Saturday, December 03, 2016

ஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான்!!

நோட்டு ஒழிப்பு; ரிசர்வ் வங்கிதான் சிபாரிசு செய்தது மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்# பாராட்றதுன்னா மோடியை ,திட்றதுன்னா ரிசர்வ் பேங்க்கை?

=============

2 பாலியல் வன்முறைக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை” நடிகை மீரா ஜாஸ்மின் யோசனை # மேக் இட் சிம்ப்பிள்.கட் இட் அப்டிங்கறாரா?

=================

3 கருப்பு பணத்தை மாற்ற ஏழைகளை பயன்படுத்துவதா? பிரதமர் மோடி எச்சரிக்கை.# விடுங்க.அப்டியாவது ஏழைங்க 30% சம்பாதிச்ட்டுப்போகட்டும்


==================

4 பிடல் காஸ்ட்ரோ கொடூர சர்வாதிகாரி டிரம்ப் குற்றச்சாட்டு... # தனியார் பள்ளி நிறுவ எதிர்ப்பு தெரிவிப்பது ,இலவச கல்வி சர்வாதிகாரமா?

============
5 விஜய் மல்லையா மோசடியாளர் அல்ல. அவர் தோற்றுபோன தொழில்முனைவர் - ஜெயமோகன்.

# தோத்துப்போனவங்கன்னா ஊரை/நாட்டை விட்டு ஓடனுமா?


=============


6 என் உயிரோடும் மூச்சோடும் கலந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோ -கலைஞர் # அப்போ நம்ம ஆட்சில இலவச கல்வி , இலவச மருத்துவம் பண்ண முயற்சி செஞ்சிருக்கலாமே?

=============

=====================


7 ரஜினி சம்பளத்தை வெள்ளையாக வாங்குவதால்தான் மோடிக்கு ஆதரவு-H.ராஜா! # பிளாக் & ஒயிட் பட காலத்தில் இருந்தே பிளாக் &ஒயிட் டில் சம்பளம்


================

8 கருப்பு பணம் ஒழிப்பில் திமுக.விற்கு எந்தவித மாறுபாடும் கிடையாது; மு.க.ஸ்டாலின் # ஏன்?மாத்தி பேசித்தான் பாருங்களேன்


=================

9 அரசு திறக்கா விட்டால் வடபழனி மேம்பாலத்தை பா.ம.க. திறக்கும்;- ராமதாஸ் # ஜெ தனது சொத்தை ஏழைகளுக்கு எழுதி வைக்கலைன்னா அய்யா எழுதிவைப்பார்

==============

10 நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை புறக்கணித்த கேரளா முதல்வர்
.வீட்ல நான் தான் மாப்ளையா இருக்கனும் மொமெண்ட்


=================

11 ரூபாய் நோட்டு விவகாரம்:மத்தியஅரசின் மாபெரும் நிர்வாக தோல்வி அம்பலம்-மன்மோகன்சிங்
# எக்ஸாம் நடந்துட்டிருக்கும்போதே ரிசல்ட் சொல்றாரே?


==================

12 கறுப்பு பணத்தை ஒழிக்க முற்படும் மோடியின் திட்டத்துக்கு, ம.தி.மு.க., ஆதரவு அளிக்கும்  வை கோ # அய்யய்யோ, இவர் ஆதரவு    தெரிவிச்ட்டாரா? திட்டம் ஜெயிக்குமா? தெரியல


======================

13  மத்திய அரசுக்கு பணம் குவிந்து வருகிறது. நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முடியும்.- வெங்கையாநாயுடு # பணத்தை தண்ணியா செலவு பண்ணப்போறீங்க


==================

14 வணிக சகோதரர்களும், விவசாயிகளும், இன்று நடக்கும் கடையடைப்பில் பங்கேற்கக் கூடாது. தமிழிசை # ஒவ்வொரு கடைக்கும் பாதுகாப்பு தர முடியுமா?லோக்கல் ரவுடிகள் உலா வருவாகளே


==================

15 காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மாற்ற கர்நாடக மக்களுக்கு அமித் ஷா அழைப்பு # அதெப்பிடிங்க? திடீர்னு ஊழலே இல்லாத தேசம்  உருவாகும்?


===================

16 இன்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும்; பந்த்  இல்லை - காங்கிரஸ் # அழகிய மலர்னாலும் க்யூட் புஷ்பம்னாலும் 1 தானுங்களே?


==================


17 வங்கி முன்பு மக்களை காத்துக் கிடக்க வைத்ததுதான் மோடியின் சாதனை: பிருந்தா காரத் # பண பரிவர்த்தனைகள் வங்கி மூலம் நடந்தா கறுப்பு வெளுத்துடும் இல்ல?


========================

18 மதுகுடிக்காமல் இருக்க முடியாதவர்கள்பீகார்மாநிலத்தை விட்டு வெளியேசெல்லலாம்- நிதீஷ்குமார் # வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இருக்கு, கவலை எதுக்கு நமக்கு?====================

19
விவசாயிகள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இந்தியா பலம் பெறும்:  மோடி # ஒவ்வொரு விவசாயி யும் மத்திய அரசு ஊழியர்தான் என அறிவிச்சுட்டா போதுமே?


====================

20 
மக்களின் பிரச்னைகளை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் # வீடு தேடிச்சென்று பணம் மாத்தித்தரப்போறீங்களா?


=====================

0 comments: