Friday, March 17, 2017

அப்பா ,தங்கை னு இப்டி குடும்பத்தையே பகைச்சுக்கிட்டா எப்டி?அனுசரிச்சு போகக்கூடாதா?

கமல் கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்தது உண்டா.
-எடப்பாடி # விருமாண்டி ,சிங்காரவேலன்னு ஏகப்பட்ட பட ஷூட்டிங் கிராமங்களில்தானே நடந்தது?

=============

2 ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளருக்கே வெற்றி: நாராயணசாமி # இவரோட ராசிப்படி 15 ஓட்டு வித்தியாசத்தில் புட்டுக்கும்னு நினைக்கறேன்

===============

3 ஜாமீன் வேண்டுமா? - 100 சீமைக்கருவைகளை அகற்றுங்கள்... அரியலூர் மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு.# நீங்க ஜாமீன் குடுத்தா போய்.வெட்றோம்னு கேட்டுடப்போறாங்க

===============

4 இரட்டை இலை தற்போது மோடியின் கையில் இருப்பதாக கருதுகிறேன்: திருநாவுக்கரசர் # தாமரைக்குக்கீழே இலை இருப்பது இயற்கை தானே?

==============

5 மக்கள் நலக்கூட்டணியை மக்கள் பொருட்படுத்துவதில்லை: திருநாவுக்கரசர் மட்டும் ஆரத்தி எடுத்துவரவேற்பு தர்றாங்களா?

===============

6 தமாகா உட்பட எந்த கட்சி திமுகவிற்கு ஆதரவு தந்தாலும் காங்கிரசுக்கு ஆட்சேபனை இல்லை: திருநாவுக்கரசர் # சத்திரம் மாதிரி கட்சி னு சொல்லுங்க

=============

7 திமுகவை மட்டும் தான் எதிர்க்கட்சியாக கருதுகிறோம் - தினகரன் #,ஏன்னா சின்னம்மா ஜெயிலுக்குப்போனதே திமுக தொடுத்த.வழக்கால்தானே?


===============

8 RK நகரில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - தினகரன் #,அழகிரி பார்முலாவா?

==============

9 RKநகர் தொகுதியில் வெற்றி பெற்றாலும் முதலமைச்சராகும் எண்ணம் இல்லை- தினகரன் # இப்போதான் எங்களுக்குடவுட்டே வருது

===============

10 ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது.#,தமிழனுக்கு திரும்பின திசை எல்லாம் சனி திசையா இருந்தா என் செய்வான்?

==============

11 தமிழக மின்சாரவாரியம் ஊதாரித்தனமாக செயல்படுவதாக சிஐடியு குற்றச்சாட்டு! # குடும்ப ஜோசியர் ஊதா கலர் ராசினு சொல்லி இருப்பாரோ?

=============

12 மஹா பாரதத்தை இழிவு செய்யும் வகையில் பேசியதாக கமல் மீது இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் மனு! # என்னமோ கமல் பேட்டி முழுசா புரிஞ்ச மாதிரி

=============

13 வாழ்நாள்முழுவதும் ஊழலுக்கு எதிராகநிற்பேன்-ஸ்டாலின் # அப்பா ,தங்கை னு இப்டி குடும்பத்தையே பகைச்சுக்கிட்டா எப்டி?அனுசரிச்சு போகக்கூடாதா?

==============

14 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு wifi - மனோஜ்சின்கா 
சேகரிப்பு,விவ்சாயம் தழைக்க அடிப்படை வசதி முதல்ல ரெடி பண்ணுங்க

==============

15 உ.பி, உத்தரகாண்ட் தேர்தலில் பெற்ற
வெற்றி கற்பனைக்கு எட்டாதது -மோடி# எல்லாம் ஆளுங்கட்சி எதிர்ப்பு வாக்கு.அம்புட்டுதான்


==================

16 நீட் வேண்டாம் என்பதே தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைத்து மதிப்பிடுவதாக கருதுகிறேன்: நீதிபதி கிருபாகரன் # நீட்டா இருந்தா பிடிக்காது

==================


17

ரூ.50க்கு ஏ.டி.எம்., கார்டு: அசத்துகிறது தபால் துறை # போஸ்ட் ஆஃபீஸ் தான் பெஸ்ட், மத்த பேங்க் எல்லாம் வேஸ்ட்


=========================

18 தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என, ஒரு தாளில் கையெழுத்திட்டு கொடுத்தால் தான், பா.ம.க., தேர்தலில் போட்டியிடும்-ராமதாஸ்# போகாத ஊருக்கு எதுக்கு வழி கேட்டுட்டு?


==================


19 பணத்தைக் காட்டி வளைக்க முடியாது: தி.மு.க., வேட்பாளர் தடாலடி பேட்டி # ஆமா, சும்மா கண்ல காட்னா ஏமாற மாட்டோம், கைல காசு வாயில தோசை


==================


20  முதல்வர் பழனிசாமியிடம், எதைக் கேட்டாலும் தெரியாது என்கிறார்.- துரைமுருகன் # தெரியும் என்பதற்கு எதிர்ப்பதம் என்ன?னு கேட்டிருப்பீங்க

=======================

0 comments: