Monday, December 26, 2016

மோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது?

1  விஜய் ரசிகை =டாஸ் போடறேன்.பூ விழுந்தா நோ லவ்.தலை விழுந்தா ஐ லவ் யூ


அஜித் ரசிகன் = தல .விழுந்தாதாதான் லவ்னா அப்டிப்பட்ட லவ்வே வேணாம்


==============
2 நான் ஒரு சமாதானப்போராளி ன்னு சொல்றீங்களே? புரியல


என் மனைவி என் கிட்டே சண்டை போடும் போராளி.நான் சமாதானப்படுத்துவேன்=============


3 மிஸ்!100 நாள் ,100 Saree Days முடியுது.அடுத்த கட்டம் என்ன ?
ஜவுளிக்கடைல எல்லாத்தையும் ரிட்டர்ன் பண்ணனும்.வாடகை தரனும்

============


4 சார்.35/100,
புரியல.
மார்க் மை.வோர்ட் னு சொன்னீங்களே?

================


5 தலைவரே! நம்ம கட்சில மீனாட்சி,காமாட்சி,விசாலாட்சி னு ஏகப்பட்ட பொண்ணுங்க இருக்காக.எதுக்கு?
ஆட்சிலதான் நாம இல்ல., அட்லீஸ்ட் நம்ம கட்சிப்பொண்ணுங்க பேர்லயாவது ஆட்சி இருக்கட்டுமே?

=================6 புக் ஸ்டாலில்
இந்த புக் அட்டைய ஃபோட்டோ எடுக்கக்கூடாது
என்ன சார்?உங்க பக்கத்துல நிக்கற கட்டையையாவது ஒரு போட்டோ எடுத்துக்கவா?

==============


7 ஒரு வழியா வீடு திரும்புகிறேன் இன்றும் உன்னை நேசிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல்!
மிஸ்.வழக்கமா எத்தனை வழியா வீடு திரும்புவீக

===========

8 தொழிலாளர்கள் பேங்க்ல கூட்டத்துல நிற்பதை தவிர்க்க சம்பளத்த 27ம் தேதியா போடுறம்

தாங்க்ஸ் சார்

ஆனா, அதை 31 ந்தேதிதான் எடுக்க முடியும்


======================

9 நான் அவரை திட்டின பின் தான் என் சம்பளம் டபுள் ஆச்சு, ஹீரோ ஆனேன்


ஆனா உங்க இமேஜ் டேமேஜ் ஆச்சு, ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிடுச்சு,பரவால்லயா?

================

10 குருவே! என் வாழ்வு "பிரகாச"மயமாக நான் என்ன செய்யனும்?


வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருக்காம வாங்கிக்கட்டிக்கிட்டா போதும்.

=============

11 குருவே!அறிவு ஜீவி ஆக நான் என்ன செய்யனும்?


ஜிவிபி போல் எதும் செய்யாம இருந்தா போதும்

==============

12

ஜட்ஜ் =  விஷால் நடிச்ச நான் சிகப்பு மனிதன் படத்துல வேற ஒருவர் இசையை திருடிட்டீங்களா?

கைதி= சினி ஃபீல்டில் அதுக்கு இன்ஸ்பிரெசன்னு பேருங்க

==============

13  சார் எங்களுக்குத்தான் வேலை வெட்டி இல்லை. நீங்க ஏன் இத்தனை பேருக்கு பதில் சொல்லிட்டு இருக்கீங்க? 

அதான் எல்லாரையும் பிளாக் பண்ணவே ஒரு ஆளை அப்பாயிண்ட் பண்ணி இருக்கேன்

==============

14 மதன் =,யுவர் ஆனர்.ஜெயில்ல துணைக்கு என் 3 சம்சாரம் ,3 காதலிங்களையும் தங்க அனுமதிக்கனும்


ஜட்ஜ் = யோவ்.இது லாட்ஜா?

=================

15 நடிகன திட்ற உரிமை யாரு குடுத்தா?


சார்.ஆனானப்பட்ட ஆண்டவனையே திட்றாங்க.கடவுள் இருக்கான் குமாரு வை திட்ட மாட்டாங்களா?


===============

16 வங்கிகளில் நாளை முதல் 500,1000 நோட்டுகளை மாற்ற முடியாது: மத்திய அரசு2வது 3 வது 500 ரூ 1000 ரூ வை மாற்றலாமா எஜமான்?


==================

17 நான் எப்பவும் யாருக்காகவும் எதுக்கும் பயப்பட மாட்டேன்


அது சரிங்க தில்லு துர,ஏன் 10 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி ட்வீட் எரேசிங்?


================

18 மோடிக்குப்பிடிக்காத தமிழ் சினிமா எது?


கண்ணுல காசை காட்டப்பா (டுடே ரிலீஸ்)

===================

19 மிஸ்! உங்க ஃபோன் நெம்பர் என்ன?


சொல்ல மாட்டேன் போடா
இப்பத்தான் “நான் ரொம்ப ஃபிரண்ட்லி டைப்”னு டைப்னீங்க?===================

20 டியர்.கீரை வணக்கச்சொன்னேனே?வணக்கீட்டியா?(வாணலியில் வதக்குதல்)

இருங்க.என் FB பாலோயர்சுக்கு வணக்கம் வெச்ட்டு வரேன்


===============

0 comments: