Wednesday, February 12, 2014

பாஜக கூட்டணி யோசனைக்கு முழுக்கு: விஜயகாந்த் விலகிக் கொண்டது பற்றிய பின்னணி தகவல்கள்



தொகுதிப் பங்கீடு உடன்பாடு எட்டப்படாததாலேயே பாஜக கூட்டணியில் சேர வேண்டாமென்று, தேமுதிக முடிவெடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பாஜக தலைமையிலான கூட்டணியில், மதிமுக, ஐஜேகே, கொமதேக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்துள்ளன. பாமக-வின் நிலை இன்னும் சரியாகத் தெரியவில்லை, தேமுதிக பாஜக பாதையிலிருந்து விலகி காங்கிரஸ் திசையில் நகர ஆரம்பித்திருக்கிறது. பாஜக கூட்டணியில் தேமுதிக இடம் பெறாமல் போனதற்கான காரணங்கள் குறித்து தேமுதிக, பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்:



பாஜக அணியில் மதிமுக-வுக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை கேட்கிறார்கள். கொமதேக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது என தொகுதிப் பங்கீடு பேச்சு நடந்துள்ளது.




இதுதவிர, பாமகவுக்கு ஏற்கெனவே வேட் பாளர் அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் சாதி அமைப்புகளுக்கு மூன்று முதல் ஐந்து தொகுதிகளும் கேட்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் மட்டுமே 33 தொகுதிகளை கேட்கின்றன. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பாஜக 10 இடங்களில் கண்டிப்பாக போட்டியிட முடிவு செய்துள்ளது.




இந்நிலையில், பாஜக கூட்டணிக்கு வருவதாக இருந்தால் எங்களுக்கு 15 தொகுதிகள் வேண்டும் என தேமுதிக கேட்டிருக்கிறது. மேலும், தேமுதிகவே கூட்டணிக்கு தலைமை ஏற்கும், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக அலுவலகத்துக்கு, பாஜக மேலிடத் தலைவர்கள் உட்பட நிர்வாகிகள் வர வேண்டும், தேர்தல் பிரச்சார செலவுகளை பாஜகவே கவனித்துக் கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட நிபந்தனைகளை தேமுதிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.



கூட்டணிக்கு தலைமை தேமுதிக என்பதை பாஜக ஏற்றுக் கொண்டாலும் அவர்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால், பாமக இல்லாத கூட்டணியை அமைக்கலாம் என்று தேமுதிக தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.




இந்தக் கோரிக்கையை பாஜக நிராகரித்துவிட்டதாகத் தெரிகிறது. மாறாக தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள தொகுதிகளை பாஜக, மதிமுக, பாமக உள்ளிட்ட இதரக் கட்சிகள் பிரித்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்திருக்கிறது பாஜக.





ஆனால், இதை தேமுதிக ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், சென்னை வந்த மோடி வைகோ-வை சந்திக்க நேரம் ஒதுக்கினார். ஆனால், வைகோ-வைக் காட்டிலும் வலுவான கட்சியை நடத்தும் விஜயகாந்தை அவர் கண்டுகொள்ளவில்லை. இதுவும் விஜயகாந்துக்கு வருத்தம். இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்து விட்டுத்தான் விஜயகாந்த் பிரதமரைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.








readers  views




  •  Vivek Vivek from Richmond
    ஊழலுக்கு எதிராக ஒரு பெரிய மாநாடு நடத்தி முடித்த கையோடு ஊழல் கட்சியினோடு கூட்டணி யா...? கேப்டன் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறார்,,,
    about 12 hours ago ·   (101) ·   (16) ·  reply (0)
    VENKATACHALAM Mani · ரோஹித் · Mannan Mannen · A.SESHAGIRI · regunathan  Up Voted Vivek Vivek's comment
    Ravindren. ரவீந்திரன் · nadeer · s.maria Pandian  Down Voted Vivek Vivek's comment
    •  daan 
      இது இன்றைய இந்தியாவின் தலை எழுத்து. அதை நாம், அந்த குறிப்பிட்ட ஊழல் வாதிகளை புறந்தள்ள வேண்டுமே தவிர, ஒட்டு மொத்த கட்சியையு அல்ல, ஊழல் எனபது கட்சியின் கொள்கையாக இல்லாமல் இருக்கும் வரை. அவ்வகையில், விஜயகாந்த் செய்வது ஒன்றும் தவறாக தெரிய வில்லை.
      about 12 hours ago ·   (4) ·   (22) ·  reply (0)
      Ravindren. ரவீந்திரன்  Up Voted daan 's comment
      Mannan Mannen · Mahesh  Down Voted daan 's comment
      • காங்கிரசுடன் போனால் "நிதி உதவியும்" கிடைக்கும் மற்றும் இவர் எடுத்தது போக மீதி உள்ள தொகுதிகளை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும் . ஆனால் மக்கள் ஓட்டுப்போட மாட்டார்கள் . DMDK தானே தனக்கு அடித்துக்கொள்ளும் சாவுமணி இது. தமிழக கட்சிகள் அனைத்தும் உதறிவிட்ட நிலையில் தோற்கும் தேர்தலுக்கு அதுவும் போயும் போயும் காங்கிரசுடன் சேர விஜயகாந்த் இவ்வளவு பில்டப் கொடுத்திருக்க வேண்டாம் !
        about 12 hours ago ·   (15) ·   (2) ·  reply (0)
        Mannan Mannen  Up Voted Vijayaraghavan 's comment
        Ravindren. ரவீந்திரன்  Down Voted Vijayaraghavan 's comment
        •  suresh 
          காசே தான் கடவுளடா என்று நினைத்து காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் தேமுதிகவின் அரசியல் மற்றும் வாழ்கை அம்போ தான் . ஒரு சிறிதும் கொள்கை அற்ற இந்த கூட்டணிக்கு பாடம் புகட்ட அனைத்து தமிழர்களும் பிஜேபி கூட்டணிக்கு வாக்களித்து பாரதம் முன்னேற வழி வகுக்க வேண்டும்.
          about 11 hours ago ·   (9) ·   (17) ·  reply (0)
          Mannan Mannen · BooBoo · neutral  Up Voted suresh 's comment
          Ravindren. ரவீந்திரன் · s.maria Pandian  Down Voted suresh 's comment
          •  mitr from Madurai
            விஜி ஒரு மிகச்சிறந்த மாட்டு வியாபாரி தான்!
            about 11 hours ago ·   (9) ·   (5) ·  reply (0)
            Mannan Mannen · manikandan · mitr  Up Voted mitr 's comment
            s.maria Pandian  Down Voted mitr 's comment
            •  balasubramanian from Madurai
              இதனை நாள் வளர்ந்த வளர்ச்சி அழிவை நோக்கி அவசரமாக செல்கிறது
              about 11 hours ago ·   (3) ·   (1) ·  reply (0)
              Mannan Mannen  Up Voted balasubramanian 's comment
              •  Kulasekar Erk Former Indian Bank Branch Manager. at IndianBankfrom Sunnyvale
                பெரிய பெட்டிகளும் நிறைய தொகுதிகளும் தேவை. நாட்டைசுரண்டியவர் களால்தான் முடியும் என்று பிரதமரை நாட உள்ளார். அவரது முயற்சி வெகு எளிதாக முடியும். கொள்கை அடிப்படையில் கூட்டணி அந்தக்காலம். கொள்ளை அடிப்படையில் தானே இந்தக்காலக் கூட்டணி. தேமுதிக, காங்கிரஸ், திமுக சிறுசிறு சாதிமதக் கட்சிகள் கூட்டணியாக வும் இது வளர வாய்ப்புகள் அதிகம்.
                about 11 hours ago ·   (9) ·   (1) ·  reply (0)
                Mannan Mannen · AJ  Up Voted Kulasekar Erk's comment
                • விஜயகாந்திற்கு எதிர் கட்சி தலைவர் என்ற பதவி வர காரணமாக இருந்த ஜெயலலிதாவிடமே மோதல் போக்கை கடைபிடித்து நாடு ரோட்டில் உள்ளார்.அவர் செல்லும் கூட்டணி செல்லாத காசாகி விடும். மூழ்கும் கப்பலுக்கு கேப்டன் ஆகப்போகிறார்.
                  about 11 hours ago ·   (6) ·   (6) ·  reply (0)
                  •  Janardhanan jana from Stockholm
                    கேப்டனுக்கு 7 1/2 ஆரம்பம்!!
                    about 11 hours ago ·   (9) ·   (1) ·  reply (0)
                    Mannan Mannen  Up Voted Janardhanan jana's comment
                    •  Nirai Mathi at My Familyfrom Chennai
                      இந்தத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதன்மூலம் தனது வோட்டு வங்கியின் பலம் தெரியும் என்று தேமுதிக தப்புக்கணக்குப் போட்டிருக்கிறது. நாட்டில் மோடி அலை வீசிக்கொண்டிருக்கிறது. தேமுதிக வின் தொண்டர்கள் கூட தங்களது வாக்குகளை வீணாக்க விரும்ப மாட்டார்கள். நிச்சயம் கேப்டனின் வாக்கு வங்கியின் பலம் இந்தத் தேர்தலில் 10% இல் இருந்து 3% ஆகக் குறையப் போவது சர்வ நிச்சயம்.
                      about 10 hours ago ·   (7) ·   (5) ·  reply (0)
                      Janardhanan jana · mitr · Mannan Mannen  Up Voted Nirai Mathi's comment
                      Ravindren. ரவீந்திரன்  Down Voted Nirai Mathi's comment
                      •  Raj 
                        ீண்டும் திமுக காங்கிரஸ் கூட்டணி வந்தாலும் ஆச்சர்யம் இல்லை. பாஜக மேலே சொன்ன கட்சிகள் கூட்டணி இரணடாவது. அதிமுக கம்யூனிஸ்ட் 3வது கூட்டணி. பாமக என்ன சொன்னாலும் இப்பொழுது இருக்கும் நிலைமையில் ஏதாவது ஒரு திராவிட கட்சியுடோ அல்லது பாமக காங்கிரஸ் ( காங்கிரஸ் திமுக வுடன் சேராத பட்சத்தில் ) 4வது கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக நான் நினைக்கிறன்
                        about 10 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                        •  kutty from Karaikal
                          இடம் கிடைத்தால் போதுனு நினைசிடாரு போல கேப்டன்.....காங்கிரஸ் கூட சேர்ந்தா அவருக்கு தன்னோட கட்சிகாரங்க வோட்டு கூட கிடைக்காது....
                          about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                          Mannan Mannen  Up Voted kutty 's comment
                          •  ramesh from Chennai
                            தமிழ்நாட்டை பொருத்தவரை ADMK வெற்றி பெற போவது உறுதி என்றே தெரிகிறது.. PMK இருப்பதால் BJP தோற்கும். காங்கிரஸ் இருப்பதால் DMDK தோற்கும். DMK பற்றி சொல்லவே வேண்டாம்.. ஆகவே ADMK கண்டிப்பா வெற்றி பெரும்..
                            about 10 hours ago ·   (3) ·   (5) ·  reply (1)
                            •  pandi from Erode
                              admk ஆதிக்க நம்பிக்கை அதன் தோல்வி முதல் படி
                              about 9 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
                            •  kongan 
                              எது எப்படியோ தமிழ் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி. சனியன் விட்டது என்று BJP யும் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்
                              about 10 hours ago ·   (1) ·   (0) ·  reply (0)
                              •  s.maria Pandian at engineerfrom Chennai
                                ஊழலுக்கு எதிரான கட்சி என்றால் அது ஆம் ஆத்மி மட்டுமே....மற்ற எந்த கட்சியும் ஊழல் கட்சியே...ஆம் ஆத்மி எந்த கட்சிகளோடும் கூட்டணி வைப்பதில்லை...விஜயகாந்தின் பேச்சு ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்கும்..அதை பிஜேபி விரும்பவில்லை..வைகோவை கூட கலைஞரை அதிகம் விமர்சிக்க கூடாது என்னும் நிபந்தனையிலெயெ சேர்த்திருப்பதாக கேள்வி..விஜயகாந்த்-பாமக இருவரும் ஓரணியில் இருக்கும் வாய்ப்பும் இல்லை....எனவே பிஜேபி ...இப்போது சீ..சீ. இந்த பழம் வேண்டாம் என்னும் வகையில் ஒதுங்குகிறது ......
                                about 10 hours ago ·   (8) ·   (2) ·  reply (1)
                                Mohammed Nayeem  Up Voted s.maria Pandian's comment
                                •  D.Anandaraj from Mumbai
                                  இந்தியாவையே விலை பேசியுள்ள கட்சி ஆம் ஆத்மி .ஊழல் பேரை சொல்லி தொழிலை ஒழித்து இறக்குமதிக்கு வித்திடுகிறார்கள். அவரை நம்பி இந்தியாவை அடகு வைக்கிறோம். வேலை வாய்ப்பும் படிப்பும் தான் தேவை. ஊழலை ஒழிப்பது உலகத்தை சம படுத்திகிறோம், ஏழைகளை ஒழிக்கிறோம் என்று கூறி ஏமாற்றுவதே
                                  about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                •  s.maria Pandian at engineerfrom Chennai
                                  போற போக்கை பாத்தால் வைகோவுக்கு அதிர்ஷ்ட மழைதான் ..20 தொகுதி கூட கிடைக்கும் போல...இனி வேட்பாளரைதான் அவர் தேடவேண்டும்....
                                  about 10 hours ago ·   (2) ·   (2) ·  reply (0)
                                  •  Thamizhan from Chennai
                                    ந்த தேர்தலில் ADMK தான் பெருவாரியாக வெற்றி பெரும். ADMK மேல் யாருக்கும் அதிருப்தி இருப்பது போல் தெரியவில்லை. ஆனால், மற்ற கட்சிகளின் நிலைமை தலை கீழ்.
                                    about 10 hours ago ·   (0) ·   (2) ·  reply (0)
                                    s.maria Pandian  Down Voted Thamizhan 's comment
                                    •  raajaa from Sharjah
                                      நாளையே இவர் பிஜேபியுடன் கூட்டணி என்று அறிவித்து விட்டால், மகாத்மா ஆகிவிடுவார் நம்முடைய கருப்பு எம்.ஜி.ஆர். யாருக்கும் வெட்கமில்லை!
                                      about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (2)
                                      •  annamalai from Vellore
                                        திமுகவிற்கு கூஜா தூக்கும் ஷார்ஜா நாட்டு ராஜாவின் விருப்பபடியே அவர் (2G புகழ்) காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும்போதுதான் அவர் மகாத்மா ஆவார். ஏனென்றால் "குடிப்பது ஒன்றும் தவறில்லை" என்று இந்த நவீன மகாத்மா சொன்னாரில்லையா? பிஜேபி கூட்டணியில் 15 தொகுதி வேண்டுமாம்! ஏன் நாற்பதுமே கேளுங்களேன்! பிரசார செலவுகளை பிஜேபி பார்த்து கொள்ளவேண்டுமாம்! நீ அரிசி எடுத்து வா நான் உமி எடுத்து வருகிறேன் நாம் இருவரும் சேர்ந்து ஊதி ஊதி சாப்பிடலாம் என்று ஒருவன் சொன்னானாம்! அது போல இருக்கிறது இது. இவர் அலுவலகத்திற்கு மேலிட தலைவர்கள் கூட பேச வரவேண்டுமாம்! இவர் மன்மோகன் சிங்கை கூட இவர் அலுவலகத்திற்கு வர சொல்லிருக்கலாமே! சிங்கே இருக்கும் காங்கிரஸ் காரர்களுடன் பேச விருப்பமில்லையா? மௌன குருவாக உள்ள M M Singh உடன் இவர் பேச போகிறாராம்.பேசட்டும் பேசட்டும் இவர் கட்சிக்கு 38 ம் காங்கிரஸ் க்கு 2 என்று பேசினாலும் அவர்கள் OK சொல்வார்கள்.
                                        about 7 hours ago ·   (5) ·   (0) ·  reply (0)
                                        suresh · Janardhanan jana · Ravikumar  Up Voted annamalai 's comment
                                        •  suresh 
                                          நாளையே பிஜேபி உடன் கூட்டணி என்றால் இவர் மகாத்மா ஆகி விட மாட்டார். ஆனால் இதுவரை சொன்ன படியே( oolal edhirpu ) நடந்தார் என்று ஒரு நம்பக தன்மை இருக்கும். அதை புரிந்து கொள்வோமாக.
                                          about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (1)
                                          •  raajaa from Sharjah
                                            இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்சிகளிலேயே புனிதமான, ஊழலற்ற, மதசார்பற்ற, மனிதநேயமிக்க, பெரு முதலாளிகளைப் புறக்கணித்து பாட்டாளி மக்களின் உயர்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட கட்சி பா.ஜ.க மட்டும்தான் என்று நம்புவோமாக! ஆகையால், பிஜேபியுடன் கூட்டணி வைப்பவர்களின் கடந்த காலப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப் பட்டு, அவர்கள் பரிசுத்தர்களாகும் பாக்கியம் பெறுவார்கள் என்றும் நம்புவோமாக!
                                            about 8 hours ago ·   (3) ·   (1) ·  reply (1)
                                            Raj  Up Voted raajaa 's comment
                                            •  suresh 
                                              இப்போது இருக்கும் கட்சிகளில் எந்த கட்சி நல்லது , மக்களுக்கு நல்லது செய்யும் என்று தான் பார்க்க வேண்டும்.இந்த அளவு கோலின் படி பிஜேபி தான் எல்லா விதத்திலும் நல்ல, முன்னணியில் உள்ளது. உங்களை யாரும் பிஜேபி தான் புனிதமான, ஊழலற்ற மதசரர்பற்ற , etc கட்சி என்று நம்ப சொல்லவில்லை.ஆகையால் தப்பு தப்பாக நினைத்து, தவறு செய்யாமல் , இந்த முறை நீங்களும் பிஜேபி க்கு வாக்கு அளித்து சரியான செயல் புரியவும்.உங்கள் நண்பர்களுக்கும் அதை புரிய வைக்கவும் அவர்களும் உங்களை போல் இருந்தால்.
                                              about 7 hours ago ·   (2) ·   (0) ·  reply (0)
                                              Janardhanan jana  Up Voted suresh 's comment
                                        • காங்கிரஸ் விஜயகாந்த் கருணா திருமா முஸ்லிம் லீக் மானிட நேய கட்சி புதிய தமிழகம் = 5% 5% 30% 5% 10% 5%= 60% 40 தொகுதியும், இந்த கூட்டணிக்குதான். இதுதான் வெற்றி கூட்டணி. ராகுல்தான் பிரதம மந்திரி. சந்தேகமே இல்லை.
                                          about 9 hours ago ·   (1) ·   (7) ·  reply (3)
                                          Santhappan Santhappan · BHARATH  Down Voted gopalasamy 's comment
                                          •  suresh 
                                            0 0 5 0 0 0 0= 5
                                            about 8 hours ago ·   (1) ·   (1) ·  reply (0)
                                            Prassannasundhar  Up Voted suresh 's comment
                                            •  hariharan from Namakkal
                                              அப்பா நிதி மந்திரி நீங்களா
                                              about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                              •  srinivasan Meiyappan at Rollstudfrom Chennai
                                                தமிழ்நாட்டின் அரசியல்வாதியை புரிந்துகொண்ட முதல் நபர் நீங்கள் தான் ,
                                                about 5 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                              •  Koushik 
                                                இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது , விஜயகாந்த் மக்களுக்கு சேவை செய்யா அரசியலுக்கு வரவில்லை. பணம் சம்பாதித்து அவரது மகன்களுக்கு மேலும் மச்சானுக்கு சேவை செய்ய வந்துருகிறார். படம் நடித்து மில்லியனில் சம்பாரித்த இவர் இப்போ பில்லியனில் சம்பாரிக்க பார்க்கிறார். இது இவருக்கு முனேற்றம் தான் அனல் மக்களுக்கு ஊஊஊஊ தான் :) நடத்துங்க உங்க நாடகத்த. தமிழன் இளிச்சவாயன் உனக்கு
                                                about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0)
                                                •  Mohan Ramachandran at I am doing my own businessfrom Chennai
                                                  இந்திய அரசியலுக்கு/நாட்டிற்க்கு மிகவும் தொடர்புள்ள எண் .1707-ஓரங்க சீப் மறைந்த வருடம் முகலாய சாம்ராஜ்யம் வீழ துவங்கிய வருடம் .1757-ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனி battle of Palassyil பெங்கால் நவாப் சிராஜ் உதொலாவை Robert Clive தலைமையில் வீழ்த்தி ஆங்கிலேய அரசுக்கு அஸ்திவாரம் போட்ட வருடம் .1857 ல் முதல் சுதந்திர போர் முகலாய மன்னர் பகதூர் ஷா சப்பார் தலைமையில் நிகழ்ந்த வருடம் .1947 இந்திய சுதந்திரம் ஆன ஆண்டு .1957 முதல் முதலாக சிகப்பு தோழர்கள் காங்கிரசுக்கு மாற்றாக கேரளாவில் தடம் பதித்த வருடம் .1967 ஏழு கூட்டணி வைத்து தி மு க தமிழ் நாட்டில் ஆட்சியை பிடித்த வருடம் .1977 MGR தமிழ் நாட்டில் .முதல் முதலாக காங்கிரஸ் மைய ஆட்சியை ஜனதா கட்சிக்கு பறி கொடுத்த வருடம் .பகுத்தறிவு கட்சி இதை நினைத்து ஆருடம் பார்த்து ஏழு கட்சி கூட்டணியை 2014 ல் 16 ம் தேதில் அட்சாரம் போடுது என்று நினைக்கிறேன் .ஆனால் 1967 ல் ஆரம்பித்த கூட்டணி 2014 ல் வீழபோகுது . இப்படி அமைந்தால் இதில் விஷேச அம்சம் என்னவென்றால் காங்கிரேசை வீழ்த்த துவங்கிய கூட்டணி காங்கிரேசை மீண்டும் ஆட்சி அமைக்க அமையுமா உதவுமா ? என்பதுதான் .
                                                  about 8 hours ago ·   (0) ·   (1) ·  reply (0)
                                                  •  Ravindren. ரவீந்திரன் at Indian National Congressfrom Chennai
                                                    கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் ஓட்டு உள்ள பாஜகவிற்கு இதெல்லாம் ஓவர் பில்டப். மே மாத கடைசியில் மோடி சுனாமியுடைய லட்சணத்தை பார்க்கதானே போறோம்.அப்போது ஊடகங்கள் என்ன சொல்லி சமாளிக்கும் என்று பார்போம்.
                                                    about 8 hours ago ·   (1) ·   (2) ·  reply (0)





                                                  thanx- the hind
                                                  u

                                                  1 comments:

                                                  Devendran said...

                                                  Vijayakanth drinks for Rs.12,000/-per time ( We don't know how many times in a single day.)He
                                                  needs money for drinks expenses. Thats why he is moving towards Congress . Already DMK is waiting behind the scene. So finally all are going to donkey dance. (!)