Monday, December 12, 2016

கவுதமி யும் , மு,க ஸ்டாலினும் ,மோடியும், கமலும்

செல்வந்தர்களின் வாராக் கடனை வசூலித்தாலே நாடு மிக வேகமாக முன்னேறும்:நீதிபதி யோசனை# சரிதான்.ஆனா கமிசன் வாங்கிட்டு விட்டுடுறாங்க போல


=============2 மோடி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை.. தமிழிசை மறுப்பு # அப்படி இருந்தா அது அதிமுகவே இல்லை===========3 ஜெ மறைவு பற்றி பரப்பப்படும் அனைத்தும் வதந்தி - வைகோ # இவருக்கு எல்லா சிதம்பர ரகசியங்களும் தெரிஞ்சிருக்கு
============4 டெபிட், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தினால் அதிரடி டிஸ்கவுண்ட் சலுகைகள்.. அருண் ஜேட்லி # சரவணா ஸ்டோர் ரேஞ்ச் க்கு இறங்கிட்டாரே?
==================
5 இந்தியா முழுக்க இலவச வாய்ஸ் கால் : ஏர்டெல் அறிவிப்பு ஏமாத்தனும்னா அவன் ஆசையை தூண்டனும்.சதுரங்கஏர்டெல் வேட்டைகள்
===============6 உணவு பொருட்களை செய்தித்தாள்களில் மடித்து தர தடை: நாடு முழுவதும் இன்று முதல் அமல் # இதுதான் இப்போ சூடான செய்தி.===============7 எந்த கேள்வியும் கேட்கலாம் என மோடி கொடுத்த நம்பிக்கையால் ஜெ மரணம் குறித்து கடிதம் -கவுதமி # உண்மை வெளில வரனும்.துரோகி உள்ளே போகனும்============8 சேகர்ரெட்டிக்கு ரூ10 கோடிக்கான ரூ.2,000 புதிய நோட்டுகளை வழங்கிய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்க #500 ரூபா அபராதம்.அதானே உங்க டக்கு?


================

9 ஜெ இறப்பு குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களில் உண்மை இல்லை- வைகோ # சிபிஐ ஆபீசரே சொல்லிட்டாரு.அப்புறம்.என்ன?

===============

10 ரயில், பேருந்துகளில் பழைய ரூ.500 நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் ஏற்கப்படாது - மத்திய அரசு # இத்தனை நாளா ஏத்துக்கிட்டீங்களா?


=================

11 ஜெ நினைவிடத்தில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம், சசிகலா கண்ணீர் அஞ்சலி..# பண முதலைக்கண்ணீர்

===============

12 ஸ்டேட் வங்கி ஏடிஎம் அட்டையில் 3 முறைகளுக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம்:
வங்கி நிர்வாகம்- பரமசிவன் கழுத்து பாம்புகள் பேங்க்குகள்

==================

13 ஜெ வழியில் நான் என்பதை தெரிவிக்கவே நினைவிடம் சென்றார் சசிகலா: தினமனி # பொதுவா கொலையாளி அடிக்கடி மர்டர் ஸ்பாட்க்கு போய் பார்ப்பானாம்.

===========

14 கட்சித் தலைமையை உடனே ஏற்க சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தல் -# யாரு?தியாகி சுதாகரனும் தியாகினி இளவரசியுமா?

==============

15 ஜெ.மக்களின் அன்பைப் பெற உழைத்தவர்
ஜெ.க்கு் தாயானவர் சசிகலா- சைதை துரைசாமி# வெறும் பணம்.ஆட்டுவிக்குது


==============

16 அதிமுகவை நான் இருக்கும் வரை யாராலும் அழிக்க முடியாது- வைகோ
ஒருத்தரே போதும்கறாரா?


================

17 அம்மாவின் மறுபிறவியாக சின்னம்மாவை பார்க்கிறோம் - தமிழ் மகன் உசேன் # உ"ஷேம்"

================

18 அதிமுகவிற்கு சின்னம்மா மட்டுமே தலைமையேற்க வேண்டும் - கோகுல இந்திரா# அப்பதான் கட்சி கெட்டு குட்டிச்சுவரா போகும்?

=============

19 அம்மாவின் தோழியாகவும், செவிலியாகவும் இருந்தவர் சசிகலா அம்மையார் - செங்கோட்டையன் # ஆடுடா ராமா குட்டிக்கரணம் போடுடா ராமா.

===============

20 அ.தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது-.ஸ்டாலின் # கவுதமி ஓப்பனா சொன்னதை பூடகமா சொல்றார்


=================

0 comments: