Saturday, December 24, 2016

கத்தி சண்டை - சினிமா விமர்சனம்

Image result for kathi sandaiஇப்போ எல்லாம் சக்சஸ் சினிமா எடுக்க இலக்கிய அறிவோ , சினிமா நுணுக்கங்களோ தேவை இல்லை.டெய்லி தினத்தந்தி படிச்சாப்போதும், 2 நியூசை எடுத்து அப்டேட்டி படம் பண்ணி பணம் சம்பாதிச்சிடறாங்க

கமர்ஷியல் டைரக்டர் சுராஜ் சமீபத்தில் படிச்ச நியூஸ் 2 . 1  கண்ட்டெய்னர்  கறுப்புப்பணம் 2 ஹாஸ்பிடலுக்குப்போக கிராம மக்களுக்கு வாகன வசதி இல்லாதது


ஹீரோ ஒரு கிராம வாசி. அவர்  ஊர்ல ஸ்கூல் இடிஞ்சு மாணவர்கள் ஆபத்தில் இருக்கும்போது ஹாஸ்பிடல் கொண்டு போக வாகனம் இல்லாம லேட் ஆவதால் பல உயிர்கள் பிரியுது. அந்த தொகுதி எம் எல் ஏ தொடர்ந்து 15 வருசமா அந்தத்தொகுதிக்கு நலத்திட்டங்கள் செய்ததா கணக்குக்காட்டி  300 கோடி அடிச்சுடறாரு


 அவரோட பணத்தை ஹீரோ எப்டி அடிச்சு ஊருக்கு நல்லது செய்யறாரு என்பதே கதை

முன் பாதி பூரா சூரி தான் ஹீரோ,. பல கெட்டப்களில்  ஹீரோவுக்கு இணையா வர்றாரு.வசனங்களால் சிரிக்க வைக்க அவரால் முடியலைன்னாலும் வடிவேலு பாணியில் பாடி லேங்குவேஜில் சி செண்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கிறார்

 பின் பாதியில் ஐ ஆம் பேக் என இண்ட்ரோ ஆகும் வடிவேல் பி சி செண்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கிறார்


இருவருக்கும் ஒதுக்கிய சீன்கள் போக மிச்ச மீதி சீன்களில்  புரட்சித்தளபதி விஷால் லெமனா இருக்கும் தமனா கூட காதல் கலாட்டா பண்ணி ஒப்பேத்துறார்


ஒரே ஆறுதல் வழக்கமா விஷால் படங்களில் பறக்கும் ஜீப்கள் இதில் மிஸ்சிங்

லாஜிக் சொதப்பல்கள் ஏராளம்

 வில்லன்கள் சரியான கூமுட்டைகளாக இருப்பது செம கடுப்பு 


ரொம்ப மொக்கையும் இல்லை, டைம் பாஸ் ஆகுது. யாராவது ஓசி ல கூட்டிட்டுப்போனாலோ டி வி ல போட்டாலோ பார்க்கலாம்


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்




சூரி.செம தாதா கெட்டப்.செம ஓப்பனிங்

2  கத்திசண்டை இடைவேளை.முன் பாதி சூரி காமெடி.கன்ட்டெய்னர் கறுப்புப்பண கொள்ளை கான்செப்ட்.ஓக்கே.இடைவேளை.ட்விஸ்ட் குட்


நச் டயலாக்ஸ்

1


உலகத்துலயே கஷ்டமானது  பிறந்த ஊரை விட்டு விலகிப்போவதுதான் #கத்திசண்டை



ஒரு ரவுடி தன் சொந்தக்காசை செலவு பண்ணியா தொழில் பண்ண முடியும் ? #kaththisandai


நம்பியார்  மாதிரி மீசை வெச்சுக்கிட்டு நாகேஷ் மாதிரி இருப்பானே அவன் தான் என் ஃபிரண்ட்  #kaththisandai

காக்கா கலர்ல இருக்கும்  இவனுக்கு PEACOCK  மாதிரி பொண்ணா?  #kaththisandai


கறுப்பா இருப்பவன் இன்னொரு கறுப்பு ஆளை  அடிக்கக்கூடாது
ஏன்?
ஏன்னா ஒயிட்டா இருப்பவனும் அடிப்பான்,எப்டி தாங்கறது? #kaththisandai


பூட்டை உடைச்சிருந்தா 30 ரூ செலவோட போய் இருக்கும், ஓட்டை உடைச்சதால 3000 ரூ செலவு #kaththisandai


கழுத்தை வெட்றவனை, கற்பழிக்கறவனை எல்லாம் விட்டுடுவீங்க, காதலுக்கு ஹெல்ப் பண்றவனை என்கவுண்ட்டர்ல போடுவீங்க #kaththisandai

8  தப்பு செஞ்சவனை மன்னிச்சுடலாம், ஆனா செஞ்ச தப்பை சரிக்கட்ட முயற்சிக்கும் ஆளை மன்னிக்கவே கூடாது #kaththisandai

இப்படி என் சட்டையைக்கிழிச்சு என்னை சன்னிலியோன் மாதிரி ஆக்கிப்புட்டாங்க  #kaththisandai

10 வில்லன் = பிளான் ஏ, பி,சி -ன்னா என்ன?

 காமெடியன் - ஏண்டா , ஏபிசியே தெரியாத என் கிட்டே என்ன கேள்வி இது? #kaththisandai






கத்திசண்டை - முன் பாதி சூரி ஹீரோ ,பின் பாதி வடிவேல் ஹீரோ.பி சி ஹிட்.விகடன் -40,ரேட்டிங் -2.5/ 5

0 comments: