Monday, December 12, 2016

இதுவரைக்கும்.அச்சம் இல்லைங்க.இப்போதான் லைட்டா பயமா இருக்கு

வீண் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை - செங்கோட்டையன்
# அப்போ அண்ணனுக்கு உண்மை தெரியும்.ஆனா சொல்ல மாட்டார்

============
2 பாதுகாப்பு மரபுகளை உதறிவிட்டு தாயாரை பார்க்க சென்ற மோடி # இதெல்லாம் முதல்வன் படத்துல எப்பவோ பார்த்துட்டோம், வேற வேற

=================

3 பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் இளம்பெண் கொலை: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்; மு.க.ஸ்டாலின்# ஜெயிலில் கைக்கோ வாய்க்கோ எட்டும் உயரத்தில் கரண்ட் கம்பி வைச்சிடப்போறாங்க

==============
4 அதிதீவிர புயலாக மாறியது வர்தா புயல்” தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு # வர்தா வருதோ இல்லையோ , நல்லாட்சி கடைசி வரை தமிழகத்துகு வராது போல


==============

5 ஜெ மரணம் குறித்து யாரும் வதந்தியை பரப்ப வேண்டாம்: சி.ஆர்.சரஸ்வதி.# நாக்குல சரஸ்வதி குடி இருந்தா கல்விமான்,மாஃபியா குடி இருந்தா சக்திமான் சகதிமான்


===============

6 அரசியல் சட்ட வழிகாட்டுதல்படி ஆட்சி செய்ய ops முன்வர வேண்டும்- ராமதாஸ் # முதல் கட்டமா சசிகலா காலில் விழுவார், பின் அழுவார்


==============


7 ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக, நான் பேசினால், பார்லிமென்டில் என்ன மாதிரியான பூகம்பம் வரும் என்பதை நீங்கள் பார்ப்பீர்- ராகுல்: # கரெக்டா பூகம்பம் வர்ற அன்னைக்கு எதுனா பேசுவார்னு நினைக்கேன்
==================
8  மோடியின்    நண்பர் ஒருவர், கறுப்புப் பணம் வைத்திருக்கிறார். ஆனால், அவர் பெயரை வெளியிடமாட்டேன். -முலாயம் சிங் யாதவ் # எனக்குக்கூட உங்களைப்பற்றி ஒரு ரகசியம் தெரியும், ஆனா சொல்ல மாட்டேன்
==================
யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஜெ நினைத்தாரோ, யாரால் அ.தி.மு.க.,வை வழிநடத்திட முடியும் என்று தீர்மானித்தாரோ, அவர் கட்சி பொறுப்புக்கு வருவார்.-மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்:# உங்க கனவில் எம்ஜிஆர் , ஜெ வந்து சொல்லி இருப்பாங்களே?================10 யார் பொறுப்புக்கு வர வேண்டும் என்று ஜெ நினைத்தாரோ, யாரால் அ.தி.மு.க.,வை வழிநடத்திட முடியும் என்று தீர்மானித்தாரோ, அவர் கட்சி பொறுப்புக்கு வருவார்.-மதுரை ஆதீனம் அருணகிரிநாதர்:# உங்க கனவில் எம்ஜிஆர் , ஜெ வந்து சொல்லி இருப்பாங்களே?
===================
11  எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொள்ளவில்லை-வெங்கையா நாயுடு: # எங்களுக்கு பேங்க்/ ஏடிஎம் ல க்யூ வில் நிக்கவே டைம் சரியா இருக்குங்க.


======================

12   எதிர்க்கட்சிகள் வைக்கும் எந்த கோரிக்கைகளையும், இப்போதுள்ள, அ.தி.மு.க., அரசு, காதில் வாங்கிக் கொள்வதில்லை-ஸ்டாலின்  # ஜெ வழியில் நடப்போம்னு ஓபிஎஸ் சொன்னாரே? மறந்துட்டீங்களா?


========================

13 பார்லிமென்டில் பேசினால், பூகம்பம் வெடிக்கும்' என்கிறார்,  ராகுல்-:ஸ்மிருதி இரானி  # இதான் சாக்கு, தேசிய பாதுகாப்பு சட்டம், இயற்கைப்பேரிடர் தடுப்பு நடவடிக்கைனு எதுனா சொல்லி கைது பண்ணிடுங்க


====================

14 

ஜெ., மறைவுக்கு இரங்கல் இல்லை : அ.தி.மு.க., இணையதளம் அலட்சியம் # போற போக்கைப்பார்த்தா ஜெயா டிவி பேரே சசிகலா டிவின்னு மாறிடும் போல


====================


15 சசிகலா அதிமுக பொதுச் செயலாளரானால் பிராமண சமூகத்தின் அக்கறையான ஆதரவு கிடைக்காது-S.Vசேகர் # இன்னும் ஜாதி ரீதி ஆதரவே பாத்தா எப்டி?

==============

16 ஜெ எப்படி இறந்தார்
என்பதே எங்களுக்குத் தெரியவில்லை -அப்பல்லோ ரெட்டி
# தெரியாமயே 90 கோடி ரூ பில்னா தெரிஞ்சா எத்தனை கோடி பில்லோ?

===========

17 ஜெ வின் அரசியல் வாரிசு சசிகலாதான் - தம்பித்துரை எம்.பி. # தரை தட்டிய துரை

==============

18 மோடியின் நாடக வசனங்கள் மக்களிடம் இனி எடுபடாது - ராகுல்காந்தி # அவராவது ஆக்டிவா இருக்காரு.நாம ஆக்டிவேட் ஆகாத சிம்மா தானே இருக்கோம்?


==============

19 சேகர் ரெட்டியின் வீட்டில் இன்றும் குவியல், குவியலாக பணம், வீட்டின் ரகசிய சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது..# செத்தார்டா சேகரு

=============

20 வர்தா புயல் தொடர்பான மக்கள் அச்சப்படத் தேவையில்லை: சென்னை மாநகராட்சி # இதுவரைக்கும்.அச்சம் இல்லைங்க.இப்போதான் லைட்டா பயமா இருக்கு


=====================

0 comments: