Thursday, December 01, 2016

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி - 1/12/2016- 6 படங்கள் முன்னோட்டப் பார்வை

1   சைத்தான்
2 மாவீரன் கிட்டு
3 அழகென்ற சொல்லுக்கு அமுதா
4 பழைய வண்ணாரப்பேட்டை
5  3 DAYS TO KILL

6 UNDER WORLD 5 - BLOOD WAR


1   சைத்தான்

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் ஜுலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் 'சைத்தான்' திரைப்படம் வெளிவரவுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

அருந்ததி நாயர், கிட்டி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஜோ டி க்ரூஸ் நடிகராக அறிமுகமாகிறார்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, ஒடிசா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தின் இறுதி கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'சைத்தான்' படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆரா சினிமாஸ் வெளியிடுகிறது. விஜய் ஆண்டனி படங்களில் இந்தப் படமே அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


பட ரிலீஸ் தள்ளிப் போவதால் 'சைத்தான்' பட டீம் ரசிகர்களைக் கவர்வதற்காக ஒரு ஐடியா செய்திருக்கிறது. இதற்கு முன்பு ராஜதந்திரம் படத்தின் 2ம் பாகத்துக்கான முதல் ஆறு நிமிடங்களை வெளியிட்டிருந்தார்கள்.

அதே உத்தியை 'சைத்தான்' படத்துக்கும் செய்திருக்கிறார்கள் படக் குழுவினர். 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிடக் காட்சியை யூ-ட்யூபில் வெளியிட்டிருக்கிறார்கள். அதோடு சேர்த்து படத்தில் இடம் பெறும் ஜெயலக்‌ஷ்மி பாடலையும் வெளியிட்டிருக்கிறார்கள். 

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த ஐந்து நிமிடக் காட்சியும், ஜெயலக்‌ஷ்மி பாடலும் திரையிடப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது. இதன் மூலம் டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கும் 'சைத்தான்' படத்துக்கான எதிர்பார்ப்பை தக்க வைக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறார்கள்.

இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி கூறியது...
யாரு சைத்தான்? 
நீங்க கேட்ட கேள்வியில் தான் கதையே இருக்கு. விஜய் ஆண்டனி தான் இந்தப் படத்துல சைத்தான், ஆனா பாஸிட்டிவ் ரோல் தான். ஐடி கம்பெனியில் வேலை செய்யும் விஜய் ஆண்டனிக்கு வரும் பிரச்னை என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் தான் சைத்தான் படத்தோட ஒன் லைன். படத்துல திரைக்கதை தான் ரொம்ப வலிமையா இருக்கும்.  இடைவேளி வரை ஒரு பேட்டன்லையும், இடைவேளிக்குப் பிறகு இன்னொரு கலர்லையும் படம் நகரும். அதான் இந்தப் படத்தோட ஸ்பெஷல்.  
சைத்தான் எந்தமாதிரியான ஜானர்? 

 சோறு, ஐடி காட்டுனு நம்ம கொத்தடிமையா நடத்தும் கங்காணி தான் ஐடி வேலைகள். அங்கிருந்து தான் ஐடியாவைப் பிடித்தேன். அங்க நடக்குற விஷயங்கள் தான் கதை. இதில் ப்ளாக் மேக்ஜிக்கோ, சைக்கோவோ, சீரியல் கில்லர் படம் மாதிரியோ கிடையாது. ஆனால் திரைக்கதை சைக்கலாஜிக்கள் ஆக்‌ஷன் ட்ராமாவா இருக்கும். கமர்ஷியல் படம் தான், இருந்தாலும் கொஞ்சம் வெரைட்டியா இருக்கும். நான், சலீம் மாதிரி விஜய் ஆண்டனிக்கு பொருந்தும் ஒரு கதாபாத்திரம் தான் சைத்தான். எந்த ஜானருக்குள்ளும் இந்தப் படத்தை அடக்க முடியாது

2 மாவீரன் கிட்டு
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' திரைப்படம், டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'மாவீரன் கிட்டு'. வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுதி இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டது.
இப்படத்தில் 4 கெட்டப்களில் நடித்திருக்கிறார் விஷ்ணு. சில காட்சிகளைத் தவிர, மீதமுள்ள மொத்த படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடித்தது படக்குழு.
அதனைத் தொடர்ந்து மீதமுள்ள காட்சிகளையும் முடித்துவிட்டு, படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இதர இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியது படக்குழு.
தற்போது டிசம்பர் 1ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், தற்போது தணிக்கைக்கு விண்ணப்பித்திருக்கிறது படக்குழு.
'மாவீரன் கிட்டு' படத்தைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் - விக்ராந்த் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் சுசீந்திரன்


3 அழகென்ற சொல்லுக்கு அமுதா

ரால்ப் புரொடக்‌ஷன்ஸ், ரபேல் சல்தானா  தயாரிக்கும் நாகராஜன் இயக்கும்  படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”
ஒரு இளைஞனுடைய காதலில்  நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”.
ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா  நாயகியாகவும்  நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகாசுரேஷ், சுவாமிநாதன், சதுரங்கவேட்டை  வளவன்,  மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி,  மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்,
கதை, திரைக்கதை, வசனம், எழுதி  நாகராஜன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சுசீந்திரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இசை: ரஜின்மகாதேவ்
ஒளிப்பதிவு: ஜே.கே. கல்யாணராம்
கலை: ஜேகே
படத்தொகுப்பு: கோபிகிருஷ்ணா
ஸ்டண்ட்: ஓம்பிரகாஷ்,
பாடல்கள்: கவிஞர் சிநேகன், ல்லிதானந்த், பா. முகிலன், மதுரகவி
சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு 


4 பழைய வண்ணாரப்பேட்டை

தொகுப்பாளராக இருந்து ரசிகர்களை கவர்ந்தவர் பிரஜின். இவர் கதாநாயகனாக ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக அஸ்மிதா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், ரோபா சங்கர், லொள்ளு சபா ஷேஷூ ஆகியோர் நடித்துள்ளார்கள்.
ஜி.மோகன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜூபின் இசையமைத்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா டாக்கிஸ் பட நிறுவனம் மூலம் பிரகாஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார். வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பு முடிந்தும் படம் வெளியாகாமல் இருந்தது. பல காரணங்களால் இப்படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில், அனாமிகா பிட்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட இருக்கிறது. இந்நிறுவனம் வெளியிடும் முதல் படம் இது. இந்நிறுவனத்தின் அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரகனி, இயக்குனர் விஜய் மில்டன், தாமிரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
இதில் தாணு பேசும்போது, ‘இந்த படத்திற்கும் எனக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. ஏனென்றால், நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழைய வண்ணாரப்பேட்டை இடத்தில் தான். அந்த இடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படத்தின் டிரைலரை பார்க்கும் போது என்னுடைய பழைய ஞாபகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. இந்த படம் நிறைய போராடங்களுக்குப் பிறகு வெளியாகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்’ என்றார்.
இயக்குனர் தாமிரா பேசும்போது, ‘காத்திருப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். அந்த வகையில் இப்படம் காத்திருந்து வெளியானாலும் சிறந்த வெற்றி பெறும்’ என்றார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட அனைவரும் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். இப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது

5  3 DAYS TO KILL

Dying of brain cancer, a dangerous international spy is determined to give up his high stakes life to finally build a closer relationship with his estranged wife and daughter, whom he's previously kept at arm's length to keep out of danger; but first, he must complete one last mission - even if it means juggling the two toughest assignments yet: hunt down the world's most ruthless terrorist and look after his teenage daughter for the first time in ten years while his wife is out of town. Written by Relativity Media


6 UNDER WORLD 5 - BLOOD WAR

The next installment in the blockbuster franchise, UNDERWORLD: BLOOD WARS follows Vampire death dealer, Selene (Kate Beckinsale) as she fends off brutal attacks from both the Lycan clan and the Vampire faction that betrayed her. With her only allies, David (Theo James) and his father Thomas (Charles Dance), she must stop the eternal war between Lycans and Vampires, even if it means she has to make the ultimate sacrifice.Written by Sony Pictures Entertainment


நன்றி - விகடன் , மாலை மலர் , தினமணி , ஆல் சினி வெப் சைட்ஸ்


0 comments: