Wednesday, March 15, 2017

சேவல் கூவினா உதய சூரியன் உதிச்சிடுமே? பரவால்லியா?

1  பாமக தூத்துக்குடி மாவட்டத் தலைவர்.மாரியப்பன் நாம்தமிழர் கட்சியில் இணைந்தார். # அடிக்கடி கட்சி "மாறி"யப்பன் என அழைக்கப்படுவார்


===============2 தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும்-கமல்ஹாசன்

# அப்டி நடந்தா சந்தோஷம் திமுக வுக்கு.தோஷம் அதிமுக வின் 3 கோஷ்டிகளுக்கு

==============

3 சூரியன் அஸ்தமனம் தொடங்கிவிட்டது, இரட்டை இலை உதிர்ந்து விட்டது:் ராமதாஸ் # ஆனா மாம்பழ சீசன் மட்டும் கண்ணுக்கு தட்டுப்படவே மாட்டேங்குதே ஐயா

=============
4 இடைத்தேர்தலில் த.மா.கா.வுக்கு நம்பிக்கை இல்லை:வாசன் # வீரம்னா என்ன தெரியுமா?நம்பிக்கை இல்லைனு கட்சியை நட்டாத்தில் விடுவது

===============

5 ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள கட்சிகள் திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் - ஸ்டாலின்# கட்சிங்க ஆதரவு போதுமா?மக்கள் ஆதரவு வேணுமே

=================

6 'பா.ஜ.க மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை...!'- திருநாவுக்கரசர்# காங் மீதும்.நம்பிக்"கை"இல்லை

=================

7 நாடு முழுவதும் காவிமயம் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது-தமிழிசை மட்டும் காவி மாயம்.ஆகிடும்

============

8 மநகூ ஆதரவு அளித்தால் திமுக வரவேற்கும்-ஸ்டாலின்# திமுக வரவேற்றால் மநகூ ஆதரவளிக்கும்னு திருமா சொல்வாரா?

==================

9 மேட்டூர்- நீர்மட்டம் குறைந்ததால் 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு#கிடக்கறதெல்லாம் கிடக்கட்டும் கோகோகோலா வுக்கு தாமிரபரணியை எழுதி வை

===============
10 15 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும்! - உலக வங்கி ஆய்வு!
# 14 வருசம் பிந்தியே இருக்கும் என பொருள் கொள்க

==============


11 பெண்ணை வைத்து சூதாடியதை புத்தகமாக படிக்கும் ஊர் தான் இது

-கமல் # சொந்தப்பொண்ணையே கிளாமரா நடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதும் இதே ஊர் தான்

===============


12 நான் ஆடிய பரதத்தை விமர்சிக்கும் தகுதி யாருக்கும் இல்லை.

-ஐஸ்வர்யா ரஜினி வந்துட்டா விமர்சனத்தை தாங்கிக்கும் பக்குவம் வேணும்

==============

13 DMKகூட்டணிக்கு TMCவந்தால் ஆட்சேபனை இல்லை -திருநாவுக்கரசர்# யார்.வந்தாலும் நமக்கு ஆட்சேபனை இல்லை.வாக்கு 1%,ஏறுனாலும்லாபம்


=================

14 RKநகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு தான் வெற்றி வாய்ப்பு இருக்கிறது: குஷ்பு இலை சின்னம் முடக்கப்பட்டா வாய்ப்பு உண்டு

====================

15 சசி அணிக்கே இரட்டை இலை கிடைக்கும் வாய்ப்பு - ' சுசுவாமி # எல்லா ராணுவ ரகசியங்களும் இவருக்கு முன் கூட்டியே தெரிஞ்சிடுதே எப்டி?

===============


16 உண்மையான AIADMK நாங்கள் தான்-தம்பிதுரை
டயலாக்கை 3 கோஷ்டிகளும் சொன்்னா எப்டி?

==================

17 தமிழகத்தில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு! மறைமுகமாக உயர்த்தியது பழனிசாமி அரசு # இதுதான் உங்க சிலபஸ்ஸா? பல பஸ்சையும் எக்ஸ்பிரஸ் பஸ் ஆக்கிட்டா எப்டி?

=====================

18 

சேவல் சின்னம் கேட்கிறார் தீபா # சேவல் கூவினா உதய சூரியன் உதிச்சிடுமே? பரவால்லியா?

==================

19 என்னை அமைதிப்படுத்தலாம்; கட்டுப்படுத்த முடியாது : நடிகர் கமல் ஆவேசம் # குழப்பாதீங்க, அமைதிப்படுத்தினாலே அது கட்டுப்படுத்தியது போல் தானே?

==================

20 போரூர் ஏரி-சென்னைக்கு தினசரி 4 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க முடிவு..# பப்ளிக் குடிக்க னு சொல்லி எடுத்து வெளில வித்துடாம இருந்தாசரி


==================

0 comments: