Monday, December 05, 2016

ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய் !!!

மோடி தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையிலேயே கவனம் செலுத்துகிறார்.-ராகுல்# பாஜக வுக்கு செல்வாக்கு ஏறுமா?செல்லா வாக்கா மாறுமா?தெரில

=============

2 பாலியல் பலாத்காரம் பாதிக்கபட்ட பெண்ணிடம் ஆபாச கேள்வி கேட்ட நீதிபதி நீக்கம் # கேள்வி கேட்டே மடக்கலாம்னு பார்த்தாரு.முடக்கம் பண்ணிட்டாக

===========

3 ஜல்லிகட்டு விவகாரம் : கவர்னர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு # கவர்னரும் வெட்டியா தான் இருக்கார் போல


============

4 முதலிரவில் கணவனை தூக்கமாத்திரையால் தூங்கசெய்து கொள்ளை அடித்த புதுப்பெண் நடக்கும்னு வந்த மாப்ளை சம்பவ இடத்தில் அதிர்ச்சி

============

5


தமிழக அரசு மீதான ஊழல் பட்டியலை, கவர்னரிடம் கொடுத்தோம். அதை, அவர் குப்பையில் போட்டு விட்டார்- ராமதாஸ் #  அப்போ கவர்னர் மீது புகாரை பிரதமர்கிட்டே கொடுங்க=====================

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.-
செல்லுார் ராஜு  # அப்போ உங்களுக்கு இந்தியா பத்தியும் தெரில, விவசாயிகள் பிரச்சனையும் புரியல-- 


==============

 கருணாநிதியா, ஸ்டாலினா என்று, சிண்டு முடியும் முயற்சியில், விஜயகாந்த் ஈடுபடுவது வீண் வேலை.-ஆர்.எஸ்.பாரதி # சரி , ஸ்டாலினா? அழகிரியா?ன்னு மடையைத்திருப்பிவிடுவோமா?


===================


தி.மு.க.,வின் நிகழ்காலமே கேள்விக்குறியாக இருப்பதை, ஸ்டாலின் முதலில் உணர்வது நல்லது.-நாஞ்சில் சம்பத்  # எதிர்காலத்துல இன்னோவா கார் குடோனே வெச்சிருவார் போல==================9  தயாநிதிமாறனின் பர்சை , யாரோஅபேஸ்செய்தது தான், போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.- வைகைச்செல்வன் # அரசியல்வாதி கிட்டேயே திருடி இருக்கான்னா.. அவன் எப்பேர்ப்பட்ட கேடியா இருப்பான்?
==============10 நான் நிதியமைச்சராக இருந்திருந்தால் ராஜினாமா செய்திருப்பேன்-ப.சி்# ரிசர்வ்பேங்க் ஆபீசரா இருந்திருந்தா நான் கூட ரிசைன் பண்ணி இருப்பேன்.ஆனா இல்லை================11 ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு தீவிரம்: தமிழிசை # முதல்ல இந்த நோட்டுக்கட்டு பிரச்னையை முடிங்க.ஜல்லிக்கட்டு பின்ன பாப்போம்================12 பணம் எடுக்க வரிசையில் நின்ற கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது # மோடி அரசின் சாதனைன்னு இதையும் லிஸ்ட்ல சேர்த்துடுவாங்களோ?
==============13 விளம்பரங்களில் மோடி படம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.500 அபராதம் # அடேங்கப்பா.பெரிய தொகையா இருக்கே.சின்ன நிறுவனம் தாங்குமா?================14 தேசியகீதம்.அர்த்தம் கேட்டால் எந்த இந்தியனும் பாஸாக மாட்டான்- ராம்கோபால் வர்மா # ஆனா தேசப்பற்றுன்னு வந்துட்டா எந்த இந்தியனும் பெயில் ஆக மாட்டான்===============15 காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும் - மோடி சாப்பிட வழி சொல்லுங்க.நாளை பாயாசம் நாளை பார்ப்போம்===============16 மராட்டியத்தில் இளம்பெண்களுடன் சாமியார் உல்லாசம் வீடியோ வெளியாகி பரபரப்பு # மராட்டி மொழி புரியாட்டி என்ன செய்வானோ தமிழன்=================
17 திருப்பதி ஏழுமலை கோவிலில் தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் இன்று காலை சுவாமி தரிசனம் பணம் போடப்போய் இருப்பாரோ===============18 தங்கம் விலை மேலும் குறையும்: சம்மேளன மாநில தலைவர் # போற போக்கைப்பாத்தா ரேஷன் கடைலயே மாசம் 2 கிராம் தருவாங்க போல===================

19 ரஜினியை பின்னுக்கு தள்ளிய விஜய், பிரமாண்ட வியாபாரம் # ரஜினி நட்ட ஈடு கொடுப்பார்.விஜய் கூட குடுப்பாரு என பின்னாளில் பொருள் கொள்க

===============

20 ரூ.13,860 கோடி பதுக்கிய தொழிலதிபர் கைது.. கமிஷனுக்காக செய்ததாக வாக்குமூலம் # கல்மிஷமா செஞ்சாலும், கமிஷனுக்காக செஞ்சாலும் தண்டனை 1 தானுங்கோ

================

0 comments: