Friday, December 23, 2016

கறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலமா அறிவிக்கப்போறாங்களாம்

1   சமீபகாலமாக பறிமுதல் செய்யப்படும் கறுப்புப் பணத்தில், புதிய ரூபாய் நோட்டுகள் அதிகம் உள்ளது - சு சுவாமி # எப்பவும் திருடன் சுறுசுறுப்பா இருப்பான்


=================


சசிகலாவால் அதிமுகவை வழி நடத்த முடியும் - தீபக் # யார் சொன்னா? ஜெ வா?

இல்லை,சசிகலாவே தான் சொல்லச்சொன்னாங்க

=================

3


மர்மக் காய்ச்சலுக்கு இருவர் பலி… பொதுமக்கள் அச்சம் # தமிழகத்தில் இது மட்டுமா மர்மமா இருக்கு?


=================

4 பொது மக்கள் கவலைபட வேண்டாம்... ரிசர்வ் வங்கியிடம் போதிய பணம் கையிருப்பு உள்ளது: அருண் ஜேட்லி # உங்க கிட்டே இருக்கு, எங்க கிட்டே இல்லையே? ஏடிஎம் ல நீண்ட க்யூ வும் உள்ள்து

=

==============

5 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்-சண்முகம் # கறுப்புப்பணம் சிக்கினதில் தமிழகத்தை புரட்சி மாநிலமா அறிவிக்கப்போறாங்களாம்


======================


6  

என்னுடைய, 15 லட்சம் ரூபாய் எங்கே?மோடி பதில் சொல்லனும் -ராகுல் # 2 ஜி யில் அரசுக்கு நஷ்டம் ஆன ஒண்னேமுக்கால் லட்சம் கோடி எங்கே?


====================


திராவிட இயக்கமே ஸ்டாலின்தான்!’

– நாஞ்சில் சம்பத்
# நரம்பில்லாத நாக்கு இல்லீங்களா?பதவிக்காக எப்டி வேணா பேசும்

===============

8 ரூ. 2000க்குமேல் அனாமதேய நன்கொடை பெற கட்சிகளுக்கு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை -1999 ரூ வீதம் டெய்லி கொடுத்தா இன்னா செய்வீங்க?

=============

9 ஜெ பாரத ரத்னா விருதுக்குத்தகுதியானவர் இல்லை - அன்புமணி # பாரதத்தில் ஏகப்பட்ட கடைல ரத்னம் வைரம் வைடூரியம் வாங்கி இருக்காரே போதாதா?


================

10 இனி என்னிடம் கையெழுத்துக்காக வைக்கும் அனைத்து அரசாணைகளும் தமிழில்தான் இருக்கவேண்டும்!-OPS # ஏன்னா சசிகலாவுக்கு (ம்) இங்க்லீஷ் தெரியாது


=============11 அதிமுகவில் நான் நீடிக்கிறேன்- ஆயுர்வேத சிகிச்சையில் இருக்கிறேன்: நாஞ்சில் சம்பத் # அறிவாலயத்தில்னு அரசல் புரசல் நியூஸ் வருதே===============12 தமிழக தலைமைச் செயலாளர் வீட்டில் ஐடி ரெய்டு நடப்பது தமிழகத்திற்கு தலைகுனிவு- ஸ்டாலின் ஊழலுக்குப்பின் இதுதான் பெரிய கெட்ட பேரு================

13 ஆண்டுக்கு, 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக, மோடி அளித்த வாக்குறுதி என்னவாயிற்று?-  ராகுல் # வேலை செஞ்சதுக்கான சம்பளத்தையே எடுக்க முடியலை
==================

14 மாணவர்கள், அரசியலுக்கு வந்தால், வரவேற்பேன்-ஸ்டாலின்: ,ஆனா அரசியலில் இருப்போர் பெரும்பாலும் விவகார”மானவர்கள்”,செட் ஆகுமா?
====================15ஒரு தொண்டன் எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாக திகழ்பவர், ஓபிஎஸ்; அவரையே, நாங்கள் பின் பற்றுகிறோம்- உதயகுமார் # அப்போ ஓபிஎஸ் ஜெயிலுக்குப்போனா  இவர்தான் சிஎம்மா?


=======================

16  இந்திய பொருளாதாரத்தை சீர் செய்ய, பிரதமர் மோடி, நரசிம்ம அவதாரம் எடுத்துள்ளார்.-பொன்.ராதா # ஆனா நரசிம்மர் மடில வதை படுவது ஏழை ஜனங்க தானே?


==================


17  ரூபாய்  விவகார பிரச்னைக்கு தீர்வு காண தின மும்  2  மணி நேரம் சிந்திக்கிறேன்; . ஆனாலும், தீர்வு காண முடியவில்லை.--
 சந்திரபாபு நாயுடு # 2 1/2 மணி நேரம் செலவு பண்ணி பிச்சைக்காரன் படம் பாருங்க


=================


18 மின்னணு முறை சம்பளம்: வருகிறது அவசர சட்டம் # அப்டியே ஏடிஎம் மில் வர்சைல நிக்க லீவும் குடுங்க


===================

19 அ.தி.மு.க.,வில் நடக்கும் பலே கூத்து; வைகோ ‛இன்'; நாஞ்சில் ‛அவுட்'! # வைகோ போன இடம் இதுவரை உருப்பட்டதில்லையே? திமுக , தேமுதிக


==================


20 சசிகலா முன் கைகட்டி நின்ற துணை வேந்தர்கள் : கவர்னர் விசாரிக்க கோரிக்கை # ஹாஸ்பிடல் போனப்ப கவர்னரையே பார்க்கவிடலை,அதையும் விசாரிக்கவும்

==================

0 comments: