Wednesday, December 07, 2016

பேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் போல

ஊழலை ஒழிக்க முயன்றது குற்றமா?... எதிர்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி # வியாபார உலகத்தையே ஆட்டம் காண வெச்ட்டீங்க,அது தப்புதானே?


============2 மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம்.# தானாக வரும் அனுதாபத்தைக்கூட சட்டம் போட்டு கொண்டு வர வேண்டி இருக்கு============3 விஜயகாந்த் எடுக்கும் தவறான அரசியல் முடிவுகளால், அவரது கட்சி கரைந்து, காணாமல் போய் கொண்டிருக்கிறது.-RS.பாரதி # காகம் கரையுதுன்னா விருந்தினர் வர்றார்னு அர்த்தமாம்


==================

4  வட மாநில தேர்தல் முடிந்தவுடன், தமிழகத்தில், ராகுல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். -திருநாவுக்கரசர்: # வழக்கமா தேர்தல் வந்தா தானே அரசியல்வாதிக விசிட் அடிப்பாக?


==================


நான், எந்த கோஷ்டியும் இல்லாமல், காங்கிரசை கட்சியாக வளர்க்க விரும்புகிறேன்-

திருநாவுக்கரசர் # இதுல எப்டிண்ணே லைட் எரியும்?வேஷ்டி கட்டாத தமிழன் இல்ல, கோஷ்டி இல்லாத கட்சி இல்ல

=======================
===================

வங்கிகளில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்களின் தியாகம் வீணாகாது ~ மோடி # க்யூ வில் நிக்க ஐக்யூ தேவை இல்லை.சோ ஐ ஆம் இன் க்யூ

==================

8 'மக்கள் வரிசையில் காத்திருப்பது இதுவே கடைசி!' பிரதமர் மோடி உருக்கம் # அடுத்த தேர்தல்ல பாஜக வுக்கு இன்றே கடைசி போஸ்டர் ஒட்டாம இருந்தா சரி


====================

சென்னையில், மூன்று சாலைகளில் மிதிவண்டிக்கு (சைக்கிள்)     தனி பாதை விரைவில் திறக்க முடிவு # தமாக வும் தனித்துதான் விடப்பட்டிருக்கு, குறியீடு


====================

10  மேட்டூரில்   1,000 கன அடி நீரில் 5,000 கன அடி சாக்கடை கலப்பு; அமைச்சர் ஒப்புதல் # உங்களால நிர்வாகம் பண்ண முடியலைன்னா கடையைச்சாத்திட்டு கிளம்புங்க


==================

11  தெலுங்கானாவில் பண தட்டுப்பாட்டால் இன்று நடக்க இருந்த 50,000 திருமணங்கள் தள்ளிவைப்பு # கறுப்புப்பண கட்டுப்பாடு சக்சஸ் ஆகலைன்னாலும் மக்கள் தொகை கட்டுப்பாடு சக்சஸ் ஆகிடும் போல

==============

12 விஜய்-அட்லி இணையும் படம் ஜனவரியில் தொடக்கம் # கட்ட வேண்டிய வரி எல்லாம் கட்டி முடிச்ட்டீங்களா? 150 கோடி வசூல்


==============

13 பிரதமர் மோடி போரை விரும்புபவர்: பாக். முன்னாள் அதிபர் மு‌ஷரப் # அது உண்மையோ என்ன வோ, ஆனா பாகிஸ்தானுடனான அக்கப்”போரை” விரும்பாதவர்

==============

14 வேலையில்லாப் பட்டதாரி 2: முக்கிய வேடத்தில் கஜோல் # அடுத்த டைவர்ஸ் ஆன் த வே, மார்க் மை வோர்ட்ஸ்

=============

15 ரிலையன்ஸ் நிறுவனம் 500 ரூபாய் அபராதத்தை கட்டியே ஆக வேண்டும்!”-தமிழிசை # கட்டலைன்னா? கட்டியே ஆகனும்னு மீண்டும் அறிக்கை விடுவோம், ஆங்


=====================

16 விரைவில் வருகிறது புதிய 20, 50 ரூபாய் நோட்டுகள்.*
*-ரிசர்வ் வங்கி அறிவிப்பு # 10 ரூ , 5 ரூ புல்லா அடிங்க.அதுலதான் கள்ள நோட்டு வராது

==============================


17 தொழிலாளர்களுக்கு ரொக்க சம்பளம் கிடையாது’.. வருகிறது புதிய சட்டத் திருத்தம் # நல்ல வேளை.சம்பளமே கிடையாதுனு சொல்லலை

================

18 துறவிபோல் நடித்து 90% மக்களை ஏழைகளாக்கிவிட்டார்: மோடி மீது மாயாவதி பாய்ச்சல். யார் மேலயாவது கோபப்பட்டா அவரால பாதிக்கப்பட்டிருக்கார்னு அர்த்தம்

=====================


19 அமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்... திணறும் நாக்பூர் # பேரில் நிதி இருந்தா நிஜத்திலும் நிதி சேர்ந்திடும் போல


===================


20

டெல்லியில் துப்பாக்கி சுடும் வீராங்கனைக்கு மது கொடுத்து கற்பழிப்பு: பயிற்சியாளர் மீது புகார் # வேலில போற ஓணாணை பார்ட்டிக்கு ஏன் கூப்பிடனும்? அவன் கொடுத்த பானத்தை ஏன் குடிக்கனும்?


========================

0 comments: