Thursday, December 29, 2016

'சின்னத்தாய் VS சின்னாத்தா

ஜெ. மறைவுக்கு பின் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜகவால் மட்டுமே நிரப்ப முடியும்: தமிழிசை.# தாமரை யும் (இரட்டை} இலையும் எப்பவும் ஒட்டாதுங்கோ


================
2 தமிழக தலைமைச் செயலாளராக சகாயத்தை நியமிக்க வேண்டும் - # அவரு அரசியல்வாதிகளுக்கு சகாயம் பண்ணித்தர மாட்டாரே?===============3 தீபாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான உறவு, ரத்த சம்பந்தம் உடையது. அ.தி.மு.க.,வில் அவருக்கு எந்த பங்கும் இல்லாதது, எனக்கே கொஞ்சம் வருத்தமாக உள்ளது.-நாஞ்சில் சம்பத்: # கவலைப்படாதீங்க பங்கு, எல்லார்க்கும் இதில் பங்கு உண்டு=================


திருமாவளவனுடன், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை; எங்கள் நட்பு ஆழமானது.-வைகோ # பாழுங்கிணறு கூட ஆழமானதுதான்


====================


பணமில்லாமல் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று கூறுவது, தற்கால சூழ்நிலைக்கு பொருந்தாது.-நாராயணசாமி# 15 நாள் பொறுங்க, எல்லாம் பொருந்திடும்
--  

=======================


6  ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், நீதிமன்றம் எந்த முடிவை அறிவித்தாலும், பா.ஜ.,வுக்கு கவலையில்லை.-எச்.ராஜா # பிஜேபிசெல் ரிங்க்டோன்” யாரைப்பத்தியும் இவனுக்கு கவலை இல்லை”===================


எங்கள் சொத்தை சசிகலாதான் அபகரித்தார்!” - கொந்தளிக்கும் கங்கை அமரன் குளிச்சாலும் இந்த பாவம் எல்லாம் போகாது

=====================


8 பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த 3 ஆண்டுகளாக, ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.-திருநாவுக்கரசர் # அதனால அடுத்த தேர்தலில் ஓட்டை அடிமாட்டு விலைக்கு விக்காதீங்கங்கறாரா?


===================

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், இலவச ஆலோசனைகள் வழங்கவும், தி.மு.க., முன்வந்துள்ளது.-எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் # சட்டசபைல மாஸ்கட் பண்ணி நோஸ்கட் கொடுங்க


===================

10 அரசு அதிகாரிகள் கார் பயன்படுத்த 'கிடுக்கி' 'டாக்சி' மட்டுமே பயன்படுத்த வேண்டும் -செய்தி # டாக்சிக்கான வாடகையையும் அவங்களே கட்டனும்,அதையும் சொல்லிடுங்க==================

11 பகுஜன் சமாஜ் வங்கி கணக்கில், 104 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளதைக்கண்டுபிடித்த அமலாக்கப்பிரிவை மாயாவதி கண்டிப்பு # போலீசை கடுமையா விமர்சிப்பவன் திருடனாத்தான் இருப்பான்


==================

12 ரிப்பன் வெட்டுவதற்காக நான் வரவில்லை பிரதமர் மோடி எச்சரிக்கை # ரிப்பன் பிரபுக்கள் தப்பிச்சுடறாங்க, குப்பன், சுப்பன் தான் அவதிப்படறான்


===================

13 ம.ந., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., திடீர் விலகல்- வை கோ அறிவிப்பு # வை கோ = பிரம்மன் + சிவன் , ஆக்கல் தொழில், அழித்தல் தொழில் 2ம் செய்வாப்டி


=================

14 

தை பிறந்ததும் தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா' - த இந்து செய்தி # தை பிறந்தால் தமிழர்களுக்கு “வலி” பிறக்கும்===============

15 

தேசிய கீதத்தின் மீது இயற்கையாக பற்று வர வேண்டும்: மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கருத்து # செயற்கையா வரவெச்சோம்னா நாளடைவில் அது ப்ழகி இயற்கையா வந்துடும்====================


16 

அதிமுகவில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்த்ராஜ் # சினிமாவில் வில்லன், நிஜ வாழ்வில் ஹீரோ================

17 ரொக்க பயன்பாட்டை, 50 சதவீதமாக குறைப்பது தான் அரசின் குறிக்கோள். - மனோகர் பரீக்கர் # 50% ஜெயிச்ட்டாலே அது 100% பலனைத்தரும்


====================

18 செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் 4 ஆண்டு... சிறை # இதெல்லாம் பணம் உள்ளவன் கவலை, நமக்குப்பிரச்சனை இல்லை


======================

19 தீபாவிற்கு 'சின்னத்தாய்' பட்டம் # இது சின்னாத்தாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ?தீயா வேலை செய்ய ஆரம்பிப்பாங்களே?


=====================

20 மாநில அரசின் அனுமதி பெறாமல், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்த, வருமான வரித் துறைக்கு அதிகாரம் உள்ளது. -எச்.ராஜா # ஜெ உயிருடன் இருந்தப்போ ஏன் ரெய்டு நடக்கலை?
0 comments: