Wednesday, March 01, 2017

ஆனா நம்ம வீட்டுக்குழந்தைகள் மட்டும் ஆங்கிலம் , ஹிந்தி படிக்கறாங்களே, அது?

ஜெயா டிவிக்கு போட்டியாக அம்மா டிவி விரைவில்: ஓபிஎஸ் அணி # அம்மா டிவிக்குப்போட்டியா சின்னம்மா டிவி 1 வருமோ?


======================2 எனக்கு முதல் எதிரி திமுக தான்- தீபா #,மேடம்.அப்போ உங்க கணவர் மாதவன் ?============3 யார்யாரோ அமர்ந்து விட்ட CMபதவியில் தாமும் அமர வேண்டுமா என்ற சிந்தனை ஏற்படுகிறது..-ஸ்டாலின் # அவ்ளோ நல்லவர்னா அன்பழகனை முன் மொழியலாமே?==============4 காய்த்த மரம்தான் கல்லடி படும் -H ராஜா # அரசியல்வாதிங்க மரம் மாதிரி நின்னுட்டிருக்காம ஆக்கபூர்வமா எதுனா செஞ்சா தேவலை==============5 அதிமுக ஒண்ணானா என்ன மண்ணானா என்ன,மக்களின் வாழ்வு பொன்னாக வழி என்ன இருக்கு?-சீமான் # நகைக்கடை ஓனர் பொண்ணை கட்டனும்================6 ஜியோ நிர்ணயித்திருந்த இலக்கைவிட 50%க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் ன்னா பினாயில் பாட்டில்னாலும் விட மாட்டாங்க============7 என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு-தீபா # யாருக்கும் டெபாசிட் கிடைக்காதுனு பேசுனது மழலைத்தனமானது===========8 அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் - ஜெ.தீபா # 7%ஓட்டு வாங்கினாலே அது எட்டாவது அதிசயம்.============9 பெண் கொலை:‘‘கரும்பு தோட்டத்தில் வாலிபருடன் நெருக்கமாக இருந்ததால் கொன்றேன்’’ கைதான கணவன் # வாழைத்தோப்பு மாந்தோப்புன்னா விட்டிருப்பாரா?================10 மதுசூதனனை, ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்’-OPS # பதிவாகும் வாக்கே 1 லட்சம் தான் இருக்கும்.100% கேட்டா எப்டி?===========11 சசிகலா பற்றி 10 % கூறியுள்ளேன் 90 %எனக்குள் புதைத்து கொண்டேன்-OPS# ஏன்?தள்ளுபடி.விழா வா நடக்குது?நேர்மையானவர்னா பதவில இருந்தப்போவே சொல்லி இருக்கலாமே?==============

12 மதுவில் தண்ணீர் கலந்து விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது# தண்ணி ல மது கலந்து வித்திருந்தா விட்டிருப்பாங்க


=============13 RKநகர் இடைத்தேர்தலில் வெளி மாநில அதிகாரிகளை பயன்படுத்த வேண்டும் -காங்., கோரிக்கை...

# அப்டியே வாக்காளர்களையும் வெளில இருந்து இறக்கிடப்போறாக

================


14 RK நகர் இடைத்தேர்தல் தினகரன் க்கு SDPI கட்சி ஆதரவு
# இது யாரு?STD பூத் அசோசியேசனா?

================


15 நெடுஞ்சாலையில் ஆங்கிலத்தை அழித்து இந்தியில் எழுதுவதை நிறுத்தவேண்டும்: - #  ஆனா நம்ம வீட்டுக்குழந்தைகள் மட்டும் ஆங்கிலம் , ஹிந்தி படிக்கறாங்களே, அது?


=======================

16 நான் நன்றி உள்ளவன். அ.தி.மு.க.,வில், எம்.எல்.ஏ.,வாக இருந்தவன். இதனால், ஜெ.,வை திட்ட மாட்டேன்.- ராதாரவி # அதாவது அவங்க ஓட்டும் வேணும், இவ்ங்க ஓட்டும் வேணும் ஃபார்முலா?


======================


17  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தில்லுமுல்லு செய்து வெற்றி பெற, ஆளுங்கட்சி முயற்சித்து வருகிறது. -ஸ்டாலின்:  # எல்லாம் திருமங்கலத்தில் அண்ணன் காட்டிய வழி தான்


====================

18 ஹிந்தி எதிர்ப்பு போராட்ட களத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் - ஸ்டாலின் # கடைசி வரை நம்ம வாழ்க்கை ஒரே போராட்டமா மட்டும் அமைஞ்சிடும் போலயே?


===================

19 தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் பேட்டி: 'ஆன்லைன்' வர்த்தகத்தை, எந்த அரசியல் கட்சியினரும் எதிர்க்காமல், கள்ள மவுனம் சாதிக்கின்றனர். # வெள்ளையனே வெளியேறுன்னு சொல்லிடப்போறாங்க

======================

20 ஹைட்ரோ கார்பன் திட்டத்தில், மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ளது- ஸ்டாலின் # அப்போ இரட்டை இலை , இரட்டை நிலை இரண்டையும் எதிர்க்கறீங்க?

========================

0 comments: