Saturday, December 10, 2016

எல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்க.?

1சார்.உங்க பட டிக்கெட் ரேட் எத்தனை?


100 ரூபா டிக்கெட்.250 ரூபா
ஓஹோ அதாவது 150% அதிகம்.நீங்க 20%,80% பத்தி பேசறீங்க


=============
2 ஜட்ஜ் -ட்விட்டர்ல அமைச்சரை எதிர்த்து அறிக்கை விட்டீங்களா?


அது என் அட்மின்
உங்க கிட்டே சம்பளம் வாங்கறவர்தானே?
ஸ்ரீ தேவிக்கே பாக்கி இருக்கு

=============

3 விஜய் மல்லய்யாவோட கடன் 1200 கோடியை தள்ளுபடி செஞ்சுட்டீங்களே.அந்தப்பணம் பெற எதுனா ஐடியா இருக்கா?


யா.விஜய் 12 படம் பண்ணித்தருவார்===========

4 மேடம்.பேங்க்ல பணம்.எடுத்தா கை விரல்ல மை வைப்போம்


சார்.அதுக்குப்பதிலா டாட்டு போட்டு விட்டுட்டா எனக்கு செலவு மிச்சம்===========


5 குருவே! திருஷ்டம் என்றால் கண்ணால் காண்பது
அப்ப "அதிருஷ்டம்" என்றால் என்ன?


சிம்ப்பிள் கண்ணால் காண முடிவது திமுக
காண முடியாதது அதிமுக

================


6 யோவ், டெய்லர். தைக்கக்குடுத்த  என் ஜாக்கெட் எங்கே?காணோம்?

 ரன்னிங் பிளவுஸ் இல்லையா? அதான் காணோமோ என்னமோ?


==================


எப்பவும் கூலிங் க்ளாசோட சுத்தறீங்களே?நீங்க மிஷ்கின் ரசிகரா?


நோ மிஸ்.கிண் ணுனு எந்த மிஸ் இருந்தாலும் ரசிக்கும் மிஸ் கிண் ரசிகன்
====================

8 டியர்.முத்தம் தரவா?


மேல் உதட்டிற்கா? , கீழ் உதட்டிற்கா?
FEMALE உன் உதட்டுக்கு


=============

9 நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் என்பது உண்மையா?


அது தெரில.ஆனா மத்தியில் ,மாநிலத்தில் ஆண்டவர்கள் ,ஆள்பவர்கள் சோதிக்கறாங்க


=============

10 தலைவரே! நீங்க பெருந்தன்மை மிக்கவர்னு ஜனங்க பேசிக்கறாங்களே?


கட்சி.நிதி ,தேர்தல் நிதி ன்னு யார் எவ்ளோ கொடுத்தாலும் பெறுந்தன்மை


=============

11 உங்க படம் நெத்தி அடி யா இருந்தது சார்.


இருக்காதே.ஆர்.பாண்டியராஜனின் நெத்தியடி பட கதை வேற.இது வேற


===============


12 என் பொண்ணு ரத்னச்சுருக்கமாதான் பேசுவா


பொருத்தம் பிரமாதம்.எங்க பையன் மணிரத்னச்சுருக்கமா பேசவே மாட்டான்===================

13 சார்.தினமும் ஒரு டிசர்ட்னு நீங்களும் ஏன் ட்ரை பண்ணக்கூடாது.?

பண்ணலாம்.நான் இருக்கும் ஏரியாவில் யாரும் துணி காயப்போடறதில்ல

===========
14 சாதா தமிழன் ,ஹை க்ளாஸ் தமிழன் என்ன வித்யாசம்?


புக் படிச்ட்டு கம்முனு இருந்தா சாதா.FBல புக் போட்டோ அப்டேட்டினா ஹை க்ளாஸ்


===================


15 ஜிவிபி = இது வரை நான் பிளாப் படமே கொடுத்ததில்ல
நேத்து வரை. கடவுள் இருக்கான் குமாரு

============

16 டியர்.செலவுக்குக்குடுத்த புது நோட்ல ஒருசைடு மட்டும் ப்ரிண்ட் ஆகி இருக்கு?
உன்னுது ஒரு தலைக்காதல்தானே?


==============17 மற்றவர் கண்ணுக்கு மட்டும் வெறும் Moon ஆக தெரிபவள்,
என் கண்ணுக்கு மட்டும் Super Moon ஆக தெரிவதேனோ!??
இது ஹனிமூனா இருக்கும்.

================


18 டியர்.அகத்திக்கீரை சாப்பிட்டா அது விஷத்தை முறிக்குமாமே?
ஆமா.அதுக்குதான் எப்போ நீ சமைச்சாலும் அகத்திக்கீரைக்குழம்பு வைன்னு சொல்றது

=============
19 அது ஏன் எல்லா பேய் படங்கள்லயும் பொண்ணுங்களயே பேயா காட்றாங்க.?


அவங்க முகத்தை க்ளோசப்ல பாக்கும்போதுதான் பயம் வரும்

==============

20
மிஸ்! உங்க லவ்வர்  மழைச்சேறு ரோட்டில் வழுக்கி விழுந்துட்டாரா??

 யா, எப்டி தெரியும்?மழைக்கால மண் வாசம் அவன்..!அப்டினு கவிதை எழுதி இருக்கீங்களே?


=================

0 comments: