Monday, December 05, 2016

டாக் ஆஃப் த டவுன்

டாக்சி டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9,800 கோடி 'டிபாசிட் # இனி டாக் ஆஃப் த டவுன் இந்த டாக்சி தான்


=============
வங்கி, ஏ.டி.எம்.,களில் பணம் இல்லை; மக்களிடமும் பணம் இல்லை.-கபில் சிபல் # ஆனா அரசியல்வாதிக மட்டும் செழிப்பா இருக்காங்க, பேங்க் பக்கமே வர்லை, அது எப்டி?================


==================10ஆவது படித்துவிட்டு


மருத்துவம் பார்த்த

போலி மருத்துவர்கள் கைது


-செய்திவரை போலி நர்சுங்க யாரும்.சிக்கலையே அது ஏன்?


===========

5 தமிழகத்தில் அரசியலும், கருப்பு பணமும் ஒன்றாக கலந்துள்ளது- முரளிதரராவ் # அப்போ அரசியல்வாதிகளை ஒழிச்சா கருப்புப்பணத்தை ஒழிச்ச மாதிரி?


================

6 ஜன்தன் வங்கி கணக்கில் மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி ஆர்பிஐ நிபந்தனை.# அக்கவுண்ட் ஓப்பன் பண்றப்ப இந்த கண்டிஷன்.சொன்னீங்களா?

==============

7 நாடா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு # ஸ்டிக்கர் ரெடி பண்ணிக்குங்க

============

8 நான் இப்போது அரசியலில் இல்லை. எனவே, அரசியல் தொடர்பான கேள்விகளை கேட்காதீர்கள்.-அழகிரி:  # ஒரு ஃபேமிலி கேள்வி, உங்க தம்பி உங்களை ஓவர்டேக்கிட்டாரே?


===================


9    90 % மக்கள் ஆதரவு இருப்பதாக கூறும் பிரதமர், பார்லிமென்டை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்திப் பார்க்கலாம்.-EVKS # தேர்தல் செலவை நீங்க ஏத்துக்கறீங்களா?


==================

10   'ரிலே' ஓட்டத்தில், இடையில் குச்சியை பிடுங்கி செல்வதைப் போல் இல்லாமல், தி.மு.க.,வின் அடுத்த தலைவராக, ஸ்டாலின் ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக அரியணை ஏறுவார்.- துரைமுருகன் # அமைதிப்படை அமாவாசையாய் அழகிரி ஆன் த வே


====================

11 ஒரே மேடையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி- மத்திய அமைச்சர் மோதல் # அஜித் VS விஜய் ரசிகர்கள் கூட தேவலை


=================
12 உள்ளாட்சித் தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிடுவதை தடுக்க வேண்டும்: நீதிபதி கிருபாகரன்-# பொதுத்தேர்தல்ல மட்டும் போட்டி இடலாமுங்களா?
===============13 திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்: உச்சநீதிமன்றம் # இயக்குநர் சேரன் மகிழ்ச்சி.துட்டு வரும்னு எதிர்பார்ப்பு

==============
14 தமிழகம், 2வது முறையாக, தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில், முதல் நிலையில் உள்ளது- விஜயபாஸ்கர்# தமிழன் கொடுத்து கொடுத்து சிவந்த கரம்
=================

15  கறுப்புப் பணம் ஒழிப்பு தான், கட்சியின் உறுதியான கொள்கை. அதனால் தான், சேலம் மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி பொறுப்பாளர் அருண்குமார், கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார். இவர், பா.ம.க.,வில் இருந்து விலகி, ஓராண்டுக்கு முன், பா.ஜ.,வில் சேர்ந்தவர்..-தமிழிசை # அப்போ ராமதாஸ் மன்னிப்பு கேட்பாரா?


===================


16 பம்பை நதியில் பெண் பக்தர்கள் குளிக்கத் தடை-# பக்தர்கள் அல்லாத பெண்கள் குளிக்கலாமா?


==============


17 பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் பழைய 500 ரூபாய் நோட்டுகளை வாங்கமாட்டார்கள் 500,ரூ நோட்டு பேங்க்கில் தர மாட்டார்கள் சோடி சுத்தம்

==========

18 சட்ட விரோத பண பரிவர்த்தனை செய்ததாக 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் # ஏன் பர்மனன்ட்டா டிஸ்மிஸ் பண்ண முடியாதா?சட்ட சிக்கல் இருக்கா ?


===============

19 புதிய ரூ நோட்டுகள் பாதுகாப்புடன் அச்சிடப்படுவதால் வெளியாவதில் கால தாமதம் -அருண்ஜெட்லி # கள்ள நோட்டு நல்ல நோட்டைவிட வேகமா.வருது


==================

20 எதிர்பார்த்த கருப்பு பணம் டெபாசிட் ஆகவில்லை மத்திய அரசு கடும் அதிர்ச்சி.# திருடன் என்னைக்குமே போலீசை விட ஷார்ப்பா சிந்திப்பான்


=============

0 comments: