Friday, March 10, 2017

இப்போ எதுக்கு வாண்ட்டடா ஜீப் ல ஏர்றாரு வண்டு முருகன்?

ஜெயலலிதாவுக்கு,31டாக்டர் சிகிச்சை அளித்தனர்  # 31 டாக்டர்கள் சுத்தி நின்னா மூச்சு விடவே முடியாதே?அப்போ அவங்க தான் ஜெ மரணத்துக்குக்காரணமா?


=================அதிக லஞ்சம் புழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா... 'நம்பர் ஒன்': # லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்னு சகாயம் சார் சொன்னதை ஒரு பய மதிக்கல போல


=============

3 லஞ்சம் கொடுப்பதில் இந்தியா டாப் # கொடுத்து கொடுத்து சிவந்த கரம்

============
4 தமிழகம் முழுவதும், ரேஷன் கடைகள் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்- தமிழிசை  # தமிழகத்தில் 30,238 ரேஷன் கடைகள் இருக்கு, அத்தனை பிஜேபி தொண்டர்கள் உண்டா?

================

 தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க, 'கோக கோலா' கம்பெனிக்கு, கோர்ட் அனுமதி அளித்து உள்ளது. இதனால், நீதிமன்றத்தின் மீது, மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.-வெள்ளையன்  # கேள்வி கேட்டா நீதி மன்ற அவமதிப்பும்பாங்க 

=================


தமிழகத்தில், ஒரு கைதியின் கட்டுப்பாட்டில் தான் ஆட்சி நடக்கிறது.-த.மா.கா., இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா #  மடமை ,  பெண்ணியம்,.   கைதியின் கட்டுப்பாடு


=====================

7  செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் பொருளாதார பாதிப்பில்லை': மோடி # ஃபாரீன் டூர் கேன்சல் பண்ணிட்டு இந்தியா ஃபுல்லா ஒரு டூர் அடிக்கவும்

====================

8  

====================

9  திருவண்ணாமலை:முயல் வேட்டையாட முயன்றவரை,பிடித்த வனத்துறையினர், 30,000 ரூ அபராதம் # துரத்தும்போது  ஆமை வேகத்தில் ஓடி மாட்டிக்கிட்டாராம்

====================

10  இளம் நடிகையர், படுக்கை அறையில் கூட செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும்,''  டி.ராஜேந்தர்  # ஆமா அதனால மாட்டிக்கறது தனுஷ் , சிம்பு வகையறாக்கள்தான்

=====================

11 ஜெ., மறைவுக்கு பின் தலைதூக்கும் அமைப்புகள் : பொன்.ராதா # அதுல மெயின் நம்ம பிஜேபி தானுங்க்ணா

==================


12 நெடுவாசலில் ரொம்ப ஆழமாகத் தோண்டத் தேவையில்லை - தமிழிசை # புதைகுழி 6 அடியா இருந்தாலும் ,60 அடியா இருந்தாலும் ஆபத்துதானே மேடம்?

===============

13 மீத்தேன் வேறு
ஹைட்ரோ கார்பன் வேறு -தமிழிசை# நல்லவேளை.பாஜக வேறு ,BJP வேற னு சொல்லலை

===============

14 பொன்.ராதா, தமிழிசை உள்ளவரை தமிழகத்தில் பாஜக வளராது” : டி.ராஜேந்தர் # அவங்க இல்லைன்னா மட்டும் வானளாவ வளந்துடுமா?

=================

15 இனி SBI ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தபடியே வேலை செய்யலாம்.#5000 மினிமம் பேலன்ஸ் கட்டாயம்னா அப்டியே வீட்லயே இருந்"துக்க" வேண்டியதுதான்

==================

16 தண்டனை பெற்றவர்கள் எல்லாரும் குற்றவாளிகள் அல்ல-டிடிவி.தினகரன் # 4,வருசம் கம்மி.40 வருசம் தீட்டி இருக்கனும்

=============

17 சி.பி.ஐ என்னிடம் விசாரித்தால் அப்போலோ மர்மம் சொல்வேன்!-OPS # இப்போ எதுக்கு வாண்ட்டடா ஜீப் ல ஏர்றாரு வண்டு முருகன்?

=================

18 ஏழு மொழிகள் எனக்கு தெரியும் -சு.சாமி # சக மனிதரை மதிக்கத்தெரியாமல் 700மொழி அறிந்திருந்தாலும் அந்த அறிவு வீணே!

=============

19 தண்டனை பெற்றவர்கள் எல்லாரும் குற்றவாளிகள் அல்ல-டிடிவி.தினகரன்
மாதிரி ஆபாயில் அறிக்கை.விடுபவர்கள் எல்லோரும் அறிவாளிகள் அல்ல

=================

20 அரசியலில் குதிக்கிறார் கமல் -செய்தி # சினிமாவில் இவர் போல் நடிக்க ஆள் இல்லை.ஆனால் அரசியலில் இவரை விட பெரிய நடிகர்கள் உண்டு

=============

0 comments: