Wednesday, December 28, 2016

நம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1

அன்பே ! என் டி எல் க்கு எப்போது வருவாய்?


வருவாய்க்கு வழி இல்ல.100 ரூபாயாவது சம்பாதிச்ட்டு அப்புறமா வர்றேன்


=============

2 டைரக்டர் சார், நம்ம படத்துலயும் இதே போல் பைசெப்ஸ் காட்ற மாதிரி ஒரு சீன் வைப்போமா?

 வழக்கமா நம்ம படத்துல ஹீரோயின் தானே கிளாமர் காட்டும்?


===================

3  டியர், நல்லா பேசிக்கிட்டே இருந்துட்டு
சட்டுனு ஒன்னும் சொல்லாம விலகி போய்ட்டீங்க, ஏன்?

சரி. 1.


=============

4 சார், மோதிர விரல்ல மோதிரம் போடாம ஆள் காட்டி விரல்ல போட்டிருக்கீங்க?

மோதறவங்க, மோதிரம்ங்க இதை எல்லாம் நான் ஒரு பொருட்டாவே நினைக்கறதில்ல

================

5 இன்னைக்கு நூடுல்ஸ் செஞ்சேன், பிரமாதமா வந்திருக்கு


 ஓஹோ, சாப்பிட்ட எல்லாரும் சொன்னாங்களா? 

 இல்லை, சமைச்ச நானே சொன்னேன்.நமக்கு நாமே திட்டம்


================


இன்னைக்கு நூடுல்ஸ் செஞ்சேன்


தெரியும்

எப்டி? இப்போதானே ஸ்டேட்டஸ் போட்டேன்

நொந்து நூடுல்ஸ் ஆகிட்டோம்னு அவர் ஆல்ரெடி ஸ்டேட்டஸ் போட்டுட்டாரே?


===================

7 சமைக்காப் பொருளை சமைக்க நான் துணிந்தேன்.


சமைக்காத சம்சாரத்தை சமைக்க வைக்கப்பணிந்தேன்னு ஓப்பனா சொல்லுங்க

===================

8  US, Australia , Norway.. ஏதாச்சும் ஒரு நாட்ல வேல பாக்கனும்.

மிஸ், ஏர் ஹோஸ்டலா போய்டுங்க, உலகம் சுற்றும் வாலிபி ஆகிடலாம்

=============

9 பட்டுப்பூச்சில பட்டு செய்யற மாதிரி கம்பளிப்பூச்சில தான் கம்பளி செய்றாங்களா?

விட்டா எட்டுக்கால் பூச்சி தான் எட்டாம் நெம்பரை கண்டுபிடிச்சுதுனு சொல்வீங்களோ?


=================

10 டாக்டர்.ஹை சுகர் ,லோ சுகர் என்ன வித்யாசம்?


லாலா ஸ்வீட்ஸ் ,அகர்வால் ஸ்வீட்ஸ் 2 ம் லோ சுகர் ,ஆனந்த பவன் ஸ்வீட்ஸ் ஹை சுகர்

==============

11 தலைவரே!நல்லா இருந்த செருப்பை ஏன் வார் அத்து விட்டீங்க?


தொழிலாளியை தேடிச்சென்று அறுந்த செருப்பை தைத்தார்னு பேப்பர்ல நியூஸ் வரனும்ல?


================

12 நம்ம தலைவரும் ,பிடல் காஸ்ட்ரோ வும் 1 விஷயத்தில் 1


எதில்?மக்களுக்காக தியாகம்?
நோ.சம்சாரம் சட்டப்படி 2 ,செட்டப்படி 2


===============

13 லீவ் கிடைக்கும்போதெல்லாம் ஷாப்பிங் மால் போவேன்


ஓஹோ.பர்ச்சேசா?
நோ.அங்கே போய் FB ஸ்டேட்டஸ் .ஹை க்ளாஸ் படைப்பு


===================

14 டாக்டர். சாம்பார் பிரியர்கள் எங்கிருந்து அரிசி சோறை விட்டொழிப்பது?

சிம்ப்பிள், வீட்டின் சமையல் அறையில் இருந்துதான்


=====================

15 மலையாள க்ரைம் த்ரில்லரான 10 கல்பனாக்கள் படத்துல ஒரு ஏமாற்றம்

என்னது?

கடைசி வரை ஒரு கல்பனாவைக்கூட காட்டவே இல்லை


=====================

16 அந்த காலத்து பாடல்கள்லாம் அவ்ளோ இனிமை. ஆனா. தப்பித்தவறி யும் விஷுவல பார்த்துடக்கூடாது

எஸ் மிஸ், பொண்ணுங்க வைக்கும் பேபி டிபி vs நிஜ டிபி மாதிரி


======================


17 ஆண் ஆணாக மட்டுமே இருந்துவிடமுடிகின்றது.பெண்ணோ அத்தனையுமாக இருந்தாகவேண்டிய கட்டாயம்
எஸ் மிஸ் . ஒரு வேலை செஞ்சாலும் உருப்படியா செய் வான் ஆண்


=================

18 இந்தியாவில் 60% பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இல்ல

ஓஹோ, நீங்க 10 வருசம் பிரதமரா இருந்தப்போ ஓப்பன் பண்ணிக்குடுத்திருக்கலாமில்ல?


===================

19 அறிவியலைப் பற்றி தெரிந்தவர்களிடம் தான் அதைப் பற்றி பேசமுடியும்

அப்டி சொல்ல முடியாது, சயின்ஸ் டீச்சர் ஸ்டூடண்ட்ஸ்க்கு எப்டி பாடம் நடத்துவார் அப்புறம்?


======================

20 இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

அது தெரியல டீச்சர்.ஆனா இயக்குநர் பேரரசு இளைய தளபதியை வெச்சு நிறுவியது சிவகாசி ,திருப்பாச்சி

=============

0 comments: