Friday, March 31, 2017

டோரா -சினிமா விமர்சனம்

Image result for dora tamil movie poster

பாஞ்சாலி போல் இதிகாசப்புகழ் பெற்ற நயன் தாரா நடிச்ச மாயா படம் ஹிட் ஆனதால் அதே டைப்பில் இன்னும் ஒரு பேய்ப்படம் கொடுத்து கிட்டத்தட்ட ஹிட் என்ற அளவில் ஒரு  மீடியம் பட்ஜெட் படம் தந்திருக்காங்க


ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல் திரைக்கதை இரு வேறு டிராக்கில் கதை சொல்லப்படுது


ஒரு அபார்ட்மெண்ட் ல  புதுசா கல்யாணம் ஆன லேடி தனியா இருக்கும்போது 3 கொள்ளைக்காரர்கள் வீடு புகுந்து 100 பவுன் நகையை கொள்ளை அடிச்ட்டு எக்ஸ்ட்ரா போனசா போற போக்குல கேங் ரேப்பும் பண்ணி மர்டரும் பண்ணிட்டுப்போறாங்க

 இந்த கொலை கேஸ் பற்றி துப்பு துலக்க போலீஸ் ஆஃபீசர் வர்றார். அவர் செய்யும் விசாரனைகள்  ஒரு பக்கம்

இன்னொரு பக்கம் நாயகி தன் அப்பாவோட தனியா வசிச்சு வருது. ஒரு கால் டேக்சி கம்பெனி ஆரம்பிக்கலாம்னு ஒரு அரதப்பழசான  காரை செகண்ட்ஸ் ல வாங்கி ( நயன் தாரா வுக்கு செகண்ட்ஸ்னா பிடிக்குமாம்-குறியீடு) பிஸ்னெஸ் ஸ்டார்ட் பண்றாங்க


 அந்த காருக்குள்ளே ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கு. எத்தனை நாளைக்குதான் பங்களாவில்   வீட்டில் சுடுகாட்டில் பேயைப்பார்ப்பீங்க ஒரு சேஞ்சுக்கு காரில் பேய். பாட்டி சொல்லைத்தட்டாதே படத்தில் வரும் சூப்பர் கார் போல இது ஒரு டூப்பர் கார்.

 அந்த கார் என்ன செய்யுது? அந்த கொலையாளிகள் 3 பேரையும் வரிசையா பழி வாங்குது ( ஒரே டைம்ல பழி வாங்கிட்டா 14  ரீல் படத்தை இழுக்க முடியாதில்ல?)


படத்தின் பேக் போன் , சந்தேகமே இல்லாம நயன் தாரா தான். அவரோட கெட்டப் , பாடி லேங்குவேஜ் , நடிப்பு , டிரஸ்ஸிங் சென்ஸ் எல்லாமே பக்கா . ( நம்ம கொள்கைல முக்கியமான கொள்கையே பொண்ணுங்களை பாராட்டுவதுதான் )  மாயா படத்தில் வரும் நயன் நடிப்புக்கும்  டோரா நடிப்புக்கும் நல்ல வித்தியாசம்  காட்டி இருக்கார். வெல்டன் ஆக்டிங்


தம்பி ராமய்யா அப்பாவா வர்றார். சொந்த மகள் கிட்டேயே “ என் பாடி இப்பவும் கிண்ணுனு இருக்குன்னு டபுள் மீனிங்க்ல பேசறார். காலக்கொடுமை.மற்றபடி அவர்  நடிப்பு , கேரக்டரைசேசன் எல்லாமே கனகச்சிதம்


போலீஸ் ஆஃபீசரா வர்றவர்  ஒக்கே ரகம். அந்த கேரக்டருக்கு ஒரு பிரபல ஹீரோவை போட்டிருந்தா  இன்னும் ஸ்டார் வேல்யூ ஏறி இருக்கும், ஏன் அப்டி செய்யலைன்னு பட டீட்டெய்ல்ஸ் படிச்சுப்பார்த்தப்பதான்  விக்னேஷ் சிவன் பேரு  தயாரிப்பு லிஸ்ட் ல இருந்தது. ரைட்டு. புரிஞ்சிடுச்சு. தனுஷ் மஈதிரி ஒரு ஹீரோவை நயனுக்கு ஜோடியா போட்டா நாம  மிக்சர் தான் சாப்பிடனும்னு புத்திசாலித்தனமா அதை அவாய்ட் பண்ணி இருக்கார் 


சபாஷ் இயக்குநர்

1  நயன் தாராவின் கேரக்டரைசேஷன் குட் . அவர் ஒவ்வொரு டைம் ஒவ்வொருவரிடம் அண்ணாமலை பாணியில் சவால் விடுவதும் அப்போ அப்பா அதை காலண்டரில் குறிக்க இடம் தேடுவதும் ரசிக்க வைக்கும் காமெடி 

2  ஃபிளாஷ் பேக் சீனில்  சின்ன வயசு நயனாக வரும் பாப்பா செலக்சன்  பக்கா. அந்த பாப்பா வுக்கான பாடல் காட்சி ஒரு ஒளிப்பதிவுக்கவிதை 


3  கொடூரமான வக்கிரமான காட்சிகள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இல்லாதது ஆறுதல்


 இயக்குநரிடம் சில கேள்விகள்


1  கிட்டத்தட்ட 14 வயசுப்பெண்ணை அந்த 3 பேரும் ரேப்புவது அதுக்கு பேய் ஆகி பழி வாங்குவது ஓக்கே ஆனா ஏன் பழி வாங்க 10 வருசம் டைம் ஆகுது? கோச்சிங்க் கிளாஸ் போய்டுச்சா பேய்?


2  எல்லா பெண்களையும் ரேப்பும் அந்த 3 பேர் நயன் தாராவை மட்டும் தாக்குதலோட நிறுத்ஹ்டிட்டாங்க . ரேப்பலை.  எதனால? சஷ்டி விரதமா? ஐயப்ப மாலை போட்டுட்டாங்களா?


3  நயன்  தன் அக்கா வீட்டுக்குப்போய் ஒரு உதவி கேட்குது. அப்போ அக்காவும் மாமாவும் உதவி செய்யாம துரத்தி விட்றாங்க, இந்தக்காலத்துல மல்கோவா மாதிரி மச்சினி அமைஞ்ச ஆம்பளை எவன் உதவாம அப்படி அனுப்புவான்?


4  ஓப்பனிங் சீன்ல 100 பவுன் நகையை கொள்ளை அடிச்ட்டு அந்த லேடியை பயங்கரமா தாக்கின பின் ரேப்பறாங்க. வழக்கமா ரேப்பிட்டு அதுக்குப்பின் தானே தாக்குவாங்க? குற்றுய்யிரும் குலை உயிருமா ஆக்கிட்டு ரேப்புவதில் என்ன இன்பம் கிடைச்சிடும்?

5  போலீஸ் ஆஃபீசர்  எல்லார் முன்னாலயும் பெண் பார்க்கும் வைபவத்தில் இங்கிதம் இல்லாம எனக்கு பெண் பிடிக்கலைங்கறாரு. ஒரு வாட்ச்மேன் கூட அப்படி சொல்ல மாட்டான்

6  போலீஸ் ஆஃபீசர் சந்தேகத்தின் பேரில் நயன் தாராவை  மிரட்டி விசாரிக்கறார், அடிச்சு இழுத்துட்டு வந்ததா வசனம் வருது, சட்டப்படி இரவில் பெண்ணை கைது செய்ய கூட ஒரு லேடி கான்ஸ்டபிள் இல்லாம எப்டி ?


7  போலீஸ் ஸ்டேஷனில்  நயன் அந்நியன் டைப்பில் மாறி மாறி டயலாக் பேசுவது அப்ளாஸ் வாங்குது. ஆனா ஒரிஜினாலிட்டி இல்ல

Image result for dora tamil movie stills


நச் டயலாக்ஸ்


1  கல்யாணம் ஆன ஆண்களுக்கு சபலம் ஜாஸ்தி

ஆம்பளைங்க துக்கத்துக்கு சரக்கடிச்சா ,பொண்ணுங்க தூக்கத்துக்கு சரக்கு அடிப்பாங்க போல.

SEE ப்பா


சீப்பா வா?
அய்யோ.இங்கே பாருங்கப்பா ன்னேன்


பைலட் யூனிபார்ம் போட்டுட்டு எதுக்கு கார் ஓட்ட வந்திருக்கீங்க?

காரு பிளைட் மாதிரி இருக்குனு சிம்பாலிக்கா காட்டத்தான்

இந்த உலகத்துல ஆம்பளை எத்தனை.வருசம் வேணா தனியா வாழ்ந்துடலாம்.ஆனாஒரு பொண்ணு தனியா வாழவே முடியாது

நயன் தாரா -என்னை விட அழகான பொண்ணு உனக்கு கிடைப்பாளா?சவால் ( சிம்பு ,பிரபு தேவா ,ஆர்யா,உதயநிதி.,விக்னேஷ் 5 ல யாருக்கு இந்த பஞ்ச்சோ?)
Image result for dora tamil movie poster

தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ஓப்பனிங் சீன் ல நயன் தாரா மஞ்சள் சுடி மஞ்சள் சால் னு மங்களகரமா டிரஸ்.இதே நாம போட்டா மஞ்ச மாக்கான் பாங்க

தம்பி ராமய்யா ,சூரி,ஈரோடு மகேஷ் 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை


என்ன ?
எதுனா பழங்கால அரதப்பழசான மொக்கை ஜோக் சொல்லி அவங்களே சிரிச்சுக்குவாக

3 போஸ்டரில் நயன் தாரா,சென்சாரில் ஏ சர்ட்டிபிகெட் ,கதையில்ரேப் இதெல்லாம் பார்த்து ஏமாறாதீர்.சீன் எதும் இல்ல.பொதுநலன் கருதி

 சி.பி கமெண்ட் - டோரா  தன்னை ரேப்பியவர்களை பழி வாங்கும் பேய்க்கதை - மாயா வுக்கு ஒரு படி கீழே , மாயாவதிக்கு ஒரு படி மேலே , ரேட்டிங் - 2.75 / 5, பி , சி செண்ட்டர்களில் ஓடும்

 ஆனந்த விகடன் எதிர்பர்ப்பு யூக மத்இப்பெண் - 41

0 comments: