Wednesday, December 21, 2016

மோடி ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்சோம்

1  கருணாநிதி உடல்நிலை குறித்து ஒளிவு மறைவின்றி அறிவிக்கப்படும் : துரைமுருகன்..

#11 AM.=,பாட்ஷா.
2,pm.= படையப்பா
6pm =கபாலி


==============

2 காவிரியில் அனுமதியின்றி 1.76 லட்சம் லோடு மணல் கொள்ளை: செய்தி-திருடனுக்கு இது ராசியான நெம்பர் போல


================

3 பத்திரிகைகள் எங்களை மிரட்டுகின்றன… எம்.நடராஜன் பரபரப்புக் குற்றச்சாட்டு.#10000 ரூகொடுத்தா முரசொலிலயே சின்னம்மா வாழ்க விளம்பரம் வருமே?

===================


4 தமிழக முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்க வேண்டும் – கர்நாடக அதிமுக செயலாளர் புகழேந்தி # இது தான் தமிழக எல்லைதாண்டிய பயங்கரவாதம்

===============

5 சசிகலா சார்பில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தோம்: தம்பிதுரை # ஆதாயம் இல்லாம அரசியல்வாதி ஆத்தோட போகமாட்டாரே?

==============

6 ஜெ.தீபாவை பாண்டே எடுத்த பேட்டி'கேள்விக்கென்ன பதில்'நிகழ்ச்சி ரத்து#ஒளிபரப்பினா 5 கோடி லாபம்,ஒளி பரப்பலைன்னா 50 கோடி லாபம்


==============

7 நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மீதான 3ஆவது பாலியல் வழக்கு பதிவு கட்சிலயும் லேடி ன்னா ஜொள்ளும் கேடிங்கதான் இருப்பானுக போல


================

8 நாட்டில் கூடுதலாக புதிய வங்கிகளை நிறுவ மத்திய அரசு, RBI நடவடிக்கை எடுக்க வேண்டும் -விகாந்த் ?பேங்க் ஆபீசருங்க கமிசன் அடிக்கவா?

===============


9 மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்: ஸ்டாலின் # நல்ல தலைமைப்பண்பு,அரசியல் முதிர்ச்சி

===============

10 அதிமுக உள்கட்சிப்பிரச்னையில் தலையிடும் அவசியம் பாஜவுக்கு இல்லை-தமிழிசை# பொம்மலாட்டக்காரன் எப்பவும் பொம்மைகள் பத்தி கவலைப்பட மாட்டான்


==================


11 பா.ஜ.,வுக்கு, தமிழகத்தில் தொண்டர்கள் அதிகம்; ஆனால், முன்னிறுத்த முகம் இல்லை.-சுப்பிரமணியன் சாமி: # அதுக்குத்தான் மூன்று முகம் ரஜினியை இழுக்கப்பார்த்தாங்க,முடியல


========================


12 ஜெவுக்கு அளித்த சிகிச்சை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட்டு . சந்தேகத்தை, சம்பந்தப்பட்டவர்கள் போக்க வேண்டும்.-தமிழிசை # வெள்ளை அறிக்கை வெளிவந்தா பல கறுப்புப்பக்கங்கள் வெளி ஆகிடுமே?


=====================

13 அ.தி.மு.க.,வினருக்கு விலை பேசி, கட்சியை ஒழிக்க, மத்திய அரசு நினைக்கிறது.- மதுசூதனன்:# ஏற்கனவே விலை போனவங்களை எப்படி இன்னொருக்கா விலைக்கு வாங்க முடியும்?

======================


14  நாட்டில், கறுப்புப் பணம் எவ்வளவு உள்ளது என்பதற்கான, எந்தவொரு அதிகாரபூர்வமான புள்ளி விபரமும் இல்லை.- . அருண் ஜெட்லி: # இதுவும் ஒரு கரும்புள்ளி தான் நம்ம ஆட்சில


===================

15 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு, நாட்டில் உள்ள, 99 %நேர்மையான மக்கள் மீது வீசப்பட்ட நெருப்பு குண்டு.-ராகுல்:  தண்ணியைக்கொதிக்க வைப்பதே அதில் உள்ள கிருமியை ஒழிக்கத்தான்


=======================

16  அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறோம்--முரளீதர் ராவ் (பா.ஜ., தேசிய பொதுச் செயலர்) # மோடி  ஓபிஎஸ் , சசிகலா தலைல கை வைக்கும்போதே நினைச்சோம் 


======================

17 சசிகலாவிடம் இருந்தும் பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும் -  கவுதமி # பதில் வராது,அதுக்குப்பதிலா  பொட்டி வேணா கிடைக்கும், வாங்கிக்கறீங்களா?


====================

18 அதிமுக.வில், ஜெ  உழைப்போடு, சசி அத்தை யின் உழைப்பும் இருக்கிறது-ஜெவின், அண்ணன் மகன் தீபக் # தீ”பக்கா”வான பதில், பொரி ஒரு பக்கா 10 ரூபாதான்


===================

19 ஜெ உடலைச்சுற்றி  சசிகலா குடும்பத்தினர் மட்டுமே சூழ்ந்திருந்தது  ரொம்பவும் செயற்கைதனமாக இருந்தது.-தீபா # எல்லாம் ஒரு முன்னெச்சரி க்கை நடவடிக்கை தான்


========================

20 

துடிப்போடு உள்ளது இந்திய பொருளாதாரம் :அருண் ஜெட்லி # ஆனா ஏடிஎம் ல வரிசைல நின்னு நின்னு மக்கள் கால் பாதம் எல்லாம் தடிப்போடு உள்ளது


======================

0 comments: