Tuesday, March 14, 2017

பத்மினி க்கும் ,ஐஸ்வர்யா ரஜினி க்கும் என்ன வித்யாசம்?

சார்.தமிழ்நாட்டைத்தவிர மத்த ஏரியாக்களில் படம் ஹிட்னு எப்டி சொல்றீங்க?


ஏன்னா தமிழ்நாட்ல ஹிட்னா பொய்னு கண்டுபிடிச்சுடுவாங்க


==============

2 மாமா.உங்க பொண்ணை லவ் பண்றேன்


ஒரு சு சுவாமிக்கு என் பொண்ணை தந்தாலும் தருவேன்.உனக்கு தர மாட்டேன்


============

3 இன்ஸ்பெக்டர்.பேங்க்ல கொள்ளை நடக்குது.தடுக்கனும்.


அட்ரஸ்?
எல்லா SBIலயும்


=============

4 கதை எழுதும்போது எதுக்கு வயக்காட்டுக்குள்ள உக்காந்தே எப்பவும் எழுதறீங்க?


அப்போதான் பீல்டு அவுட் ஆகிட்டே னு யாரும் சொல்லமாட்டாக


================

5 பத்மினி க்கும் ,ஐஸ்வர்யா ரஜினி க்கும் என்ன வித்யாசம்?


அவங்க நாட்டியப்பேரொளி
இவங்க நாட்டியம் பேரை ஒழி


==============

6 மாமா.பொண்ணுக்கு ஆட/பாடத்தெரியும்னீங்க?


அதாவது ஐஸ்வர்யா ரஜினி போல் ஆடுவா.ஆல் இன் ஆல் அழகுராஜா காஜல் போல் பாடுவா


=============

7 தலைவரே!,மகிழ்ச்சில ஏன் துள்ளிக்குதிக்கறீங்க?


உ பி வரலாறு காணாத வெற்றின்னாக
அய்யோ.அது உடன்பிறப்பு அல்ல.உ பி மாநிலம்


===============

8 குற்றம் 23 நல்லா இருக்கு. ஆனா எதோ ஒண்ணு மிஸ்ஸிங்


ஆமா.டைட்டில் குற்றம்123 னு வெச்சிருந்தா 1,மிஸ்ஸிங் னு சொல்ல முடியாதில்ல மிஸ்?


=================

9 சன்யாசி-DR,உடல் சூடு அதிகமா இருக்கு.என்ன செய்ய?


சூடு இருக்கும் வரை தான் அது உடல்.இல்லைன்னா பாடி


==============

10 முத்தம் கேட்க சென்றால் மொத்தமாய் தருகிறாள் என் ஆளு

அப்போ அவங்கப்பா ஹோல்சேல் டீலர்ரா இருக்கும்

==============


11 சப்பாத்திக்கு மாவு பிசையும் போது ஒரு வாழைபழம் போட்டு மாவு பிசைஞ்சா என்ன ஆகும்?பஞ்சாமிர்தபாத்தி ஆகிடும்

================

12 டாக்டர்.உடம்பைக்குறை ,பிபியை குறை ,சுகரை குறை னு சொல்லாதீங்க


ஏன்?
குறை.சொன்னா எனக்குப்பிடிக்காது
==================


13 40 நிமிசமா தியானம் பண்ணிட்டே இருக்கீங்களே, எப்போ முடிப்பீங்க?


ஓ, சாரி. பீச் காத்து சிலுசிலுனு இருந்துச்சா , உக்காந்த வாக்குல தூங்கிட்டேன்


=============


14 எங்க பேங்க் லேடி கேசியர் கிட்டே பேசிட்டு இருந்தீங்களா?


ரொம்ப கிட்டே போகலை.2 அடி கேப் இருந்தது.
ஓஹோ.சரி.அப்போ 100 ரூ பிடிச்க்கறம்


==================

15 போலீஸ்- டேய்.நடு ராத்திரில பீச் ஸைடு போய்ட்டிருக்கே?


சமாதில உக்காந்து தியானம் பண்ணப்போறேன்


=================

16 கமல் ரசிகனாய் அவரது அரசியல் பார்வை புரிகிறது.


சும்மா அடிச்சு விடாதீங்க.அவரோட ராஜபார்வை யே பாதி பேருக்கு இன்னும் புரியல


==============

17 இன்னும் கொஞ்ச நாள்தான் அப்றம் ட்விட்டர்ல இருந்து நிரந்திரமா போயிருவேன்..


ஓஹோ.கொஞ்சம் மீன்ஸ்?
30*365 = 10950 நாள்


==============

18 நாட்டுல மழை வராததுக்கு சர்கார் என்ன பண்ணும்..?

மரம் மாதிரி நின்னுட்டிருக்காம மரக்கன்று நடலாம் இல்ல?


================

19 மிஸ்.ஹோலி கொண்டாடிட்டீங்களா?

ம்.டெய்லி.
புரியல.
ஹோலின்னா என்ன?
கலர் பூசறது
அதான் டெய்லி பூசிக்கறோமே

=================

20 இடை வெளிகளை
நிரப்பிக் கொண்டு இருக்கிறோம்.
மேடம்.புரியல
டேய் மக்கு.ஒட்டியாணம் போட்டுக்கிட்டிருக்கேன்னு ஸ்டேட்டஸ்

===================

0 comments: