Monday, March 06, 2017

விக்கல் வந்தா தண்ணி குடிக்க பான் கார்டு கட்டாயம்?!!

ஏப்ரல் 1 முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்: உணவுத்துறை அமைச்சர் # ஏப்ரல் FOOLஆக்காம இருந்தா சரி


=============2 எனது தொகுதி மக்களிடம் எந்த கருத்து வேறுபாடும் இல்லை- நடிகர் கருணாஸ் வேற்றுமையும் இல்லாம ஒருமிச்சு "தொகுதிப்பக்கம் வராதே"ன்னாங்களாமே?============3 தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க குளிர்பான ஆலைகளுக்கு தடை இல்லை: கோர்ட் # ஹூம்.அந்த நிறுவனங்களுக்கு குளிர் விட்டுப்போயிடும்==============4 4 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். # அப்போ 5 டைம் 50 ,50 ரூபாயா 250 ரூபா கட்டினா.150 ரூ கிடைக்குமா?================5 நெடுவாசல்- வெளியூர்காரர்கள் வெளியேற வேண்டும்- எச்.ராஜா # வாடிவாசல்,நெடுவாசல் 2ம்.புரட்சி வித்தை விதைத்த தலைவாசல்===============
6 மீத்தேன் திட்டத்துக்கு ஆய்வு நடத்தவே திமுக கையெழுத்திட்டது; ஸ்டாலின் # மொத்தத்தில் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டத ஒத்துக்கறீங்க============7 அதிகாரிகள் மீது புகார் கூறிய ராணுவ வீரர் மர்மச்சாவு; தற்கொலை செய்துக்கொண்டார்? # போட்டுத்தள்ளி இருப்பானுங்க அந்த ஆபீசர்ஸ்===============8 இடம் தெரியாமல் OPSகாணாமல் போவார் -தினகரன் # உங்க தலைக்கு மேல கத்தி இருக்கு.அண்ணாந்து பார்க்கவும்,ஓவர் ஓவர்======================9 நீர் ஆதாரமாக விளங்கும் அமராவதி அணை 59 ஆண்டுகளாக தூர்வாரப்படாத அவலம் # மாறி மாறி ஆட்சி செய்த திமுக ,அதிமுக 2ம் பொறுப்பு==============10 நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை: ஜோதிடருக்கு ஆயுள் தண்டனை # சம்சாரம் ஜாதகத்தைப்பார்க்கும் முன் தன் ஜாதகத்தை பாத்திருக்கலாம்=================11 ஹைட்ரோகார்பன் வாயு எடுப்பதால் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ONGC # பந்திலயே உக்காராதேன்னா வாழை இலை வாட்டமா இருக்குன்னா எப்டி ?=================12 நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதை பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம்: ஓ.என்.ஜி.சி # எங்க கவலை பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம்=================13 விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது: விஜயகாந்த் .வாழவைப்போம்னோம்.நோக வைக்கறாங்க================14 அதிமுக அழிந்துவிட்டதாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது நியாயமல்ல: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் # அழிந்து கொண்டு இருக்கிறதுன்னு சொன்னா சரிங்களா?
=================================================
15 தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்..... தமிழிசை # உதய சூரியனே வர்றதுக்கு வழி தெரியாம கிடக்கு, சூரியன் உதிச்சாதானே தாமரை மலரும்? மேடம்==============16 வ.கணக்கில் மினிமம் பேலன்ஸ் 5000ரூ இருக்க வேண்டும்

-SBI # மேக்சிமம் பேலன்சே 500 ரூ தாங்க இருக்கும்


================

17 பிரதமராக 3 வருடங்களில் சாதித்ததை சொல்ல முடியுமா? மோடிக்கு அகிலேஷ் சவால்#உலகளாவிய சுற்றுப்பயணம் வேற எந்தப்பிரதமர் செஞ்சிருக்காக?

============

18 ஜக்கின்னு ஏன் கூப்பிடுறீங்க... சத்குருன்னு என்னை அழையுங்கள்-ஜக்கி# சோசியல் மீடியாவில் பக்கினு கலாய்க்கறாங்க

=============

19 தமிழக அரசியலை பற்றி பேச அவமானமாக இருக்கிறது
-கனிமொழி#நாம தேசிய அளவில் சாதனை புரிந்த 2ஜி பத்தி பேசுவோம் வாங்க

===========

20 பள்ளி மாணவர்கள்
மதிய உணவு சாப்பிட
ஆதார் அட்டை கட்டாயம்
-மஅரசு
# நல்லவேளை.விக்கல் வந்தா தண்ணி குடிக்க பான் கார்டு கட்டாயம்னு சொல்லல

============

0 comments: