Tuesday, March 28, 2017

அடிக்கடி ஏதோ ஒரு தொகுதில இடைத்தேர்தல் வந்தா

ஆர்கேநகரில் எவ்வாறு வாக்கு சேகரிக்கவேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும் -தினகரன் # அந்த சிதம்பர ரகசியம் ஊருக்கே தெரியுமே?


============2 மக்கள் நலனுக்காக செயல்படுவதில் திமுகவுக்கு முதலிடம்- ஸ்டாலின்  # மீத்தேன் திட்டம், 2ஜி ஸ்பெக்ட்ரம் இதுல அமுக்குன பணத்தை எல்லாம் மக்கள் நலனுக்கு செலவு பண்ணத்தயாரா?================3  ஈழத்தில் களமாடிய மாவீரர்களின் புனித மண்ணை பார்க்க ஆசைப்பட்டேன்-ரஜினி

பிரச்னையை தீர்க்கத்தான் போறீங்கனு ஜனங்க நினைச்ட்டாங்க

=================
தொப்பி போட்டதால் அப்படியே MGRமாதிரியே இருக்கார் தினகரன்-சரஸ்வதி#கூலிங் கிளாஸ் போட்டா கலைஞர் மாதிரியே இருப்பாரா?ஏதோ உளறனும்னு உளறக்கூடாது

===============

ராஜபக்சேவிடம் பரிசு வாங்கியவர்கள் கொடுத்த நெருக்கடிக்கு ஏன் பணிந்தீர்கள்’?ரஜினிக்கு Hராஜா கேள்வி. ரூட்ல போனாலும் கேட் போட்டா எப்டி?

==================

திமுக-வின் சதியை முறியடிப்போம்- தினகரன். # தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுப்போம்னு சொன்னாங்களே அந்த சதியை முறியடிப்பாரு போல


==================


தமிழகத்தில்அமைதி, வளம் இல்லை, மக்களிடம் மலர்ச்சியில்லை -ஸ்டாலின்
# அடிக்கடி ஏதோ ஒரு தொகுதில இடைத்தேர்தல் வந்தா மலர்ச்சி,பொருளாதார வளர்ச்சி

=================

விநாயகர்சதூர்த்தி விடுமுறை தைப்பூசம் விடுமுறை இல்லை ஏன்னா முருகன் தமிழன்:-சீமான்
# அண்ணன் தம்பிக்குள்ளே பிரச்னை ஏற்படுத்தறதுதான் நோக்கமா

==================


சாதியவாத, மதவாத சக்திகள் தமிழகத்தை ஆள துடிக்கிறார்கள் --திருமா # நம்ம கட்சி பேரு என்னங்க்ணா?கட்சி உறுப்பினர்கள் எல்லாம் யாருங்க்ணா?

================

10 எந்த சின்னத்தில் நின்றாலும் எங்களுக்கே ஓட்டு- தினகரன்.# அவ்ளோ தில் இருந்தாஇரட்டை இலை சின்னத்தை விட்டுக்கொடுத்துட்டு சவால்விட்டிருக்கலாமில்ல?

====================

11 டிடிவி தினகரனுக்கு பதிலளிக்க விரும்பவில்லை:ஸ்டாலின் # பதில் அளிக்க தெரியலை,பதில் தர முடியலைனு சொல்லுங்க.

====================

12 தொப்பி சின்னத்தை இரட்டை இலை சின்னமாக நினைத்து வாக்களிக்க வேண்டும் -CM # நாங்க தோக்கடிச்சாக்கூட ஜெயிக்க வெச்சதா நீங்க நினைச்சுக்கனும்

==============

13 ஒரு S .C. யை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது BJP- வானதி ஸ்ரீநிவாசன் # ஆட்சியில்சாதிச்சதை சொல்லி ஓட்டு கேளுங்க.சாதியை சொல்லி எதுக்கு?

==============

14 அரசியல்வாதிகளின் வதந்தியால் ரஜினி பயணம் ரத்து: லைக்கா சாடல் # 2.0 பட பிரமோஷன் மறுபடி பாத்துக்கலாம் விடுங்க

====================

15 RKநகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது: OPS முடியும் வரை காத்திரு(ங்க).நடக்கப்போவதை பார்த்திரு.(ங்க)

=================

16 எங்களது தேர்தல் சின்னம் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்துவிட்டது: -OPS #,தேர்தல் சின்னம் பசுமரத்தாணியா?


==================

17 இரட்டை விளக்கில் ஒருவிளக்கு MGR,மற்றொரு விளக்கு ஜெ-OPS # தமிழகத்தின் ஒளி விளக்கு நீங்கதான்னு சிம்பாலிக்கா.விளக்கறீங்க போல

===============

18 பாஜக நினைத்தால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாற்றம் வரலாம்: திருமா # ஆனா நினைக்காது.அதான் ட்விஸ்ட்டு


=================

19 RKநகர் இடைத்தேர்தலில் லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துகணிப்பில் பாஜக முந்துகிறது --செய்தி # லயோலா பொய்யாலா?

============

20 வேட்புமனு தாக்கலின்போது பதற்றத்தில் எனது பெயரை எழுத தீபா மறந்துவிட்டார்-மாதவன்
போல் துணை அமைய மாதவம்.செய்திருக்கனும்

=================

0 comments: