Thursday, December 29, 2016

கானாப்ரபாவும் , கட்டதுரயும்

1  ஸ்ருதி  = வாழ்க்கை அழைக்கும்போது அதை கைகளால் அணைத்திடுங்கள் # வழுக்கை வரும்போது அதை விக்கால் மறைத்திடுங்கள்



=================



உங்களைப் பற்றி கவிதை வேண்டுமெனில் என்னிடம் TL ல் சொல்லுங்கள். நான் DMல் செதுக்கி பதுக்கி அனுப்புகிறேன் பார் லேடீஸ்




===============




3 எனக்கானதில்லை என்றறிந்த பின்னர்


எதற்காகவேனும்
கட்ட நின்றதில்லை
ஹோட்டல் பில்லை
நண்பன் தொல்லை


==============

4 OPS = எதுக்காக டெல்லி வந்தேன் தெரியுமா?


மோடி = எதுக்காக உங்களை டெல்லி வர வெச்சேன் தெரியுமா?ரெய்டு க்கு


=============

5 உனக்கு 1 தெரியுமா என பெண்கள் சொல்லிவிட்டு சொல்லும் வார்த்தைகள் அத்தனையும் உண்மையென நம்பப்படுகிறது ஆண்களால். என நம்பப்படுகிறது பெண்களால்


================


6 பிடித்தமானவர்களின் மவுனத்தை ரசிக்க பழகி கொள்ளாதீர்! உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா? பேசுனா முத்து/கபாலி உதிர்ந்திடுமா?னு சண்டை போடவும்


================


7 மீன ராசி அன்பர்களே! ஆபீசில்/கம்பெனியில் மேல் அதிகாரிகளை எதிர்த்துப்பேசாதீர்!FEMALE அதிகாரிகள் எதிரில் /சைடில் நின்று பார்க்காதீர்.


==============


8 டிவிட்டரை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துபவர்கள் லேடீஸ்தான்.சமையல் குறிப்பை படிச்ட்டு சோறு ஆக்கப்பூர்வமா செயல்படறாங்க



=============



9 இன்று விவசாயிகள் தினம்.முடிஞ்சவரை கடலை சாகுபடி செய்வோர்க்கு.வாழ்த்து



============



10 மீன ராசி அன்பர்களே! சந்திராஷ்டம் ஆரம்பிப்பதால் இன்று ஜாக்கிரதையா இருக்க வேண்டிய நாள்.சாலை விபத்து,செல்போன் இழப்பு வாய்ப்பு




===============



11 போராட்ட உணர்வு ,லட்சிய வெறி,ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு இவை சொல்லித்தெரிவதில்லை.ரத்தத்தில் ஊறி வருவது



=============



12 கமர்ஷியல் கலந்த கலைப்படங்கள்


1 உதிரிப்பூக்கள்
2 மகாநதி
4 DANGAL
3, MS DHONI

==========

13 மீன ராசி அன்பர்களே! இன்று நீண்டநாள் கனவு நிறைவேறும் நாள். ராசி கலர் மஞ்சள், அந்த கலர் கிடைக்கலைன்னா ஆஃபீசில் மஞ்சளா இருக்கும் எதுனா மஞ்சுளா பக்கம் அமரவும்



================



14  டாப் 6 திரைக்கதை 2016



1 இறுதிச்சுற்று

2 ஜோக்கர்
3 பிச்சைக்காரன்
4 காதலும் கடந்து போகும்
5 ஆண்டவன் கட்டளை
6 கொடி 




===================



15 கழுத்தில் சுளுக்கு பிடித்தவருக்கு திரும்ப முடியாமல் போவதால் திரும்பத்திரும்ப எது சொன்னாலும் திரும்பிப்பார்க்க முடியாமல் போகிறது #எதுனா உளறுவோம்




===================



16 நம்ம பொண்ணு நம்மை என்ன திட்டினாலும் நமக்கு கோபமே வர்றதில்லை, ஆனா நம்ம சம்சாரம் என்ன திட்டினாலும் நமக்கு கோபம் வரும், இதான் டிசைன்




====================



17  முருகர் டிபி வைச்சவங்க முருக பக்தராதான் இருக்கனும்னு இல்லை, வள்ளி , தெய்வானை கூட டி எம் ல கடலை போட்டுட்டு இருப்பவராவும் இருக்கலாம்




====================



18 ஏன் நம்ம வாழ்க்கையில மட்டும் ஏழரை சனியன் எட்டு போட்டு உக்காந்துட்டு இருக்கு?



சனீஸ்வரனுக்கு லைசன்ஸை கொடுத்து அனுப்பிடவும்


===================

19 இன்று அனுமன் ஜெயந்தி,அருகில் அனுமன் கோவில் இருப்பவர்கள் சாமி கும்பிடவும், இல்லாதவர்கள் ஹனுமலர் டிஎம் போய் வணக்கம் வைக்கவும்



==================

20 என் பழைய 20 கட்டுரைகளைத் திருத்தி எழுத மனம் ஒப்பவில்லை

கட்டதுர சார்,உங்களையே திருத்த முடியல,கட்டுரையை மட்டும் எப்டி?

====================

0 comments: