Friday, March 03, 2017

பந்திலயே உக்கார வேணாம்கறோம்.பரிமளாவுக்கு பக் ஸீட் வேணும்னா எப்டி

தமிழகத்துக்கு வரும் லட்சுமியை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்? -பொன் ராதா # லட்சுமி ,லட்சுமிமேணன் ,லட்சுமிராய் னு ஏகப்பட்ட லட்சுமி இருக்கு.

==============

2 அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைவார்கள் -CR்.சரஸ்வதி பேரம் படிஞ்சிருச்சா

==============

3 பொதுமக்களிடம் ஆர்வம் குறைந்ததால் வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை 48 % குறைந்தது #100% நிச்சயம்.அதுவே நம் லட்சியம்

===================

4 தமிழ்நாட்டை காப்பாற்ற மு.க.ஸ்டாலினால் தான் முடியும்: நடிகர் ராதாரவி
செஞ்ச தப்பை எல்லாம் மகன் வந்து சரி செய்யனும்னா எப்டி?

=================

5 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிலப் பரப்பே பயன்படுத்தப்படும்- அரசு.# ஒரு குண்டா பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் அது விஷம் தானே?

==============

6 மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி!# பரவால்ல.திமுக வாக்கு வங்கி ல 4 ஓட்டு சேர்ந்திடுச்சு

================

7 திராவிடம் என்ற ஒன்றே கிடையாது” - பொன்.ராதா# விடம் =விஷம்.அப்போ சரியான பேருதான்.

================

8 பேரவலத்தில் தமிழகம் சிக்கியுள்ளது-.ஸ்டாலின் # ஆமா.இந்தப்பக்கம் திமுக முதலை அந்தப்பக்கம் அதிமுக டினோசர்.தமிழன் பாவம்

====================

9 OPS,தீபா இணைந்து செயல்பட வேண்டும்:ஜெ ஆவி பேசியதாக சாமியார் பேட்டி. # அப்டியே ஆவி கிட்டே அப்போலோ மர்மத்தையும் கேட்டு சொல்லுங்க சாமி

================

10 ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துஆயுதம்ஏந்தி போராட தயார்:வைகோ.# வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.வாய் அதிகம் பேசும் பிள்ளை ஜெயில் போகும்

================

11 வாய் ஜாலம் காட்டுவதில் மோடி வல்லவர் : ராகுல் # காங் போல் மாய்மாலம் செய்ய அவருக்கு வர்லை

==================

12 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மிகக் குறைந்த நிலப் பரப்பே பயன்படுத்தப்படும்" :அரசு சிறுத்தாலும் காரம் குறையாது.பூநாகம் சிறுசு , ஆனா விஷம்

==================

13 இன்று நான், நாளை ADMKவிலிருந்து பலர் வருவார்கள்! -DMKவில் இணைந்த ராதாரவி இடத்துல நிலையா இருக்க முடியாதா?தாவிட்டே இருப்பீங்களா


==================

14 எடப்பாடி பழனிசாமி..் மதுவை விலக்குவார்!’ - வைகோ # இந்த மேட்டர் பழனிசாமிக்கே அதிர்ச்சியான செய்திதான்

================

15 போராட்டம் நடத்துபவர்கள் எல்லாம் விஞ்ஞானிகளா -பொன் ராதா # சும்மா சும்மா கேள்வி கேட்டுட்டே இருந்தா அவங்க ஓ பக்கங்கள் ஞானியா?

=================

16 குற்றவாளியை அமைச்சர்கள் சந்தித்தது தவறு: தமிழிசை # மோடி கூடத்தான் ஜெ வை சந்திச்சாரு.அவரை கண்டிச்சீங்களா?

================

17 ஜெ மர்ம மரணம்:8/3/17 OPSஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் CM.ஆக இருந்தப்போ சசியை கைது செஞ்சு விசாரிச்சிருக்கலாமே

===============


18 பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பு இல்லை - சக்திகாந்த தாஸ்
உலகமே முடங்கிக்கிடக்கு யுவர் ஆனர்

====================

19 ஹைட்ரோகார்பன் திட்டத்தை
ஆகாயத்திலா செயல்படுத்த முடியும்.-இல கணேசன் # பந்திலயே உக்கார வேணாம்கறோம்.பரிமளாவுக்கு பக் ஸீட் வேணும்னா எப்டி?

====================

20 பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பதால் எந்த பயனும் இல்லை - திண்டுக்கல் சீனிவாசன்.# ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்குமே?

==================

0 comments: