க்கு ஐஸ்வர்யா ரஜினி தான் இன்ஸ்பிரேசன் போல

===============

8 மேடம்.சமையல் ஓவர் னு ஒரு போட்டோ அப்லோடு பண்ணி இருக்கீங்க


யா
அதுல 3 குண்டாவும் தட்டம் போட்டு மூடி வெச்சிருக்கே?எப்டி தெரியும்?


===============

9 ஷர்மிலி நின்னிருந்தா ஜெயிக்க வெச்சிருப்பானுங்க.இரோன் ஷர்மிளா நின்னதால தோக்கடிச்ட்டாங்க

================

10 பலரோட குடும்ப வாழ்க்கையை கெடுத்தா அது தனுஷ

பரத நாட்டியக்கலையையே கெடுத்தா அது ஐஸ்வர்யா தனுஷ்


===============

11 மோடி எதிர்ப்பாளர்கள் பலர் 3/5 தோல்வி என கொண்டாடுகின்றனர்.ஆனால் உபி வெற்றியும் அதன் சீட் எண்ணிக்கையும் பிரம்மாண்டமான வெற்றி

=================

12 ஆகாய தாமரை அளவுக்கு அதிகமாக வளர்வது குளத்துக்கு/நீர் வளத்துக்கு ஆகாது.
தாமரை வளர்ச்சி பெறுவது நம் குலத்துக்கு ஆகாது

=============

13 ரஜினி -,தங்கமகன் ல டான்ஸ் போட்டில நான் ஜெயிச்சதையே ஏத்துக்கிட்ட ஜனங்க என் பொண்ணு டான்ஸ் ஆடுனதை ஏன் ஏத்துக்கலை?
கமல்- ஐ நா சபைல மானம் போச்சே

================

14 பணம் கையில் அதிகமாய் புரண்டாலும் பெரியோரிடம் பணிவுடன் இரு.

கோபம் மனதில் கொந்தளித்தாலும்
எளியோரிடம் கனிவாய் இரு


===============

15 எப்போது யார் மீது அன்பு கொண்டாலும் அந்த நொடியே அவரிடம் அன்பை சொல்லிவிடு.
எப்போது யார் மீது கோபம் வந்தாலும் அதை தள்ளிவிடு

===================

16 கோயில் விசேஷங்களில் சாமி ஆடும் ஆட்கள் நம்மை ஏமாத்தறாங்களா?அவங்களை அவங்களே ஏமாத்திக்கறாங்களா?

==================

17 பேரில் கருணை உள்ளவங்க எல்லாரும் கருணை /காருண்யம் மிக்கவர்கள்னு சொல்லிட முடியாது , உதா - கருணாநிதி, கருணாஸ், கருணைமலர் எல்லாரும் பக்கா அசைவம்

===============

18 ஆமை புகுந்த வீடு
சசிகலா புகுந்த நாடு
தனுஷ் புகுந்த குடும்பம்
சீமைக்கருவேல மரம் வளரும் நிலம்
நான்கும் விரைவில் நாசம் ஆகும்

==================

19 தியானத்தை முடிச்ட்டு நான் தான் ஜெ வோட உண்மையான மகள்னு ஒரு குண்டைத்தூக்கிப்போடப்போகுது தீபா, அவனவன் ஆடிபோய்டுவான்

============

20 ஜெ சமாதில இன்னும் கலைஞர் , ஸ்டாலின் வகையறா மட்டும் தான் தியானம் பண்ணலைனு நினைக்கறேன்

===================

0 comments: