Tuesday, December 13, 2016

ஆடித்தள்ளுபடி ,மோடித்தள்ளுபடி

தினத்தந்தி ஓனர், சசி சந்திப்பு...#சின்னம்மா வுக்கு மரியாதைசெய்ய மறந்துடாதீங்க
மறக்க மாட்டோம்.ஜிங் ஜக் எங்க அடையாளச் சின்னம் மா


==============

2 செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்! -ஓஷோ # ஆமாங்க.ஆனா செருப்பை எல்லாம்.வாசலோட விட்ரனும்.

=================


3 அம்மாவுக்காக நான், அம்மாவால் நான் என வாழ்ந்தவர் சசிகலா.. கருணாஸ் # சமத்துக்கிளிப்பிள்ளை.சொல்லிக்குடுத்தபடி ஒப்பிக்குது

============

4 செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தால், நாட்டின் பொருளாதாரம், வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தோல்வியை ஒப்புக்கொண்டு மோடி, ராஜினாமா செய்ய வேண்டும்.- மம்தா பானர்ஜி: # பொறுத்தார் பூமி ஆள்வார், வெறுத்தார் வெம்பி வாழ்வார்


====================அ.தி.மு.க. தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் கருணாஸ் எம்.எல்.ஏ # இதை யார் சொன்னாங்க? மக்களா?தொண்டர்களா?
சசிகலாதான் சொல்லச்சொன்னாங்க

===================
6 திருப்பதி கோவில் அறங்காவல் குழுவில் இருந்து தொழில் அதிபர் சேகர் ரெட்டி நீக்கம்# ஜனங்களுக்கு லட்டு கொடுக்கச்சொன்னா அரசாங்கத்துக்கு அல்வா கொடுத்திருக்காரு

==============

7 உங்கள் பேச்சைக்கேட்டு மக்களுக்கு அலுத்து விட்டது,மோடி மீது ராகுல் தாக்கு# நமக்கு வாக்கு வங்கி அந்து விட்டது,அதைப்பாருங்கோ ராகுல்ஜி

================
8 ரூ.50 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துகள் திருட்டு கைதான தொழில் அதிபர் பவன் ரூயாவுக்கு 14 நாள் போலீஸ் காவல் # ரூயா விக்கு லாக்கப்ல பாயா போட்டு விட்ருங்க ராம்குமார் ஸ்டைல்ல

===============

9 செல்லாத  நோட்டு அறிவிப்பு வெளியாகி, 50 நாட்களுக்கு பின், படிப்படியாக இயல்பு நிலை ஏற்படும்.-மோடி# சரி,பாதிக்கப்பட்ட 50 நாள் நட்ட ஈட்டை யார் தருவாங்க?


====================

10  என் வளர்ச்சியை பிடிக்காத, என் சமுதாயத்தை சேர்ந்தவர்களே, என்னை வீழ்த்த பார்க்கின்றனர்.-கருணாஸ்: # அரசியல்ல எப்பவும் கூட இருக்கறவங்க தான் குழி பறிப்பாங்க


========================

11 வர்தா புயல் 3,384 மரங்கள், 3,400 மின்கம்பங்கள் விழுந்துள்ளன- தேசிய பேரிடர் ஆணையம் எண்ணிட்டிருந்த நேரம் யாருக்காவது உதவி இருக்கலாம்

=============

12 பெட்ரோல் பங்க்குகளில் மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு 0.75% தள்ளுபடி: மத்திய அரசு#,ஆடித்தள்ளுபடி ,மோடித்தள்ளுபடி ரெண்டையும் நம்பக்கூடாது

=============

13 ஜெயலலிதாவின் இடத்தை நான் பிடிப்பேன் - தமிழிசை # ரைட்டு.அப்போ கவுதமி தான் உங்களுக்கு சசிகலா


==================

14 அம்மாவுக்கு பிறகு சின்னம்மா வருவது தானே முறை - தம்பிதுரை

# அப்போ அம்மாக்குப்பின் சித்தி தான்னா ராதிகா தானே சிஎம்?

==============

15 சொர்க்கத்தில் இயேசுவோடு தினமும் அம்மா பேசுகிறார் -உமாசங்கர் ஐ.ஏ.எஸ்# உங்களால முடிஞ்சா சசிகலாவை இயேசு கூட பேச வைங்க பார்ப்போம்

=============

16 யார்யார் எவ்வளவு டெப்பாசிட் செய்தார்கள்? டிச.16குள் அறிக்கை வேண்டும்: -மோடி # யார் யார் அந்த அறிக்கைல பொய் விபரம் தர்றாங்க்ளோ.


===================

17 தமிழக அரசுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது - ராஜ்நாத் சிங்

# அதிமுக.+…பாஜக கூட்டணி உறுதி போல

==================


18 சசிகலா 4 ஜெயலலிதாவுக்கு சமம்

-- வைகோ # அப்டி வை கோ நிஜமாவே சொல்லி இருந்தா வைகோ 40 நாஞ்சில் சம்பத்க்கு சமம்


===============


19 தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர இது சரியான தருணம்.- துரைமுருகன் # குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு நினைக்கறீங்க

=====================

20 எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின், ஜெ வை தலைமைப் பொறுப்புக்குக் கொண்டு வர, நான் பாடுபட்டேன்-திருநாவுக்கரசர் #  ஓஹோ, எல்லாப்பிரச்னைக்கும் நீங்க தான் மூல கா ரணமா?-இதை ஜெ இருக்கும்போதே ஏன் சொல்லலை?

============================


0 comments: