Sunday, March 12, 2017

யோக்கியனுக்கு இருட்ல என்ன வேலை?

விமான பயண கட்டணம் குறைப்பு-செய்தி # குப்புசாமிக்கு உதவுங்கன்னா இவரு விஜய் மல்லய்யாக்களுக்கு உதவிட்டு இருக்காரு


============2 தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்.

# டாஸ்மாக்ல மிக்சிங்க்கு ஒன்லி சோடா.நோ H2O

============

3 பேடிஎம்மிற்கு பணம் ஏற்ற 2% சர்வீஸ் சார்ஜ்!

# பேடித்தனமான பிஸ்னெஸ்


===========

4 சசிகலா ஆணையிட்டால் R.K.நகரில் போட்டியிடுவேன் - தினகரன் # அவர் ஆணை இட்டால் ,அது நடந்துவிட்டால் இங்கு நீதிதேவதை வரமாட்டார்

============

5 கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள் # சுண்டைக்காய் கால் பணம் ,சுமைக்கூலி முக்கால் பணம்

===================


6 RKநகரில் போட்டி உறுதி..OPS அணி ஆதரவளித்தால் ஏற்கப்படும்: தீபா அங்கே போட்டியிட்டா நீங்க ஆதரவு தருவீங்களா?

================

7 கச்சத்தீவை மீட்டால் மட்டும் மீனவர்கள் பிரச்சினை தீராது - பொன். ராதா # அரசியல்வாதிங்க வாயை.வெச்சுட்டு.சும்மா இருந்தாலே பாதி பிரச்னை தீரும்

===============

8 ஜெ மரணத்தில் முதல் குற்றவாளி யார்? OPS,விஜயபாஸ்கர் ஒருவர் மீது ஒருவர் புகார் # சசி மைன்ட் வாய்ஸ் -இங்கே நான் ஒரு ஆள் இருக்கறதையே மறந்துட்டீக

==================

9 RKநகர் தொகுதி அ.தி.மு.கவின் 3 அணிகள் போட்டியிடுவதால் திமுக உற்சாகம். #45% /3= 15% *3 ஆக பிரிஞ்சா 30% ஜெயிக்குமில்ல?

=================

10 “கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறானவை"- ராகுல் காந்தி # நமக்கு சாதகமா வந்தா ஜாதகம் சரி.பாதகமா வந்தா தப்பு.அதானே?

==================

11 மணிரத்னத்தின் ‘தளபதி-2’ படத்தில் விஜய்-விக்ரம் # அப்போ 2 தளபதி னு ஒரு அர்த்தம் வருதே?தளபதி ரசிகர்கள் ஒத்துக்குவாங்களா?

=================

12 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடுகிறது .# அப்ப செம என்ட்டர்டெயின்மென்ட் காத்திருக்கு

=================

13 தாங்கமுடியாத கடனில் தத்தளிக்கிறது அரசு:ஸ்டாலின்
# அப்பா கிட்டே சொல்லிஅந்த 1 3/4 லட்சம் கோடி யை கொடுத்து உதவலாமில்ல?

================

14 ஒரே தவணையில் கடனை செலுத்த ரெடி-மல்லையா
# வேற லோன் குடுத்தாகட்டிடுவாரு.அதானேட்விஸ்ட்?

================

15 திமுக ஆதரவளித்தால் ஏற்கமாட்டோம் - தீபா # எதிர் வீட்டுக்காரன் பல்லக்கு தூக்கினா ஒத்துக்க மாட்டோம்.பக் வீடுன்னா ஓக்கே

====

16 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் ஆதரவு.# ஒரு ஊழல்வாதியோட கஷ்டம் இன்னொரு ஊழல்வாதிக்குத்தான் தெரியும்

===================

17 ஆர்.கே.நகர் தேர்தலை மதிமுக புறக்கணிக்கும்--வைகோ # எதுவுமே படிக்காதவன் எக்சாமை புறக்கணிக்கிறேன்னு வீராப்பா சொன்னானாம்

=============

18 பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தியதற்கு ஜியோ, பேடிஎம் நிறுவனங்கள் மன்னிப்பு# பக் வீட்டு லேடி பேரு மேரி.
மோடி பேரை யூஸ் பண்ணதுக்கு சாரி

================

19 தலித்தாக
இருப்பதால் தான்
என் மீது நடவடிக்கை-
நீதிபதி கர்ணன்
# மொள்ளமாரித்தனம் பண்ணிட்டு மாய்மாலம் எதுக்கு?யோக்கியனுக்கு இருட்ல என்ன வேலை?

============

20 தமிழகமக்கள்
குடிநீரை சிக்கனமாக
பயன்படுத்தவேண்டும்-வேலுமணி
.அப்போ தான் கொக்கோகோலாவுக்கு தாமிரபரணி யை தாரை வார்க்க முடியும்

===============

2 comments:

அன்பே சிவம் said...

நீர் மட்டும் கண்ணுல சிக்குனா அம்புடு 'தேன்'

அன்பே சிவம் said...

நீர் மட்டும் கண்ணுல சிக்குனா அம்புடு 'தேன்'