Friday, December 23, 2016

DANGAL(HINDI) - சினிமா விமர்சனம்

 Image result for dangal movie தமிழ் சினிமாவில் ஒரு கமல்ஹாசனோ, விக்ரமோ செய்ய முடியாத சில சாதனைகளை அமீர்கான் செய்துள்ளார். என்ன தான் கேரக்டருக்காக தன்னை வருத்திக்கொள்வதில் உருமாற்றிக்கொள்வதில் கமல் ,விக்ரம் இருவரும் விற்பன்னராக இருந்தாலும் தங்கள் உழைப்புக்கேற்ற வெற்றியைப்பெறுவதில் , அனைத்துத்தரப்பு ரசிகர்களிடமும் தங்கள் படைப்பை முன்னிறுத்துவதில் கொஞ்சம் பின் தங்கியே இருக்கிறார்கள்

 இப்படிச்சொல்வதன் சாராம்சம் அவர்கள் உழைப்பைக்குறை சொல்வதல்ல. அவர்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பதில் எங்கேயோ தவறு நடக்குது. ஆனால் கலை நுணுக்கம் சார்ந்த கமர்ஷியல் படைப்பு எப்படி படைப்பது? வியாபார ரீதியான பிரம்மாண்ட வெற்றியையும் பெற்று  விமர்சகர்கள் பாராட்டையும் ஒருங்கே பெறுவது என்ற செப்பிடு வித்தையை அட்டகாசமாகக்கற்றவர் அமீர்கான் என்றால் மிகை இல்லை.


ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள் ஹிட் ஆவதில் குறிஞ்சி மலர் உதாரணங்கள் தான். லகான் ,சக் தே இந்தியா , தோனி , அஸ்வினி ,  இறுதிச்சுற்று,  சென்னை 28,28-2  வரிசையில் ...படத்தோட கதை என்ன?ஹீரோ  ஒரு மல்யுத்த வீரர் தன் துறையில் சாதிக்க ஆசைப்படறார்.ஆனா சொந்தக்காரங்க குறுக்கீடுகளால் அது முடியல. தன்னால சாதிக்க முடியாததை தன் வாரிசுகள் மூலமாவது சாதிப்போம்னு நினைக்கறார்.அவருக்குப்பிறந்த 4 பேரும் பெண்கள்.

 அவர் மூடு அவுட் ஆகி இருக்கார். ஒரு கட்டத்தில் நால்வரில் இருவர்  தன் லட்சியத்துக்கு உதவுவாங்க என எதேச்சையாக கண்டுபிடிக்கிறார்.

 அப்பறம் என்ன? ஒரே ட்ரெயினிங்  ட்ரெயினிங்  தான். அவரோட லட்சியம் ஈடேறியதா? என்பது க்ளைமாக்ஸ்

 ஹரியானா வைச்சேர்ந்த மல்யுத்த ப்ரியர்  மாவீர சிங் போகத்  வாழ்வில் நிக்ழ்ந்த உண்மை சம்பவம் தான் படம்


பொதுவாக அனைத்துத்தரப்பினருக்கும் நன்கு தெரிந்த கிரிக்கெட் , கபடி , ரன்னிங் போன்ற விளையாட்டுகளை பின்புலமாக கொண்டு படம் எடுத்து வெற்றி பெறுவது எளிது.ஆனால்; பெரும்பாலோனோர் அதிகம் அறியாத மல்யுத்தம் பின்புலம கொண்டு திரைக்கதை அமைத்து ரசிக்க வைப்பது பிரம்மப்பிரயத்தனம். அசால்ட்டாக ஜெயித்திருக்கிறார் இயக்குநர் நிதேஷ் திவாரி


ஹீரோவா அமீர்கான், ஓப்பனிங் சீனில் ஜிம் பாடியை காட்டும்போது ஆரம்பிக்கும் கை தட்டல் க்ளைமாக்ஸ் வரை அப்பப்ப ஒலிச்சுக்கிட்டே இருக்கு. சிக்ஸ் பேக் சிங்கமா , நடுத்தர வயசு தொப்பை உள்ள ஆளா என கெட்டப் சேஞ்ச் அற்புதம்.

 பொதுவா ஒரு ஹீரோ தயாரிப்பாளரா ஆனா முழுக்கதையும் தன்னைச்சுற்றியே இருக்கனும் என எதிர்பார்ப்பாங்க ( உதா - கமல் , விஜயகாந்த்)ஆனா அமீர்கான் திரைக்கதையின் தேவை கருதி பல இடங்களில் அண்டர் ப்ளே பண்ணி இருக்கார்

அவருக்கு ஜோடியாக வரும் சாக்‌ஷி தன்வார் கனகச்சிதம். வசனங்கள் கம்மி,ஆனால் ஆக்டிங் ஸ்கோப் அதிகம்

 மகள்களாக வரும் சிறுமிகள் 2 பேர் பட்டையைக்கிளப்பி இருக்காங்க . பாய்ஸ் கட்டிங்கில் ஸ்கூல் போகும்போது கூனிக்குறுகுவது , பிராக்டீசில்  சக மாணவனை கலாய்ப்பது வாவ்.

இசை , பாடல்கள் , ஒளிப்பதிவு  எல்லாமே அபாரம் என்றாலும்  பேக் போன் ஆஃப் த ஃபிலிம் ஸ்டண்ட் மாஸ்டரின் அதீத உழைப்பு. மல்யுத்தம் பற்றி பக்காவாக அறிந்து அதன் ரூல்ஸ் & ரெக்குலேஷன் எல்லாவற்றையும் ஃபாலோ பண்ணி படம் நெடுக அவர் காட்டி இருக்கும் டெடிகேஷன் அபாரம்

 திரைக்கதையில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் வருது,ஆனா அபூர்வமான குறிஞ்சி மலரை ரசிக்கும்போது அதன் குறைகளைப்பற்றி பேச நேரம் இருக்காது

வாவ் இயக்கம் 


1  கீதா  தன் கூந்தலை வளர்த்து , நெயில் பாலீஷ் போடுவது , சைட் அடிப்பது என் லேசாக பாதை விலகும்போது அவர் சகோதரி பார்க்கும் துல்லியப்பார்வை அற்புதம்


2  டெலிஃபோனில் தன் ஈகோவை விட்டு மகள் அப்பாவிடம் பேசும் உரையாடல் , வெறும் விசும்பலாக மட்டுமே ஒலிப்பது


3  தன் மகள்கள் 2 பசங்களை அடிச்ட்டு வந்துட்டாங்க என்பதை அறிந்து தன் லட்சியம் நிறைவேற பாதை தெரியுது என்பதை ஹீரோ உணரும் இடம், அப்போது ஒலிக்கும் பிஜிஎம்


4  பின் பாதி திரைக்கதையில் பெரும்பாலும் மல்யுத்தக்காட்சிகளே என்றாலும் போர் அடிக்காமல் எடுத்த விதம்தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

அமீர்கான் ன் ஹிந்திப்படம் பலராலும் சிலாகிக்கப்படுகிறது.மகிழ்ச்சி.ஆனால் அது கிட்டத்தட்ட மாதவன் நடித்த "இறுதிச்சுற்று" கதை தானாம்

2 கதைத்தேர்வில் ,ஈடுபாட்டில் .உழைப்பில் அமீர்கான் =கமல் + விக்ரம்

3 உடல் பலத்துக்குத்தேவையான புரோட்டீன் சத்து சைவத்தை விட அசைவத்தில்தான் அதிகம்னு ஒரு தவறான கருத்து மறைமுகமா சொல்லப்படுது (HINDI)

4 கனகச்சிதமான திரைக்கதை ,பொருத்தமான பின்னணி இசை ,விசிலடிக்க வைக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் உழைப்பு ,ஒருங்கிணைக்கும் இயக்கம் அபாரம் (hindi )

5 கமர்ஷியல் கலந்த கலைப்படங்கள்
1 உதிரிப்பூக்கள்
2 மகாநதி
4 DANGAL
3, MS DHONIநச் டயலாக்ஸ்

1 வாழ்க்கைல நீ ஜெயிக்கனும்னா எப்பவும் இயங்கிக்கொண்டே இரு.தேங்கி நிற்காதே! (HINDI)

2 தயாரிப்பு நடவடிக்கைகளில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஈடுபட்டால் ஆண் குழந்தைக்கு உத்தரவாதம் என்பது ஐதீகம் ( HINDI )

3 நம்மால எதை சாதிக்க முடியலையோ அதை நம் வாரிசு மூலம் சாதிக்க நினைப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம் (hindi)

4 யானையைப்போல் பலசாலியாக இருப்பதை.விட புலியைப்போல் ,சிறுத்தையைப்போல் வேகம் உடையவனாக ,நுணுக்கங்கள் கற்றவனாக ஆகு (HINDI)

5 புலியிடம் போய் "நீ யானையைப்போல் பாய்ந்து தாக்கு"ன்னு சொல்வது போல் இருக்கு உங்க பயிற்சி (HINDI)

6 ஒலிம்பிக்ல ஜெயிக்க , பதக்கம் வாங்க ஆளுங்க ரெடியா இருக்காங்க,ஆனா சப்போர்ட்டுக்குதான் ஆள் இல்ல #(HINDI)
சி.பி கமெண்ட்-DANGAL(HINDI)-ரிஸ்க் ஆன கதை.ரஸ்க் ஆன திரைக்கதை.பிரிஸ்க் ஆன இயக்கம்.வாட் எ க்ளைமாக்ஸ் .ரேட்டிங் - 4 / 5


0 comments: