Monday, March 20, 2017

ஆபரேஷன் தனுஷ் சக்சஸ்

விவசாயிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது : ராஜ்நாத்சிங்  # நிகழ்காலம் இருண்டு கிடக்கே என்பதுதான் இப்போ பிரச்சனையே


==================

பஞ்சாபில் விஐபி கலாசாரத்தை ஒழித்தார் அம்ரீந்தர் # விஐபிங்களுக்கு ஏதுங்க கலாச்சாரம், பண்பாடு எல்லாம், அதெல்லாம் சாமான்ய ஜனங்களுக்குத்தானே?

==================

ஆர்.கே. நகரில் யாருக்கும் ஆதரவில்லை: திருமாவளவன் # அடடா!  அப்போ இஅவரோட வாக்கு வங்கி 1 %  யாருக்குமே இல்லாம வீணா போயிடுச்சே?


===================


தினகரன் வெற்றி பெறுவார் என கூறுவது காமெடியாக இருக்கிறது - கங்கை அமரன் # தேர்தல் முடிவு பாஜக வுக்கு டிராஜடியாக முடியும்


=================


தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர காங்கிரஸ் கட்சி போராடும் -  # இப்பவெல்லாம் தமிழ் நாட்டின் வாக்கு வங்கி அலாவுதீன் விளக்கு ஆகிடுச்சு மது விலக்கு


=======================

மக்கள் நலக் கூட்டணியின் பிளவு எதிர்பார்த்ததுதான்: தமிழிசை  # வை கோ வைப்பற்றிய ராணுவ ரகசியம் இவருக்கும் தெரிஞ்சிடுச்சு போல


======================

வாக்குக்கு  ரூ.15 ஆயிரம் கொடுத்து புதிய பார்முலாவை உருவாக்க ஆளும் அதிமுக முயற்சிக்கிறது -

ராமதாஸ் # சாப்பாட்டுக்கே லாட்டரி அடிச்ச ஜனங்களுக்கு இது ஒரு லாட்டரி தான்


===================

பாமக ஆட்சியில் இருந்து இருந்தால் இந்த படுகொலை நிகழ்ந்திருக்காது - அன்புமணி # தினமும் ஒரு மாவட்டத்தில் ஒரு ஜாதிக்கலவரம் கன்ஃப்ர்ம்


=====================


9

தீபாவுடன் இணைந்து செயல்பட தயார்: -OPS#  அவரோட கணவர்  கூட அவர் கூட இல்லாம  தனியா கட்சி ஆரம்பிக்கப்போறார், இப்போ போய் இப்டி


=================

10 கருப்பு பணத்தின் மூலமாக 6,000 கோடி ரூ வரி வசூல் - மத்திய அரசு தகவல்.#இதுல 50% விவசாயிகள் நலனுக்கு செலவு செஞ்சா தேவலை

===================

11

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக வைகோ அறிவிப்பு # இது ஏற்கன்வே பலரும் நேற்றே கணித்ததுதான்

================

12

மது போதையில் வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை: ஆந்திர முதல்வர் எச்சரிக்கை # மது விற்றால் கடும் நடவடிக்கைனு அரசாங்கத்தை நாம எச்சரிச்சா என்ன?===========================================

14  மாதவனை கண்டுக்கொள்ளாதீர்கள்- ஜெ.தீபா # தீபாவைக்கண்டு கொள்ளாதீர்கள்னு அவர் சொல்றாரே?அதை கண்டுக்கலாமா? வேணாமா?


====================\

15 முறிந்தது மநகூ.
தேர்தலில் தனித்தனியாகவும், மக்கள் பிரச்சனையில் இணைந்தும் செயல்படமுடிவு # தலைவரே , மக்கள் பிரச்ச்னையை மக்கள் பார்த்துக்குவாங்க, உங்க பிரச்சனையை நீங்க பாருங்க
===================

16 கணவர் தனி கட்சி தொடங்கியதால் தீபா பேரவை கலைப்பு
 # தீபா பேரவை கலைக்கப்பட்டதால் மாதவன் தனிக்கட்சி கலைப்பு, ஆபரேஷன் தனுஷ் சக்சஸ்


==================

17  மாதவனை கண்டுக்கொள்ளாதீர்கள்- ஜெ.தீபா # தீபாவைக்கண்டு கொள்ளாதீர்கள்னு அவர் சொல்றாரே?அதை கண்டுக்கலாமா? வேணாமா?


==================

18 கணவர் தனி கட்சி தொடங்கியதால் தீபா பேரவை கலைப்பு
# தீபா பேரவை கலைக்கப்பட்டதால் மாதவன் தனிக்கட்சி கலைப்பு??!!, ஆபரேஷன் தனுஷ் சக்சஸ்

===================

19 என்னிடம் இருந்து கணவர் மாதவனை பிரிக்க சசிகலா கோஷ்டி சதி: தீபா குற்றச்சாட்டு # விலை போகிறவர் என தெரிய வைத்ததுக்கு நன்றி சொல்லுங்க

=================

20 பேரவையை கலைக்கவில்லை.. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது உறுதி.. ஜெ. தீபா அதிரடி! # இவ்விடம் டெய்லி பிரேக்கிங் நியூஸ் தரப்படும்


================

0 comments: