Monday, December 19, 2016

தீயா வேலை செய்யுங்க தீபா

புரட்சி தலைவி அம்மாவின் மனசாட்சியாக இருந்து, வாழ்ந்து வருபவர் சசிகலா"-அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் இல்லாம பேசாதீங்க


============2 வாடகைக் கார் நிறுவனங்கள் கட்டணத்தை 4 மடங்கு உயர்த்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி!# அதுல 25%,அரசுக்கு கட்டனுமா?டீலிங் எப்டி?
==================3 சசிகலா பின்னால் மக்கள்சக்தி உள்ளது -தா.பாண்டியன்

வேணா இருக்கு.அதுவும் சவுரியா ஒவுரியா தெரில


=============

4 பாபா ராம்தேவின் பதஞ்சலிக்கு நீதிமன்றம்! 11 லட்சம் அபராதம் #2015-2016 பதஞ்சலி வருமானம் 5000 கோடி ரூ.ஒரு மாத.2%வட்டிதானே?================5 மயக்க மருந்து, வீடியோ.30 மாணவிகளை கொடுமைப்படுத்திய டியூசன் மாஸ்டர்கள்! # மாணவிகளை ட்யூசனுக்கு அனுப்பும்போது ஆசிரியைகளிடம் மட்டும் அனுப்பவும்
================6 ஜெ சிகிச்சை குறித்து விரிவான அறிக்கை வேண்டும் : ஸ்டாலின் # ரமணா பட சீன் போல75 நாளும் டிராமா போட்டுட்டாங்க.ஒரு வீடியோ ஆதாரம் கூட இல்ல
=================7 ரூபாய் நோட்டு விவகாரத்தில்,  மோடி, தனிப்பட்ட முறையில் ஊழல் செய்தது தொடர்பாக, லோக்சபாவில் கூற, என்னை அனுமதிக்க மறுக்கின்றனர்.-ராகுல்:# சரி, மீடியாவில் சொல்லுங்க பார்ப்போம்
==================தனியார் வங்கிகளுக்கு,  வழங்கப்பட்டு உள்ள புதிய 2000 ரூ நோட்டுகள்  பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டதை விட, 8 மடங்கு அதிகம்.-ராமதாஸ் # காரணம் சிம்ப்பிள்,பிரைவேட் பேங்க்ல தான் அக்கவுண்ட் அதிகம்
===================
===================
10 நாய்க்கடியா..? ஆதார் அட்டை அவசியம் # சுத்தம், டாக்டரைப்போய்ப்பார்க்காம ஆதார் அட்டைக்கு அப்ளை பண்ணி 30 நாள் காத்து இருக்கனுமா? போய்யாங்
=============11 ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை- ஏ.கே.அந்தோணி # நே ரடியா தொடர்பில்லைன்னு மறைமுகமா சொல்றார் போல===================12 வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெ-உயிரோடு வந்து விடுவாரா?-திருநாவுக்கரசர் # புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமில்ல?
================13 ஒரு சிலருக்கும் மட்டும் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்கள் கிடைப்பது எப்படி?- அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி#மகளிர் சுய உதவிக்குழு மூலம் 30% கமிஷன் அடிப்படை
=================

14  நாடாளுமன்றம் முடக்கத்தால் பதவி விலக நினைக்கிறேன்: அத்வானி - ஓ.இத்தனை நாளா பதவில இருந்தீங்களா?


=================
15 சசிகலா அரசியலுக்கு வருவதை ஜெ வே விரும்பவில்லை: சசிகலா புஷ்பா # ஜெ அரசியலுக்குவர்றதை எம்ஜிஆர் கூடத்தான் விரும்பல


==================

16 ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் விருப்பம் -ராகுல் காந்தி # ஆயிரம் தான் இருந்தாலும் அம்மா சோனியா மேல இவ்ளோ வெறுப்பு கூடாது


=================

17 பணத்தட்டுப்பாடு ஜனவரி மத்தியில் சரியாகும் நிதி ஆயோக் தலைமை நிர்வாகி தகவல்# ஜனவரி ,பிப்ரவரி ன்னு இழுத்துட்டே போனா நாங்க மார்ச்சுவரி தான்

=============

18 வங்கி கணக்கில் அதிக பணம் வரவு வைத்த 3 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்: மத்திய நேரடி வரிகள் வாரியம் # சட்டு புட்டுனு 500ரூ அபராதம் கட்டிடுங்கப்பா


=================

19 அரசியலில் நிச்சயம் குதிப்பேன் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா அதிரடி பேட்டி # தீயா வேலை செய்யுங்க தீபா==================

20 வங்கிக் கணக்கை இயக்க பான் எண் கட்டாயம்: ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு # பேசாம எல்லார்க்கும் பேங்க்ல பார்ட் டைம் ஜாப் போட்டுக்குடுத்துடுங்க

===============

0 comments: