Friday, December 30, 2016

இனி சிங்கிள் டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான்?!!!!

தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க பெப்சி, கோகோ கோலாவுக்கு தடை! # முதல்ல அனுமதி கொடுத்ததே தப்பு.தடைக்கு இவ்ளோ கால தாமதம் இன்னொரு தப்பு

===============

2 மல்லையாவுக்கு இருக்கும் சலுகை எனக்கு இல்லையா?-துப்புரவுத் தொழிலாளி # வராக்கடன்னு அறிவிக்க குறைந்த பட்சம்1000 கோடி லோன் வாங்கி இருக்கனும் போல
===================

3 அனைவரையும் அரவணைக்கிறாரா ஸ்டாலின்?!’ - கலங்கிய கருணாநிதி # பதவி கிடைக்கனும்னா அரவம் எனினும் அணைப்பவர்தான் அரசியல்வாதி.அழகிரியை மட்டும்

================

4 SRM பச்சமுத்துவின் கூட்டாளி வேந்தர் மூவீஸ் மதன் கைது # இவரையாவது ஒயர் இல்லாத/எட்டாத ஜெயில் ரூமில் அடைக்கவும்

================

5 25 லட்சம் கொள்ளை: திமுக பிரமுகர் மகனுக்கு வலை # கழகத்தோட பேரையே கெடுத்துட்டாரே?கோடிக்கணக்கில் அடிச்சாத்தானே கட்சிக்குப்பெருமை?

=========

6 மோடியை 15 ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளவிடுங்கள்: அமித் ஷா டீ குடிக்கவே செக் ட்ரான்சக்சன்தான் னு சொல்லிடுவாரே?

===============

7 அடுத்தவர் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் 7 ஆண்டு சிறை: வருமானவரித்துறை # ஜெயில் ரூம் பூரா ஹவுஸ்புல் ஆகிடும்


==================

8 கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏழைகள் கணக்கில் ரூ.10,000 செலுத்த மத்திய அரசு திட்டம்:.10,008 கண்டிஷன் போடுவீங்களே?


=================

9 செல்லாத நோட்டு அறிவிப்பால் மது விற்பனை 15% குறைந்தது: செய்தி # ஷாக் அடிச்சு அவனவன் ஆடிப்போய் இருக்கான்.கிக் ஏத்த ஏது நேரம்?


=============

10 5.44 லட்சம் கோடி வங்கிகளில் மாற்றப்பட்டுள்ளது - செய்தி.


# ஒண்ணே முக்கால் லட்சம் கோடியை விட 3,மடங்கு+ தான் அதிகமா?


===============

11 விஜய் ஜோடி என்றால் சம்பளத்தை குறைத்துக் கொள்வேன்!” ‘கயல்’ ஆனந்தி # கொடுத்தாத்தானே குறைச்சு வாங்கிக்குவே?- புலி புகழ் ஸ்ரீ தேவி

===============

12 ஜம்மு காஷ்மீர் வங்கியில் செல்லாத ரூ கொள்ளை: மூகமுடியுடன் வந்த மர்ம நபர்கள் துணிகரம்.#,அட லூசுத்திருடா.2000 ரூ நோட்டை அடிச்சிருக்கலாமில்ல?


=================

13 சபரி மலை கோவிலின் பெயர் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சாமி கோவில் என மாற்றம் தான் சரி ஐயப்பா தப்பு னு யாரும் கிளம்பலையா?


==================

14 தலைமறைவாக இருந்த வேந்தர் மூவிஸ் மதன் மணிப்பூரில் கைது # இந்த பண முதலைங்க எல்லாம் இருக்கற ஊர் கூட MONEYப்பூரா இருக்கு

==============

15 பணக்காரர்களுக்கு மட்டும் பிரதமர் ஆட்சி நடத்துகிறார்; பாராளுமன்றத்திற்கு ஏன் வருவதில்லை?- ராகுல் # வந்தா நை நை ன்னு கேள்வி கேப்பீங்க

================

16 தனுஷ் புதிய படத்தில் ஜோடி அமலா பால் ,அம்மா கேரக்டர் கவுதமி # இதெல்லாம் தானா அமையுதா?அமைச்சுக்கறாரா?எல்லாம் டைவர்ஸ் கேசா இருக்கு

==============

17 நெல்லித்தோப்பு காங் வெற்றி. 11502 வாக்கு வித்தியாசம் # நெல்லி "தோப்பு"இல்ல.ஜெயிப்பு


=============

18 2017-க்கு பிறகு ஏழைகளே இருக்க மாட்டார்கள்-மோடி.

2022-ல் அனைத்து ஏழைக்கும் வீடு-மோடி

.ஆனா இருக்கு.இருக்கு ஆனா இல்ல

==============

19 எலக்ஷன் என்றாலே கலக்ஷன் என்றாகிவிட்டது,-விஜயகாந்த் # தோல்வி அடைஞ்சிட்டா இதே சமாளிபிகேசன் என்றாகி விட்டது

===============

20 கருப்பு பண விவகாரம்... இந்தியர்கள் பட்டியலை தர சுவிஸ் அரசு ஒப்புதல் #500 rs ,1000rs மாத்தனும்னா இனி தந்துதானே ஆகனும்.மாப்பு ஆப்பு


=================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...